Tuesday, 2 September 2014

Tagged Under: ,

கத்தி படத்துக்காக தன் விளக்கத்தை கோர்ட்டுக்கு அனுப்பிய ஏ.ஆர். முருகதாஸ் !!

By: Unknown On: 20:49
  • Share The Gag
  • கத்தி படத்தை சுற்றி பல பிரச்சனை சூழந்து கொண்டாலும் மனம் தளராமல் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ்.

    இந்நிலையில் சமீபத்தில் மீஞ்சூர் கோபி என்ற உதவி இயக்குனர் கத்தி படத்தின் கதை என்னுடையது என்றும் இக்கதையை நான் ஏ.ஆர். முருகதாஸுடம் இரண்டு வருடத்துக்கு முன்பு சொல்லியிருந்தேன்.

    தற்போது எனக்கு தெரியாமல் என் கதையை படமாக எடுக்கின்றனர், எனவே எனக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு பதிந்துள்ளார். மீஞ்சூர் கோபி சார்பாக அவர் எழுதிய முழு கதையும் நீதிமன்றத்தில் தரப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் தன் விளக்கத்தை நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளார், அதில் தற்போது வழக்கு தொடர்ந்து இருக்கும் கத்தி படத்தின் கதை பற்றி எனக்கு எந்த வித பயமும் இல்லை.

    ஏனென்றால் எனக்கு மீஞ்சூர் கோபி என்பவரை யார் என்று தெரியாது என்றும் இதுக்கு முன்பு நான் அவரை பார்த்தது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது இந்த வழக்கின் அடுத்த கட்ட விவாதம் வருகிற 16ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    0 comments:

    Post a Comment