Saturday, 6 September 2014

பேஸ்புக், டிவிட்டரை வெறுக்கும் பிரபல இயக்குனர்

By: Unknown On: 19:28
  • Share The Gag
  • ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமானவை.

    டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் போன்ற படங்களை இயக்கி இப்படியும் படங்களை இயக்க முடியும் என்று தெரிவித்தவர்.

    நவீன தொழில் நுட்பங்களை திரைப்படங்களில் புகுத்துவதற்கு முன் உதாரணமாக செயல்பட்ட இவருக்கு பேஸ்புக், டிவிட்டர் போன்ற தொழில்நுட்ப வலைதளங்கள் எல்லாம் பிடிக்காதாம்.

    இதுபற்றி அவர் கூறுகையில், தொழில் நுட்பங்களை நமக்கு அடிமையாக்க வேண்டுமே தவிர, நாம், அதற்கு அடிமையாக கூடாது. இப்படி சமூக வலைதளங்களில் மூழ்கி நேரத்தை வீணடிப்பதை விட, மனிதனாக பிறக்காமலேயே இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்.

    தண்ணீரை சுத்தப்படுத்தும் செம்பு, இனி செம்பு சொம்புல தண்ணீ குடிங்க...

    By: Unknown On: 19:08
  • Share The Gag
  • பணத்தை வாரி இறைச்சு, தண்ணி சுத்தம் செய்யற கருவிகள் வாங்கறோம்.
    அது ரிப்பேர் ஆக ஒரே பிரச்சனை தான்.

    ஏன் நாம நமது முன்னோர்கள் செஞ்சத இப்படி அலட்சியம் பண்ணிட்டோம்.
    ஆஸ்திரேலியாவிலிருந்து ஆய்வுக்கு வந்துள்ள 3 பேர்களின் அறிக்கைய பாருங்க!

    *உயிர்காக்கும் செம்பு பாத்திரங்கள்**

    செம்பு டம்பளர், செம்பு குடம் அப்படின்னு நாம நீரை  செம்புல வெச்சிருந்தா,
    நீரில் இருக்கிற டைபாய்டு, காலரா, வயிற்று போக்கு போன்ற
    வியாதிகளை தரும் பாக்டீரியாக்களை இந்த செம்பு சாகடிச்சிடுமாம்.

    அந்த நாளில் நம் முன்னோர்கள் நீரை இதிலே தான் பிடித்து வைத்திருந்தனர்.

    * செம்பு தாழ்பாள், கதவு பிடி**

    அதே போல, கிருமிகள் அதிகம் வசிக்கும் இடம் கதவுதான். செம்பு தாழ்பாள், செம்பு கதவு பிடி தான்
    நம்மை பல நோய்களிலிருந்தும் காப்பாற்றும் குணம் கொண்டது.
    செம்பு பாத்திரத்தில் செம்பு 95 சதவீதம் இருக்க வேண்டும் 5 சதவீதம் துத்த நாகம் இருக்கலாம்.
    கலப்படம் இருக்க கூடாது. ‘கலப்படம் இல்லாத செம்பு பாத்திரத்தில்தான் கிருமிகள் வசிக்காது’
    என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.
    செம்புல தண்ணீர் பிடிச்சு, 24 மணி நேரம் கழிச்சு அந்த தண்ணீய குடிக்க வேண்டும்.

    விஜய் சேதிபதி-கார்த்தி மோதல்!

    By: Unknown On: 15:22
  • Share The Gag
  • தமிழ் சினிமாவில் என்றும் தரமான படங்களை தருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது 5 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். மேலும் 2 படங்கள் ரிலிஸ்க்கு ரெடியாக இருக்கிறது.

    இந்த படங்களில் மூலம் தான் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க போராடி கொண்டிருக்கிறார். அதேபோல் கார்த்தியும் அவர் இழந்த மார்க்கெட்டை பிடிக்க மெட்ராஸ் படத்தின் மூலம் களம் இறங்க உள்ளார்.

    இதனால் மெட்ராஸ் பெரும்பாலும் சோலோ ரிலிஸாக(செப்டம்பர் 29) தான் இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.

    அவரது நடிப்பில் வன்மம் படமும் அன்றைய தினமே ரிலிஸாக உள்ளது. யார் போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    காட்டு அத்திப்பழத்தின் மகிமை...

    By: Unknown On: 14:38
  • Share The Gag
  • புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக ‘காட்டு அத்திப்பழம்‘ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக உள்ளதாக ஆராச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.

    புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக்கும், ஆராச்சியாளர்களுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது.

    புற்றுநோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்,பல் ஈறுகள், வயிறு(குடல்), மார்ப்பகம், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ளது. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட நிலையில் தாக்குவதும் உண்டு.

    புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி உள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில் சக்தி வாந்த கேன்சர் கொல்லியாக ‘காட்டு ஆத்தாப்பழம்‘ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக உள்ளதாக ஆராச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது. இது பலாப்பழம் போல முட்கள் கொண்டுள்ளதால் பலா ஆத்தா என்றும் அழைக்கப்படுகிறது.

    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

    அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் இ, வைட்டமின் ஆ1, வைட்டமின் ஆ2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான வாசனையுடையதாக இருக்கும்.

    பக்கவிளைவுகள் இல்லை

    காட்டு ஆத்தா பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையானகுமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான ’கீமோதெரபி’ போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.

    நோய் எதிர்ப்பு சக்தி

    இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. புற்றுநோயை மட்டுமல்லாது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது. அதனால் மற்ற கொடிய நோய்களையும் எதிர்க்கிறது. இது அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.

    இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செகிறது. நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது. பூஞ்சைத் தொற்று என்று சொல்லப்படும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
    மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.

    தங்க 'புஷ்பம்' செம்பருத்தி பூ இய‌ற்கை வைத்தியம்

    By: Unknown On: 11:16
  • Share The Gag
  •  தங்க 'புஷ்பம்' செம்பருத்தி

    இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள்தான் எத்தனை அழகு... நறுமணம் கொண்ட இவை கண்களுக்கு விருந்தாக மட்டுமல்ல... மருந்தாகவும் பயன்படுகின்றன. கடந்த இதழில் மல்லிகையின் குணங்களை அறிந்துகொண்டோம்.

    வீட்டின் முன்பும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகு சேர்க்கும் செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்களைப் பற்றி இந்த இதழில் அறிந்து கொள்வோம்.

    செம்பருத்திப் பூவை சீனாவும் இந்தியாவும் தங்கள் நாட்டு பூ என வருணிக்கின்றன. ஆசியாவே இதன் பிறப்பிடம். மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்திதான். இந்தப் பூக்களின் நிறத்தையும், அடுக்கையும் வைத்து பலவகைகளாக பிரித்துள்ளனர்.

    சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர்.

    இதனை செம்பரத்தை, சப்பாத்து எனவும் அழைக்கின்றனர்.

    Tamil : Sembaruthi

    English : Shoe flower

    Telugu : Javapushpamu

    Sanskrit : Japa

    Malayalam : Chemparutti-pova

    Botanical name : Hibiscus rosa-sinensis

    செம்பரத்தை மேகவெட்டை தீராப் பிரமியொடு

    வம்பிரத்த வெள்ளை வழுவழுப்பும்-வெம்பும்

    பெரும்பாடு ரத்தபித்த பேதம் அகற்றும்

    கரும்பா மொழிமயிலே காண்

    - அகத்தியர் குணபாடம்

    செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.

    வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்க

    அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குகின்றன. இதனால் வாயிலும் புண்கள் உருவாகின்றன.

    இப்படி வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.

    பெண்களுக்கு

    கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து.

    10 செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும்கொடுத்துவந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.

    இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.

    சிலருக்கு மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றில் அதிக வலி உண்டாகும். மேலும் அதிக இரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு மயக்கம், தலைவலி ஏற்படும். இவர்கள் செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாக காய்ச்சி அருந்தி வந்தால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகள் குறையும்.

    சில பெண்கள் வெள்ளைப் படுதலால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த வெள்ளைப் படுதல் குணமாக செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

    தலைமுடி நீண்டு வளர

    சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.

    இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

    செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

    செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

    நீர் சுருக்கு நீங்க

    நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது.

    ‛பட்டைய கெளப்பணும் பாண்டியா' - முன்பாதி பட்டைய கெளப்புகிறது - பின்பாதி கொட்டாவியை கிளப்புகிறது!

    By: Unknown On: 10:29
  • Share The Gag
  • எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில், ‛பரோட்டா சூரி' துணையுடன் விதார்த், காமெடியில் கெளப்ப நினைத்திருக்கும் படம் தான் ‛‛பட்டைய கெளப்பணும் பாண்டியா'' படம் மொத்தமும்!

    ஒற்றை, ஓட்டை மினி பஸ்சை வைத்துக் கொண்டு சொகுசு ‛ஆ'மினி பஸ்களுக்கு சொந்தக்காரராக துடிக்கும் பஸ் முதலாளி இமான் அண்ணாச்சி!அவரது மினி பஸ்சில் முறையே டிரைவராகவும், கண்டக்டராகவும் வேலை பார்க்கும் ‛காமெடி' சகோதரர்கள் நாயகர் விதார்த்தும், ‛பரோட்டா' சூரியும்!

    பழனிக்கும் - பாப்பம்பட்டிக்கும் டெய்லி நான்கு டிரிப் அடிக்கும் அந்த மினி பஸ், தினமும் இரண்டு டிரிபிலாவது பஞ்சர், வண்டி பிரேக் டவுன், டீசல் இல்லை, கூட்டமில்லை... என்று ரோட்டோரம் நின்று விடுவது ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் டிரைவர் விதார்த்தின் சின்சியர் காதலுக்காகவும், நர்ஸ் காதலிக்காவும், காத்திருந்து காத்திருந்து காலதாமதமாக, ‛ட்ரிப்' அடிப்பதாலும், தினமும் கலெக்ஷன் காசை விட செலவு ஜாஸ்தியாகி இமான் அண்ணாச்சியின் ‛ஆ'மினி பஸ் கனவில் மண் அள்ளிப்போடுகிறது அந்த மினி பஸ்!

    இந்நிலையில் டிரைவர் விதார்த் விழுந்து விழுந்து... காதலித்தாலும் திரும்பிக்கூட பார்க்க மறுக்கிறார் கதாநாயகி கண்மணி எனும் மனீஷா யாதவ். காரணம் அவரது ‛ஆஸ்துமா' அம்மா, கண் தெரியாதா அக்கா எனும் தமிழ் சினிமாவின் வழக்கமான டிராஜிடி பேமிலி பேக்ரவுண்ட்! அப்புறம் அப்புறமென்ன.? கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு, இஷ்டப்பட்ட நாயகியின் கண் தெரியாத அக்காவுக்கு சக டிரைவரை மாப்பிள்ளையாக்கி, அவர்களது குடும்ப கஷ்டத்தை போக்கி டிரைவர் விதார்த், விரும்பிய பெண்ணை கைபிடிப்பதும், அவருக்கு கண்டக்டரும் உடன்பிறந்த தம்பியுமான சூரி துணை நிற்பதும் தான் ‛பட்டைய கெளப்பணும் பாண்டியா' படத்தின் மொத்த கதையும்! இவர்களது லட்சியத்திற்கு எல்லா விதத்திலும் உதவிபுரியும் மினிபஸ் முதலாளி இமான் அண்ணாச்சியின் ‛ஆ'மினி பஸ் கனவு இறுதிவரை நிறைவேறவில்லை என்பது ஹீ., ஹீ... கிளைக்கதை! அவ்வளவே!!

    விதார்த், வேல்பாண்டியனாக ஆடுகிறார், பாடுகிறார், பஸ் ஓட்டுகிறார், ஹீரோயினை விழுந்து விழுந்து லவ் பண்ணுகிறார்... ஆனால் இண்டர்வெல் வரை கதாநாயகியின் மனதில் ஒட்ட மறுத்தாலும், ரசிகர்களின் மனதில் பச்சக் என ஒட்டிக் கொள்ளுமளவிற்கு பக்காவாக நடித்திருக்கிறார். இடைவேளைக்கு பின் கதாநாயகியின் நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் விதார்த், ரசிகர்கள் நெஞ்சில் இருந்து பிய்த்துக் கொண்டு போகிறார். காரணம் முன்பாதி முழுக்க சூரியும், இவரும் பண்ணும் காமெடி, படத்தை தூக்கி நிறுத்துகிறது. பின்பாதி டிராஜிடி, வழக்கமான பாணியிலேயே படமாக்கப்பட்டிருப்பதால் சற்றே சலிப்பு தட்டுகிறது. வித்தியாசத்தை விரும்பும் விதார்த்தும், வித்தியாசமான விதார்த்தை விரும்பும் ரசிகர்களும் இடைவேளைக்குப்பின் கொஞ்சம் கோட்டை விட்டிருப்பதால் ‛கொட்டாவி' விடுகின்றனர். ஆனாலும் விதார்த்தின் நடிப்பில் நல்ல துடிப்பு!

    வழக்கு எண் 18/9 படத்தின் அறிமுக நாயகி மனீஷா யாதவ் தான் இப்படத்திலும் நாயகி. அம்மணி, முந்தைய படங்களை காட்டிலும் நடிப்பிலும், துடிப்பிலும் மிஞ்சி இருக்கிறார். கண்மணியான இவரது பேமிலி பேக்ரவுண்ட் கண்ணீரை வரவழைப்பது காமெடி படத்திற்கு ப்ளஸ்ஸா மைனஸ்ஸா தெரியவில்லை!

    ‛பரோட்டா' சூரி தான் படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்ட். ஓப்பனிங் சீனில் தொடங்கி க்ளைமாக்ஸ் வரை மனிதர் திறந்த வாயை மூடவில்லை, ரசிகர்களும் தான்!

    இளவரசு, இமான் அண்ணாச்சி, ஜெயபிரகாஷ், முத்துக்காளை என ஏகப்பட்டோர் நடித்திருந்தாலும், மனதில் நிற்பது சூரிக்கு அப்புறம் கோவை சரளாவும், இமான் அண்ணாச்சியும் தான்!

    அருள் தேவின் இசை, டிஎம் வேந்தரின் ஒளிப்பதிவு என ஏகப்பட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தாலும், நாயகர் விதார்த்துக்கு, ‛வருத்தப்படாத வாலிபர் சங்கம்' சிவகார்த்திகேயன்(போஸ் பாண்டி) மாதிரி வேல்பாண்டி எனும் பெயரும், ‛ஜன்னல் ஓரம்' படம் மாதிரி, பஸ், பழனி மலை பேக்ரவுண்ட் என அரைத்த மாவையே அரைத்திருப்பதில் ‛பட்டைய கெளப்பணும் பாண்டியா' எஸ்.பி.ராஜ்குமாரின் இயக்கத்தில் காமெடியைத்தவிர மற்ற விஷயங்களில் கோட்டை விட்டிருப்பதாகவே தோன்றுகிறது!

    ஆகமொத்தத்தில், ‛பட்டைய கெளப்பணும் பாண்டியா' - முன்பாதி பட்டைய கெளப்புகிறது - பின்பாதி கொட்டாவியை கிளப்புகிறது!

    குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு சில உணவு டிப்ஸ்

    By: Unknown On: 08:20
  • Share The Gag
  • ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள்.

    குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்:

    1. தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

    2. உணவுக்குப் பிறகான இடைவேளைகளில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.

    3. கொழுப்பு நீக்கப்படாத பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் சமையலில் பயன்படுத்துங்கள்.

    4. சாப்பிடுவதற்கு முன்பாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள். அது உங்களை முழு வயிற்றுக்குசாப்பிட விடாமல் செய்து விடும். வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்தி விடும்.

    5. கலோரி குறைவான உணவுகளை உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரியுள்ளவற்றை சாப்பிடவும்.

    6. சாப்பிடும் போது கூடவே குளிர்பானங்கள் குடிப்பது, அடிக்கடி டீ, காபி குடிப்பது போன்றவற்றைத் தவிருங்கள்.

    7. நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டால் இரண்டு மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்பிடுங்கள். அப்போது தான் பசி எடுக்கும். படுக்கச் செல்வதற்கு முன்பாக அவற்றை சாப்பிடுவது கட்டாயம் எடையைக் கூட்டும்.

    8. நீங்கள் குறைவாகவே சாப்பிட்டுப் பழகியவரா? அப்படியானால் சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிடலாம்.

    9. உடற்பயிற்சி செய்தால் உள்ள எடையும் போய் விடுமே என்று நினைத்துக் கொண்டு அதைத் தவிர்க்காதீர்கள். உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். உடல் உறுதி பெற இது இன்றியமையாதது.

    10. குண்டானவர்களுக்குத் தான் உடற்பயிற்சி என்றில்லை. ஒல்லியானவர்களும் செய்யலாம். அது அவர்களது உடல் சரியான ஷேப்பில் இருக்க உதவும்.

    11. ஆனால் அளவுக்கதிகமாக, அதாவது உடல்களைப் படைகிற வரை உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வெதுவெதுப்பான பாலில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.

    12. காலையிலும், மாலையிலும் ஐந்தைந்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, போரிச்சம் பழம், பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்க மாக்கிக் கொள்ளுங்கள். முந்திரி, பாதாம் போன்ற பருப்புகள் சாப்பிட வேண்டும். அதே சமயம் வேண்டாத கொழுப்புகள் உடலில் தங்காமல் இருக்க உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

    13. பத்து மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கிறபோது தூங்குவது இன்னும் நல்லது.

    14. தசைகள் நன்கு வளர்ச்சி அடைந்தால் தான் உறுதியான உடல் கட்டைப் பெற முடியும். இதற்கு காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து ஆகியவை அடங்கிய உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.

    15.  பிட்சா, உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவை உடல் எடையை அதிகரிக்கும். ஆனால் பலத்தைக் கூட்டாது. எனவே அவற்றைச் சாப்பிட வேண்டாம்.
    கார்போஹைடிரேட் மற்றும் புரோட்டீன் அடங்கிய உணவு வகைகள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.

    16. சிறிது சிறிதாகச் சாப்பிட வேண்டும். நிறைய உணவை ஒரே நேரத்தில் சாப்பிடுவதை விட, சிறிது சிறிதாகச் சாப்பிட்டு ஹெவிநெஸ்’ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்

    17. சிக்கன், மீன், முட்டை, சோயா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    18. பச்சை வாழைப்பழம், வேக வைத்த உருளைக்கிழங்கு, ஓட்ஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    19. இரும்புச் சத்து அதிகம் உள்ள பழங்களையும் நிறைய சாப்பிட வேண்டும்.

    20. மாதுளை, முழு நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    21. முளை கட்டிய ஏதாவது ஒரு பயறு வகையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    22. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    மேலே சொன்னபடி உணவு வகைகளை முழு திருப்தியுடன் சாப்பிட்டால் உடல் எடையும் கூடும். சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.

    சந்தானத்தை கழட்டிவிட்ட உதயநிதி!

    By: Unknown On: 07:26
  • Share The Gag
  • உதயநிதி-சந்தானம் எப்போதும் ’நண்பேண்டா’ தான். ஆனால் சமீபத்தில் வந்த செய்தி ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    தான் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா படம் வரை இருவரும் ஒன்றாக தான் இருந்தார்கள். தற்போது உதயநிதி நடிக்கும் அடுத்த படத்தில் சந்தானத்தை கழட்டி விட்டுள்ளாராம்.

    இதற்கு முக்கிய காரணமாக அவர் ஹீரோவாக நடிக்கபோனதே பல நடிகர்களை கோபத்தில் ஆழ்த்த, உதயநிதியும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    உட்சூடு நீக்கும் சதாவேரி

    By: Unknown On: 06:38
  • Share The Gag
  • வேறுபெயர்கள் :-தண்ணீர் விட்டான் கிழங்கு, நீலாவரை, சதாவரி, சதாமூலம், சதாவரை, சதாமுல்லி, சித்தவரை, ஆஸ்வாலி, சக்ராகுல்.
    தாவரப்பெயர் :-ஆஸ்பராகஸ் ரசிமோசஸ்.

    வகைகள் :- ஆ.ரெசிமோசஸ், ஆ.அட்செடன்ஸ்,ஆ. அப்பினாலிஸ், கோனோசினாமல்,
    பயன்தரும் பாகங்கள் :- கிழங்குகள், வேர்கள்.
    பயன்கள் :- ஒரு பழம் பாடல்.

    "நீரிழிவைப் போக்கு நெடுநாட் சுரத்தையெலா
    முரைவிடுத் தோட வுறுகுங்காண் நாரியரே
    வெந்நீர் ரெய் சோமநோய் வேட்டை யறைற்றணிக்குந்
    தண்ணீர் விட்டான் கிழங்குதான்'

    சதாவரி கிழங்கு வெகு மூத்திரம், பழைய சுரம், சோமரோகம், வெள்ளை, உட்சூடு, ஆகியவற்றை நீக்கும்.

    இதனால் தீரும் நோய்கள், வயிற்றுப் போக்கு, சர்க்கரை வியாதி, சுவாச நோய் முதலியன. உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது. குழந்தை பெற்ற தாய்மார்களுக்குப் பால் சுரப்பை அதிகரிக்கவும், மெல்லிய தேகம் உடையவர்கள் நல்ல சதைப்பிடிப் புடையவைகளாக மாறவும் பயன்படுகிறது.

    உலர்ந்த கிழங்கை இடித்து சூரணம் செய்து வேளைக்கு 1-2 வராகனெடை நெய், சர்க்கரை, பால், இவற்றை இட்டு தினம் 3 வேளை கொடுக்கவும். அல்லது பச்சைக் கிழங்கை இடித்துப் பிழிந்து சாற்றில் வேளைக்கு1/4 - 1/2 அவுன்ஸ் அளவு பால், சர்க்கரையிட்டுக் கொடுக்கலாம். இதனால் நீர்கடுப்பு, எலும்புருக்கி, மேகசாங்கே, கை,கால் எரிவு, சுக்கிலபிரமேகம், தாதுபலவீனம், கரப்பான் முதலிய வியாதிகள் குணமடையும். தேகபுஷ்டி உண்டாகும்.