Saturday, 6 September 2014

Tagged Under:

குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு சில உணவு டிப்ஸ்

By: Unknown On: 08:20
  • Share The Gag
  • ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள்.

    குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்:

    1. தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

    2. உணவுக்குப் பிறகான இடைவேளைகளில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.

    3. கொழுப்பு நீக்கப்படாத பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் சமையலில் பயன்படுத்துங்கள்.

    4. சாப்பிடுவதற்கு முன்பாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள். அது உங்களை முழு வயிற்றுக்குசாப்பிட விடாமல் செய்து விடும். வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்தி விடும்.

    5. கலோரி குறைவான உணவுகளை உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரியுள்ளவற்றை சாப்பிடவும்.

    6. சாப்பிடும் போது கூடவே குளிர்பானங்கள் குடிப்பது, அடிக்கடி டீ, காபி குடிப்பது போன்றவற்றைத் தவிருங்கள்.

    7. நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டால் இரண்டு மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்பிடுங்கள். அப்போது தான் பசி எடுக்கும். படுக்கச் செல்வதற்கு முன்பாக அவற்றை சாப்பிடுவது கட்டாயம் எடையைக் கூட்டும்.

    8. நீங்கள் குறைவாகவே சாப்பிட்டுப் பழகியவரா? அப்படியானால் சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிடலாம்.

    9. உடற்பயிற்சி செய்தால் உள்ள எடையும் போய் விடுமே என்று நினைத்துக் கொண்டு அதைத் தவிர்க்காதீர்கள். உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். உடல் உறுதி பெற இது இன்றியமையாதது.

    10. குண்டானவர்களுக்குத் தான் உடற்பயிற்சி என்றில்லை. ஒல்லியானவர்களும் செய்யலாம். அது அவர்களது உடல் சரியான ஷேப்பில் இருக்க உதவும்.

    11. ஆனால் அளவுக்கதிகமாக, அதாவது உடல்களைப் படைகிற வரை உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வெதுவெதுப்பான பாலில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.

    12. காலையிலும், மாலையிலும் ஐந்தைந்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, போரிச்சம் பழம், பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்க மாக்கிக் கொள்ளுங்கள். முந்திரி, பாதாம் போன்ற பருப்புகள் சாப்பிட வேண்டும். அதே சமயம் வேண்டாத கொழுப்புகள் உடலில் தங்காமல் இருக்க உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

    13. பத்து மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கிறபோது தூங்குவது இன்னும் நல்லது.

    14. தசைகள் நன்கு வளர்ச்சி அடைந்தால் தான் உறுதியான உடல் கட்டைப் பெற முடியும். இதற்கு காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து ஆகியவை அடங்கிய உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.

    15.  பிட்சா, உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவை உடல் எடையை அதிகரிக்கும். ஆனால் பலத்தைக் கூட்டாது. எனவே அவற்றைச் சாப்பிட வேண்டாம்.
    கார்போஹைடிரேட் மற்றும் புரோட்டீன் அடங்கிய உணவு வகைகள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.

    16. சிறிது சிறிதாகச் சாப்பிட வேண்டும். நிறைய உணவை ஒரே நேரத்தில் சாப்பிடுவதை விட, சிறிது சிறிதாகச் சாப்பிட்டு ஹெவிநெஸ்’ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்

    17. சிக்கன், மீன், முட்டை, சோயா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    18. பச்சை வாழைப்பழம், வேக வைத்த உருளைக்கிழங்கு, ஓட்ஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    19. இரும்புச் சத்து அதிகம் உள்ள பழங்களையும் நிறைய சாப்பிட வேண்டும்.

    20. மாதுளை, முழு நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    21. முளை கட்டிய ஏதாவது ஒரு பயறு வகையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    22. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    மேலே சொன்னபடி உணவு வகைகளை முழு திருப்தியுடன் சாப்பிட்டால் உடல் எடையும் கூடும். சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.

    0 comments:

    Post a Comment