Monday, 22 September 2014

இந்த படத்தால் தியேட்டர் கேண்டீன், பார்க்கிங் ஆட்கள் கூட மகிழ்ச்சி - இயக்குனர்

By: Unknown On: 21:09
  • Share The Gag
  • விக்ரம் பிரபு, மோனல் கஜ்ஜார் நடித்த சிகரம் தொடு படத்தை கவுரவ் இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த 12ந் தேதி வெளிவந்தது. விக்ரம் பிரபு நடித்த படங்களான கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பியை ஒப்பிடும்போது சிகரம் தொடு மிக குறைவான ரிசல்ட்டையே கொடுத்துள்ளது என்பது பொதுவான கணிப்பு ஆனால் இயக்குனர் கவுரவ் சிகரம் தொடு படத்தால் தியேட்டர் கேண்டீன், பார்க்கிங் ஆட்கள் கூட சந்தோஷமாக இருக்கிறார்கள் என்கிறார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தூங்கா நகரத்துக்கு பிறகு எனது இரண்டாவது படமாக சிகரம் தொடுவிற்கு மக்கள் மற்றும் மீடியாக்கள் கொடுத்த ஆதரவிற்கு மிகவும் நன்றி. கடந்த 12ந் தேதி 300 தியேட்டர்களில் சிகரம்தொடு திரையிடப்பட்டது. 90 சதவிகித தியேட்டர்களில் இரண்டாவது வாரமாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

    விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், தியேட்டர் கேண்டீன் மற்றும் பார்க்கிங் தொடர்புடையவர்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அந்த சந்தோஷத்தின் வழியில் எனது அடுத்த படத்தை விரைவில் தொடங்க இருக்கிறேன். இவ்வாறு கவுரவ் கூறியுள்ளார். 

    விக்ரமுக்கு தேசிய விருது உறுதி.. எழுதிவைச்சிக்கிங்க... டைரக்டர் ஷங்கர்

    By: Unknown On: 19:56
  • Share The Gag
  • விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடித்துள்ள படம் ‘ஐ’. ஷங்கர் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. தீபாவளிக்கு படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது. ஹாலிவுட் தரத்தில் மெகா பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளனர். இதன் பாடல்களை ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டை அழைத்து வந்து சமீபத்தில் வெளியிட்டனர்.

    விக்ரம் இப்படத்தில் ‘பாடி பில்டர்’ ஆக வருகிறார். பாதி மனிதன் பாதி மிருகம் கலந்த இன்னொரு கேரக்டரிலும் நடிக்கிறார். இந்த கேரக்டருக்காக உடம்பை வருத்தி நடித்துள்ளார். இதற்காக அவருக்கு விருது கிடைக்கும் என கூறப்படுகிறது.

    இது குறித்து படத்தின் இயக்குனர் ஷங்கர் கூறும்போது, பாதி மிருகம், பாதி மனிதன் கலந்த கேரக்டரில் மேக்கப் போடுவதற்காக விக்ரம் உடம்பை குறைக்க வேண்டி இருந்தது. இதற்காக சாப்பிடாமல் இருந்து உடம்பை குறைத்தார். ரொம்ப கஷ்டப்பட்டார். அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விருது கிடைத்தால் சந்தோஷப்படுவேன் என்றார்.

    விதார்த்துக்கு திருப்புமுனையை கொடுக்க வரும் காடு

    By: Unknown On: 18:57
  • Share The Gag
  • விதார்த் நடிப்பில் சமீபத்தில் தியேட்டர்களில் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் ‘ஆள்’. இப்படத்தில் வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த விதார்த், மீண்டும் ஒரு வித்தியாசமான படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    ‘காடு’ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை ஸ்டாலின் ராமலிங்கம் என்பவர் இயக்குகிறார். விதார்த்துக்கு ஜோடியாக கேரளத்து வரவான சமஸ்கிருதி என்ற புதுமுகம் நடிக்கிறார். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகில் உள்ள மலைக்கிராமம் ஒன்றில் இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்திருக்கிறார்கள். அந்த மலைக் கிராமத்தில் இருந்த வீடுகளுடன் சில வீடுகளை செட் போட்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்.

    இந்த படம் பற்றி விதார்த் கூறும்போது, இந்த படம் என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இருக்கும். என்னுடைய எல்லா படங்களுக்கும் ஆதரவு தந்த ரசிகர்கள் இந்த படத்துக்கும் ஆதரவு தரவேண்டும் என்று கூறினார். இப்படத்தை சக்ரவர்த்தி பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நந்து தயாரித்திருக்கிறார். கே இசையமைக்கிறார். 

    முத்த ஆராய்ச்சி சீக்ரெட்ஸ்(kiss for you)

    By: Unknown On: 18:29
  • Share The Gag
  • முத்தம் என்று சொல்லும்போதே நமது உடல் ஏதோ ஒருவித கிளுகிளுப்புக்குள் சிக்கி விடுகிறது.
    உண்மையில் அந்த முத்தத்தை பெற்றால் எப்படி இருக்கும்?

    நினைக்கும்போதே, எங்கோ பறப்பதுபோல் இருக்கிறது என்கிறீர்களா?
    அது ஒருபுறம் இருக்கட்டும்: இப்படியே முத்தம் கொடுப்பதால் என்ன பயன் என்று சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். அப்போது, இறுக்கி அணைத்துக்கொண்டு முத்தம் கொடுக்கும் தம்பதியர் உடலில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் என்ற ஹார்மோன் சுரப்பு குறைவதை கண்டுபிடித்தார்கள்.

    அதாவது, இறுக்கி அணைத்துக்கொண்டு முத்தம் கொடுப்பவர்கள் டென்ஷன் ஆக மாட்டார்கள் என்பது இவர்களது ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்தது.
    மேலும், திருமணம் ஆனவர்களுக்கும், ஆகாதவர்களுக்கும் இடையே டென்ஷன் எந்த அளவில் ஏற்படுகிறது என்ற கோணத்திலும் ஆராய்ச்சியை இவர்கள் தொடர்ந்தார்கள். அப்போது, புதிதாக திருமணம் ஆனவர்கள் டென்ஷன் இல்லாமல் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பது தெரிய வந்தது.
    திருமணம் ஆகி பிள்ளைகள் பிறந்த பிறகு, பெரும்பாலான கணவன்-மனைவியர் தங்களுக்குள் முத்தம் கொடுத்துக்கொள்வதையும், தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதையும் குறைத்து விடுவதாகவும், அதனால் அவர்கள் மீண்டும் மன அழுத்தத்தை சந்திப்பதாகவும் அவர்களது ஆய்வு முடிவு கூறுகிறது.

    அமெரிக்க ஆராய்ச்சியாளர்களும் முத்தம் தொடர்பான ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். அவர்களது ஆய்வில், முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பது கிடையாது என்பது தெரிய வந்தது.
    சில கணவன்மார்கள் மனைவிக்கு முத்தமே கொடுக்காமல் தாம்பத்திய உறவை முடித்துக் கொள்வதும், ஆனால், அவர்களது மனைவியர் அந்த முத்தத்தை விரும்புவதும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
    66 சதவீதம்பேர் முத்தமிடும்போது முகத்தை மூடிக்கொள்கிறார்களாம். மீதமுள்ளவர்கள்தான் கண்களை திறந்தபடி அல்லது தனது துணையை பார்த்தபடி முத்தமிடுகிறார்களாம்.

    அமெரிக்க பெண்கள் முத்த விஷயத்தில் பயங்கர கில்லாடிகளாக இருக்கிறார்கள். அவர்கள், திருமணத்திற்கு முன்பு குறைந்தது 80 ஆண்களையாவது முத்தமிட்டு விடுகிறார்களாம்.
    இந்தியாவை பொறுத்தவரை காதல் திருமணம் செய்து கொண்டவர்களை காட்டிலும், பெற்றோரே பார்த்து முடித்ததில் இணைந்த ஜோடிகளே அதிகம் முத்தமிடுகிறார்களாம்.

    வேலைக்கு செல்லும்போது மனைவியை முத்தமிட்டுவிட்டு செல்லும் கணவன்மார்கள், அவ்வாறு முத்தமிடாதவர்களைக் காட்டிலும் 5 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்கிறார்களாம்.
    முத்த ஆராய்ச்சி இதோடு நின்றுவிடவில்லை. இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
    அந்த முத்த ஆராய்ச்சியில் கிடைத்த மேலும் சில தகவல்கள் இங்கே உங்கள் பார்வைக்கு :
    * ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தில் உள்ள 29 தசைகள் இயங்குகிறன.
    * எந்த அளவுக்கு அதிகமாக முத்தம் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு முதுமையில் முகத்தில் சுருக்கம் வரும் நாட்கள் வெகுதூரத்திற்கு செல்கின்றன.
    * முத்தமிட்டுக் கொள்ளும்போது உருவாகும் எச்சிலில் கொழுப்பு, புரதம் மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அவை, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றன.
    * ஒரு முறை முத்தமிடுவதால் 2-3 கலோரி சக்தி நம் உடலில் எரிக்கப்படுகிறது. அதுவே, பிரெஞ்சு முத்தமாக இருந்தால், அதாவது உதட்டோடு உதடு வைத்து, நாவால் துலாவி இறுக முத்தமிட்டால் 5 கலோரி வரை சக்தி எரிக்கப்படுகிறதாம்.
    * ஆர்ட்டிக் பனி பிரதேசங்களில் வசிக்கும் எக்ஸிமோக்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டுக் கொள்கிறார்களாம்.
    * குண்டாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிட்டால், தனது உடலின் 26 கலோரி சக்தியை குறைக்க முடியுமாம். இதன்மூலம் அவர்களது அதிகப்படியான தொப்பை குறையுமாம்.
    * முத்தமிடும்போது நாம் பெரும்பாலும் வலது புறமாகவே முத்தமிடுகிறோம். நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கம் கட்டுப்படுத்தப்படுவதே இதற்கு காரணமாகும்.

    இப்படிப்பட்ட பல்வேறு சிறப்புகளால் ஜூலை 6&ம் தேதியை தேசிய முத்த தினமாக கொண்டாடுகிறது இங்கிலாந்து. அந்த தினமே பிற்காலத்தில் உலக முத்த தினமாக மாறியது.

    முத்தத்திற்கு என்று ஒரு பழமொழியும் உள்ளது. அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ போன்றது என்பது தான் அந்த பழமொழி.

    இன்னொரு விஷயம்... முத்தமிடுவதால் எய்ட்ஸ் பரவாது. அதனால் எய்ட்ஸ் பயம் வேண்டாம்.
    உலக சினிமாவில் முதல் முத்த காட்சி தி கிஸ் என்ற படத்தில் இடம்பெற்றது. இந்த சினிமா 1896ல் வெளியானது. ஜான் சி.ரைஸ் என்ற நடிகர் மே இர்வின் என்ற நடிகைக்கு முத்தம் கொடுத்து, முத்த புரட்சியை ஆரம்பித்து வைத்தார்.

    செக்ஸ் பிரச்னையை போக்குமா? யோகா??

    By: Unknown On: 17:28
  • Share The Gag
  • பல நூற்றான்டுகளுக்கு முன்பே இந்திய அளவில் காமசுகத்தை{பாலியல் இன்பத்தை} வெளிப்படுத்தும் வகையில் பல விசையங்கள் உண்டு அதில் ஒன்று தான் காமசூத்திரா.கோவில்,அரன்மனை,சில பொது இடங்கள் இவைகளில் எல்லாம் அந்த காலத்திலேயே காமசுகத்தை விவரிக்க கூடிய சிற்பங்கள் பல உண்டு.

    மேலை நாடுகளில் எல்லாம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை செக்ஸ் என்றால் அசிங்காமான விசையம் என்ற கலாச்சாரம் தான் இருந்து.அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட.பெண்கள் எல்லாம் இன்று போல் சகஜமாக உடல் வேளிப்படுத்தும் உடை அணிய முடியாது. காமத்தை வெளிப்படையாக கொண்டாடும் ஆற்றல் மனிதர்கள் அளவுக்கு எந்த மிருகத்துக்கும் இல்லை.இது இன்று மேலை நாடுகள் ஒற்றுக்கொள்ளும் விசையம். ஆணால் தமிழ்{பத்திரிகைகள், சினிமா}இவைகள் தான் காதலையும், காமத்தையும் வெளிப்படையாக கொன்டாடுவது மிருகத்தனம் போல் லாஜிக் இல்லாத டையலாக்குகள் பேசும். "நொடிபொழுதில் சூடாகி, சூடேற்றி, அணைந்தும் விட்டாய் தீக்குச்சி போல ஆனால் நீ சூடேற்றிய கனல், சூடார நேரம் ஆகும் என்பதை ஏன் அறியாமல் போனாய்! இது உன் குற்றமா? அவள் குற்றமா? இல்லை படைத்தவன் குற்றமா? அல்லது எல்லாம் மாயையா? " 64 வகை இன்பங்களை முழுமையாக அநுபவித்து, ஒரு நல்ல முழு குழந்தையைப் பெறுவதற்காக என எடுத்துக் கொள்ளலாமே?

    அவசர அவசரமாக முதல் இரவிலேயே பெண்களுக்கு காமம் புரிவதற்க்குல், அவர்களின் காமம் முழுமைப் பெருவதற்க்குள், காம குமிழை போட்டுடைத்து, முன்றே மாதங்களில் குழந்தை பேற்றை எட்டியவர்களின் லிஸ்ட் மிகப் பெரியது. அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடவில்லையானாலும், வெறுத்து வருத்தப்பட்டது உண்மை. யோக கலை என்பது ஒரு சர்வ ரோக நிவாரணி, அதை ஒழுங்காக கடை பிடிக்கும் பட்ஷத்தில். நாடிசுத்தி,மூச்சு பயிற்சி,பிரணயாமம் இத்துடன் யோகாவையும் முறையாக கடைபிடித்து வருபவர்களுக்கு பல தலைமுறைகளுக்கு எந்த பிர்ச்சினையும் வராது. இதில் பெண்ணை வலது புறத்தில் படுக்க வைத்து, சூரிய கலையில் மூச்சுக்காற்று ஓடும் போது கூடினால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும். இதை அப்படியே உல்ட்டாவாக செய்தால் பெண்குழந்தை பிறக்கும் என்றும் கூறுவார்கள். யோககலை என்பது 108 நாடிகளையும் கன்ட்ரோல் செய்து ரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்தும் ஒரு அதி அற்புதமான விஷயம். ஒரு சரியான குருவிடம் கற்றுக்கொண்டு செய்வது உசிதம்."அறியாமைதான் இங்கு பேரின்பம் பெண்ணே... காதல் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே" - வைரமுத்து (அந்நியன் படத்தில்) " சொல்லி தெரிவதில்லை மன்மத கலை" - பழமொழி - இது சரியா ? என்னை பொருத்தவரை இருவருக்குமே அறியாமை என்பது ஓ.கே . தேடல் துவங்கியதே என பாடிக் கொண்டே மற்றதை பாக்கலாம்.

    பெண்ணும்க்கு தெரியாவிட்டாலும் கூட ஓ.கே. ஆனால் நான் இன்னும் திருப்தியடையவில்லை என்றே சொல்ல பயப்படும் நம் பெண்களிடையே, ஆண் அறியாமையிலும், பெண்ணும் எல்லாம் அறிந்து சொல்லத் தயங்குவதாயும் இருந்தால் பொழப்பு கிழிஞ்சுடும். வாஷிங்டன் : செக்ஸ் விஷயத்தில் அதிருப்தியுடன் உள்ள ஆண்களும், பெண்களும் இப்போது யோகா செய்ய ஆரம்பித்து விட்டனர்; அமெரிக்காவில் லேட்டஸ்ட் மவுசு இது! இந்தியாவில், பதஞ்சலி முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட யோகக் கலை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான பின்னரே, சமீப காலமாக இந்தியாவில் பிரபலமாக உள்ளது. இன்னும் பலருக்கு யோகா, இந்தியாவில் பிறந்தது என்றும், பதஞ்சலி முனிவர் தான் அதை உருவாக்கினார் என்பதும் கூட தெரியாது. அமெரிக்கா கண்டுபிடித்தது போலத்தான் சொல்வர். மேலும், யோகாவை, பல மதத்தினரும் உரிமை கொண்டாடி, அவர்கள் தனியாக பெயர் வைத்தும் யோகாவை பிரபலப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள், யோகாவை வியாபாரமாக்கி கோடிகோடியாக அள்ளி வருகின்றன. அமெரிக்க மக்களுக்கு பிட்சா மோகமும், வார இறுதி ஜாலியும் கூட இப்போது குறைந்து வருகிறது. வாழ்க்கையில் எல்லா திருப்தியும் கிடைக்கவும், உடல் ஆரோக்கியத்துக் கும்

    யோகா முக்கியமான அபூர்வ கலை என்று உணர ஆரம்பித்துவிட்டனர். இதை பயிற்சி பெற ஆயிரக்கணக்கில் செலவழிக் கின்றனர். யோகா பற்றி நிபுணர்கள் ஆராய்ச்சிகளையும் செய்து வருகின்றனர். அதில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சியில்,"செக்ஸ் பலத்தை யோகா பயிற்சி தருகிறது; யோகா செய்தால் ஆண், பெண்களுக்கு உள்ள செக்ஸ் குறைபாடு நீங்கி விடும்' என்று கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லோரி ப்ரோட்டோ, தெற்கு கலிபோர்னியா செக்ஸ் ஆராய்ச்சி மையத்தலைவர் மைக்கேல் கிரிச்மென் ஆகியோர் இது குறித்து கூறுகையில்,"செக்ஸ் மீதான ஆர்வத்தை

    பெண்களுக்கு தூண்டவும், நீடித்த செக்சை ஆண்களால் தருவதற்கான பலத்தையும் யோகா அளிக்கிறது. தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்து வந்தால் போதும்; செக்ஸ் பலம் கிடைக்கும்' என்று கூறியுள்ளனர். கலிபோர்னியாவில் இருந்து வெளிவரும் "செக்ஸ் ஜர்னல்' என்ற இதழில் வெளிவந்த கட்டுரையில்,"68 இந்தியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப் பட்டதில், அவர்களுக்கு செக்ஸ் பலம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மேற்கத்தியர்களும் யோகாவை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்' என்று எழுதப்பட்டுள்ளது. மேன்ஹாட்டன் மாகாணத்தில் உள்ள யோகா ஆராய்ச்சி மையத்தில், யோகா பயிற்சியில் பலரும் பங்கேற்று வருகின்றனர்.

    அவர்களை வைத்தும் செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. "யோகாவில் உள்ள நன்மைகள் இப்போது தான் தெரிய ஆரம்பித் துள்ளன. உடல், மன ஆரோக்கியத்துக்கு இது அருமையான பயிற்சி. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இதை செய்துவர வேண்டும்' என்று ஆராய்ச்சி நடத்திய மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். கலவியின்பம் தான் ஒரு ஆணையும்,பெண்ணையும் இல்வாழ்க்கையில் இணைத்து வைக்கிறது. சம்சார படகிலேறி, சதிராடும் வாழ்க்கை நீரில், திண்டாடும் மானிடர்கள் அவ்வப்போது இளைப்பாறிக்கொள்ளும் இடமே சிற்றின்பக்கூடம்.ஆண்டவனால் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான விஷயம் தான் தாம்பத்யம். ஆணின் குறியும்,பெண்ணின் யோனியும் இணைந்தது தான் சிவலிங்க தத்துவம் அல்லது சிவ சக்தி தத்துவம். செக்ஸை யோக வடிவில் பயிலும்போது அங்கே சக்தி இழப்புக்கு இடமில்லை. இருப்பினும் காம சூத்திரத்தின் எல்லா நிலைகளையும் ஒருவன் ஏக காலத்தில் அனுபவித்திட முடியாது. அதற்கு தேக பலம் அவசியம். முழு ஆரோக்கியமான ஆணும்,பெண்ணுமே இதை நடைமுறை படுத்த இயலும் இடைவெளி விட்டு. தற்கால தாம்பத்ய உறவு அரை மணிக்கு மேல் நீடித்தால் அது பெரிய விஷயம். 64 கலைகளையும் கடந்து விட்டேன் இனி எனக்கு
    மோகமில்லை என்று யாராலும் சொல்லமுடியாது. ஏனென்றால் 'அழுக்கு தீர குளித்தவனும் கிடையாது - ஆசை தீர அனுபவித்தவனும் கிடையாது".

    செக்ஸ் உறவில் ஆண்களுக்கு தோன்றும் பிரச்சினைகள்!!

    By: Unknown On: 01:02
  • Share The Gag
  • பெரும்பாலான ஆண்களுக்கு இந்த கவலை இருக்கும். ‘எல்லாத்தையும்’ நாமதான் ஆரம்பிக்கனும் நம் மாளு எதையுமே செய்வதில்லை என்ற கவலைதான் அது.

    செக்ஸ் உறவின்போது பெரும்பா லான ஆண்களின் மனதில் தோ ன்றும் சலிப்புதான் இது. நான்தான் தொடங்க வேண்டும். அவங்க பா ட்டுக்கு கம் முன்னு இருப்பாங்க என்னிக்காச்சும் அவங்க ஆரம்பிச்சு வச்சுருக்காங்களா என்ற சலிப்பும் பல ஆண்களிடம் உள்ளது.
    ஏன் பெண்கள் செக்ஸ் விஷயத்தில் ‘லீட் பண்ண மாட்டார்கள் அவரே ஆரம்பிக்கட்டும் முன்னேறட்டும் என்று காத்திருக்கிறார்கள்?. இதற்கு நிபுணர்கள் தரும் பதில் இது…

    பெரும்பாலான ஆண்கள் என்றில்லை கிட்டத்தட்ட அத்தனை ஆண்களுக்கு மே இந்தக் கேள்வி மனதில் எழுவதற்கு வாய்ப்புள்ளது. காரணம்இ பெரும்பாலும் ஆண்கள்தான் செக்ஸ் உறவின்போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைக்கிறார்கள். அதன் பிறகுதான் பெண்கள் டேக் ஓவர் செய்து கொள்கிறார்கள்.

    சில சமயங்களில்இ நமது மனைவிக்கு செக்ஸ் பிடிக்கவில்லையாஇ இப்படி அமைதியாக இருக் கிறாரே என்ற சந்தேகம் கூட சிலருக்கு எழலாம். பலருக்கு ஒரு வேளை நமது ‘மூவ்’கள் சரியாக இல்லையோ என்ற சந்தேகம் கூட எழலாம்.
    முன் விளையாட்டுக்களில் மனைவிக்கு ஆர்வம் இருக்கிறதா இல்லையா என்பது கூட பலருக் குப் புரிபடுவதில்லை. இப்படிப்பட்ட சிந்தனைகளால் பல ஆண்கள் குழம்பிப் போவது நிஜம் தான்.

    ஆனால் இதெல்லாம் இந்த அளவுக்கு குழம்பிப் போக வேண்டிய பெரிய விஷயமில்லை. சாதாரணமானவைதான்.
    பெண்கள் எதையும் ஆரம்பிப்பதில் தயக் கம் காட்ட சில காரணங்கள் உள்ளன. நா மே தொடங்கினால் நம்மவருக்கு ஏதாவது ஈகோ பிரச்சினை வந்து விடுமோ என்று பல பெண்கள் முதல் அடி எடுத்து வைக்க தயக்கம் காட்டுகிறார்களாம்.

    நாமே முந்திக் கொண்டு போனால் நம் மைப் பற்றித் தவறாக நினைத்து விடுவா ரா என்ற சந்தேகமும் பல பெண்களுக்கு எழுகிறதாம். நாம்தான் சரியான ‘சிக்னல்’ கொடுத்தாச்சேஇ புரிந்து கொண்டு களம் இறங்க வேண்டியதுதானே என்று பலர் நினைக்கிறார்களாம்.
    நான் சரியான முறையில்தான்இ உறவுக்கு ரெடி என்பதை மறைமுகமாக உணர்த்துகிறேன். அவர்தான் சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்று பல பெண்கள் புகார் பட்டியலுடன் உட் கார்ந்திருக்கிறார்கள்.

    பட்டவர்த்தனமாக எப்படி பளிச்சென சொல்வது என்ற தயக்கம் ஏற்படுவதாக பல பெண்கள் சொல்கிறார்கள்.
    ஆரம்பிப்பதில் அவர் தான் கில்லாடி எக் ஸ்பர்ட் அதனால்தான் நான் மெளனம் காக்கிறேன் என்பதும் பல பெண்கள் சொல்லும் வாதமாக இருக்கிறது.

    எனவே காதல் மற்றும் உறவில் ஈகோ என்பது பார்க்கப்படக்கூடாத ஒன்று. யார் ஆரம்பித்தால் என்னஇ முடியும்போது அது சிறப்பாகஇ சந்தோ ஷமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.

    அந்த நான்கு சுவருக்குள் தனிமையில் இருக்கும்போது இருவருக்கும் இடையே எந்தவிதமான தயக்கமோஇ வெட்கமோஇ கெளரவம் பார்ப்பதோ இருக்கக் கூடாது. ஆடைகளுடன் சேர்த்து அவற் றையும் தூரப் போட்டு விட வேண்டும். அப்போ துதான் உறவு இனிக்கும்இ சிறக்கும்.

    மேலும் பார்ட்னரிடமிருந்து வரும் ‘சிக்னலை சரி யாக புரிந்து கொள்ள வேண்டியது இருவரின் கடமையுமாகும். சிக்னல் வந்து விட்டால்இ அடுத்த வர் வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான். அதை விட்டு விட்டு  இல்லை இல்லை வாயைத் திறந்து கேட்டால்தான் ஆச்சு என்று வறட்டுப் பிடி வாதமாக இருக்கக் கூடாது.

    ஒரு வேளை கணவர் பிசியாக இருந்து கொண்டிருப்பார். அப்போது பார் த்து மனைவி அருகே வந்து கன்னத் தில் முத்தமிடலாம்இ கொஞ்சலாம். அதல்லாம்தான் உறவுக்கு அழைப்ப தற்கான ‘சிக்னல்’கள். எனவே பிசியா க இருந்தாலும் கூட அந்த சமிக்ஞை களை சரியாக புரிந்து கொண்டு செய ல்பட்டால் பிரச்சினை இல்லை.

    மனைவி ஆரம்பிக்கட்டும் அவரே எல்லாவற்றையும் தொடங்கட்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை தாராளமாக அவரிடம் வெளிப் படையாக சொல்லி விடலாம். அடுத்த முறை உங்களை அசத்த அவரும் தயாராக இருப்பார்.
    மொத்தத்தில் அன்பைக் காட்டவும் அருகாமையை இனிமையாக்கவும் வெளிப்படையான மனதும் செயல்பாடுகளும் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டால்இ ‘ஸ்டார்ட்டிங் டிரபுள்’ இருக்கவே இருக்காது.

    ஆண்மையை பாதுகாக்கும் மிளகு..!!

    By: Unknown On: 00:53
  • Share The Gag
  • நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி... பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளன என்பதே கசப்பான உண்மை. இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை உணவுப்பொருட்கள் தான்.

    ஆதலால், நாம் சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. முதலில் கீரை வகைகளை பார்க்கலாம்.

    கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்கவேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறுசிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.

    தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும். அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும். கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டால் சுக்ல விருத்தி உண்டாகும். கரி சலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும். சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும். புதினா சாப்பிட்டால் பசியை தூண்டும். கீழா நெல்லியை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் மறையும்.

    இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன. பசும்பால் தாதுக்கள் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும். எருமைப்பால் புத்தியை மந்தம் அடையச்செய்யும். ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப்போக்கு நோய்கள் குறையும். மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். வெண்ணை ஆண்மையை பெருக்கும். நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும். கரும்புச்சாறு ஆண்மையை உண்டாக்கும். தேன் கண்களுக்கு நல்லது. நல்லெண்ணை குளிர்த் தன்மை உடையது.

    நீர் மனிதனுக்கு இன்றியமையாதது. கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது. குழந்தைகள், வாதநோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது. அவல் பலத்தை அதிகரிக்கும். கோதுமை ஆண்மையை பெருக்கும். வெந்தயம் கசப்பு சுவை உடையது. சீதக்காய்ச் சலுக்கு சிறந்தது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவை தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.

    உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையை பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும். அதேபோல் சவ்வரிசியும் சுக்லத்தை அதிகரிக்கும்.

    பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது. பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது. வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும். பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியை தந்து, ஆண்மையைப் பெருக்கும். பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும். பெருங்காயம் தேக வாயுவை குறைத்து, வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. மஞ்சள் ரத்ததை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும். மிளகு இருமல், சளியை குறைக்கும்.

     தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது.
    சேனைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் ரத்தமில்லா மூலம் குணமாகும். இஞ்சி வயிற்றை சுத்தம் செய்யும். கத்திரிப் பிஞ்சு வயிற்று வலிக்கு நல்லது. கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் மறையும். அதேபோல் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும். தேங்காய் குளிர்ச்சித்தன்மை உடையது. தோல் நோய்களைக் குணமாக்கும் சக்தி உண்டு. வெள்ளரிப்பிஞ்சு உடலுக்கு மிகவும் நல்லது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பூ ரத்த மூலத்திற்கு சிறந்தது. வாழைப்பிஞ்சு சர்க்கரை நோய்க்கு நல்லது. அனைத்து வகை காய்கறிகளும் நமது உடலுக்கு மிகவும் நல்லது.