Monday, 22 September 2014

Tagged Under: ,

இந்த படத்தால் தியேட்டர் கேண்டீன், பார்க்கிங் ஆட்கள் கூட மகிழ்ச்சி - இயக்குனர்

By: Unknown On: 21:09
  • Share The Gag
  • விக்ரம் பிரபு, மோனல் கஜ்ஜார் நடித்த சிகரம் தொடு படத்தை கவுரவ் இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த 12ந் தேதி வெளிவந்தது. விக்ரம் பிரபு நடித்த படங்களான கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பியை ஒப்பிடும்போது சிகரம் தொடு மிக குறைவான ரிசல்ட்டையே கொடுத்துள்ளது என்பது பொதுவான கணிப்பு ஆனால் இயக்குனர் கவுரவ் சிகரம் தொடு படத்தால் தியேட்டர் கேண்டீன், பார்க்கிங் ஆட்கள் கூட சந்தோஷமாக இருக்கிறார்கள் என்கிறார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தூங்கா நகரத்துக்கு பிறகு எனது இரண்டாவது படமாக சிகரம் தொடுவிற்கு மக்கள் மற்றும் மீடியாக்கள் கொடுத்த ஆதரவிற்கு மிகவும் நன்றி. கடந்த 12ந் தேதி 300 தியேட்டர்களில் சிகரம்தொடு திரையிடப்பட்டது. 90 சதவிகித தியேட்டர்களில் இரண்டாவது வாரமாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

    விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், தியேட்டர் கேண்டீன் மற்றும் பார்க்கிங் தொடர்புடையவர்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அந்த சந்தோஷத்தின் வழியில் எனது அடுத்த படத்தை விரைவில் தொடங்க இருக்கிறேன். இவ்வாறு கவுரவ் கூறியுள்ளார். 

    0 comments:

    Post a Comment