Tuesday, 15 July 2014

மீண்டும் களத்தில் அமலா!

By: Unknown On: 23:05
  • Share The Gag
  • தமிழ் திரையுலகின் எண்பதுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலா. இவர் ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களுடன் நடித்து பெயர் பெற்றவர்.

    பின்பு தெலுங்கு நடிகர் நாகர்ஜுனை திருமணம் செய்துக் கொண்டு ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். தற்போது மீண்டும் திரையில் தோன்ற முடிவு செய்துள்ளார்.

    அதற்காக தற்போது முன்னணி தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ’கதை எனக்கு பிடித்து இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரம். சினிமாவில் நடிப்பது பற்றி உடனடியாக முடிவு எதுவும் எடுக்கவில்லை.’ என்று தெரிவித்துள்ளார்.


    இதில் எல்லாம் கவனம் தேவை!

    By: Unknown On: 22:58
  • Share The Gag
  • தனி வீடுகளைப் பொறுத்தவரையில் பிளின்த் ஏரியா 1,000 சதுர அடி என்றால் கார்பெட் ஏரியா 750,800 சதுர அடி வரை இருக்கும். ஃபிளாட் என்று வரும்போது, 600,650 சதுர அடிதான் இருக்கும். பொது இடங்கள், பார்க்கிங் என பொதுவான வசதிகள் அதிகமாக அதிகமாக, கார்பெட் ஏரியா என்பது குறைந்து கொண்டே வரும்.

    * எப்போது ஃபிளாட் வாங்கினாலும் கார்பெட் ஏரியாவை அளந்து உறுதி செய்யுங்கள். கட்டி முடித்த ஃபிளாட் என்றால் சுவர்களுக்கு இடையிலான தரையின் அளவை துல்லியமாகக் கணக்கிடுங்கள். பில்டர் சொல்லும் பிளின்த் ஏரியாவிலிருந்து சூப்பர் பில்ட் அப் ஏரியா 15 முதல் 20 சதவிகிதம் அதிகமாக இருந்தால் அந்த பில்டர் நியாயமானவர். அதற்கு மேல் இருந்தால் எதற்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கேளுங்கள்.

    ஏனென்றால், நீங்கள் விற்கும்போது இந்தப் பிரச்னை எழும். மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள், நீச்சல் குளம், தோட்டம், வாக்கிங் செல்லும் நடைபாதை போன்றவை விடப்பட்டிருக்கும் புராஜெக்ட்களில் பிளின்த் ஏரியா, சூப்பர் பில்ட் அப் ஏரியா 30,35 சதவிகிதமாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

    *  அடுக்குமாடி குடியிருப்புகளில்தான் விதிமுறை மீறல்கள் அதிகம் நடைபெறுகிறது. அதனால் அப்ரூவல் பிளான்படி விதிமுறைகள் மீறாமல் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்ப்பது அவசியம். வீட்டுக் கடன் வாங்காத பட்சத்தில் முறைப்படி அப்ரூவல் வாங்காமல் கட்டப்பட்ட வீடுகளை குறைந்த விலைக்கு தள்ளிவிடுவது நடக்கிறது. இதுபோன்ற வீடுகளை வாங்கினால் பிற்காலத்தில் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது. அவசரத்துக்கு வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்க முடியாது.

    *  காமன் ஏரியா அனைவரும் பயன்படுத்தும்படி இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். சில பில்டர்கள்/புரமோட்டர்கள், காமன் ஏரியா என்று ஒரு பகுதியைக் காட்டி விட்டு, அதில் அறை அல்லது கடை கட்டி விற்றுவிடுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

    *  சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, கார் நிறுத்தும் இடம் சூப்பர் பில்ட் அப் ஏரியாவில் சேர்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில் கார் நிறுத்தும் இடத்துக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை. திறந்தவெளி கார் நிறுத்தும் வசதி என்கிறபோது நயா பைசா கூட கொடுக்கத் தேவையில்லை.

    *  தனி வீடு என்கிறபோது அஸ்திவாரம் எத்தனை அடி என்பதை கவனியுங்கள். குறைந்தது நான்கு அடி போடுவது கட்டடத்துக்கு நல்லது. சில பில்டர்கள் இரண்டு அடிதான் தோண்டுவார்கள் என்பதால் உஷாராக இருப்பது நல்லது. இதேபோல், வீட்டில் அறையின் உயரம் குறைந்தது 10 அடி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சில பில்டர்கள் ச.அடி விலையைக் குறைத்துச் சொல்லிவிட்டு, வீட்டின் உயரத்தை 9.5 அடி அல்லது 9 அடியாக குறைக்கவும் வாய்ப்புண்டு!

    *  வீட்டைச் சுற்றி குறைந்தது 5 அடி விட்டிருக்கிறார்களா என்பதைக் கவனியுங்கள். பல பில்டர்கள் 2 அடிதான் விடுகிறார்கள். இது பிற்காலத்தில் பிரச்னை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

    சொந்தமாக கட்டும்போது....!

    *  செப்டிக் டேங், மாடிப் படி, தண்ணீர் தொட்டி, போர்ட்டிகோ, சுற்றுச்சுவர் கணக்கை எல்லாம் மொத்த சதுர அடி கணக்கில் சேர்க்க விடாதீர்கள். உதாரணத்துக்கு சுற்றுச் சுவர் கட்ட ஒரு சதுர அடிக்கு 200 ரூபாய்தான். அந்த வகையில் மேற்கண்ட செலவுகளை தனியாக கணக்கிட்டால் மொத்த செலவு குறைய வாய்ப்பு இருக்கிறது.

    *  கீழ்தளத்தை விட மேல்தளம் கட்டும்போது செலவு 10,15% குறையும். கணக்குபடி இன்னும் அதிகமாக கூட குறைய வேண்டும். ஆனால், பொருட்களை மேல் தளத்துக்கு எடுத்துச் செல்ல கூடுதல் கூலி கொடுக்க வேண்டியிருக்கும்.

    விஜய்க்கு ஜோடியானார் ஸ்ருதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

    By: Unknown On: 22:45
  • Share The Gag
  • இளையதளபதி விஜய் கத்தி படத்துக்கு பிறகு இயக்குனர் சிம்பு தேவன் படத்தில் நடிக்க போவது உறுதியானது.

    இப் படத்துக்கான நடிகர்கள் தேர்வு தற்போது நடைபெற்று கொண்டு வருவதால் யார் யார் நடிக்க போகிறார்கள் என்று ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

    இப்படம் ராஜவம்சம் பற்றிய கதை அமைப்பு கொண்டதால் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார். இதில் தந்தை விஜய்க்கு பழைய நடிகை ஸ்ரீதேவி ஜோடியாக நடிக்க உள்ளார்.

    மகன் விஜய்க்கு ஜோடியாக நடிப்பது ஸ்ருதிஹாசனா, ஹன்சிகாவா என்று சந்தேகம் எழும்பி வந்தது.

    தற்போது ஸ்ருதிஹாசன் உறுதி செய்துள்ளார். ஸ்ருதி தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் - சிம்புதேவன் படத்தில் நடிப்பதில் மிகவும் சந்தோசம் அடைகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

    அநேகமாக அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்கப்படலாம்.


    பழைய படக் கதையை திருடி படமெடுக்கும் லிங்குசாமி! அதிர்ச்சி தகவல்!

    By: Unknown On: 22:05
  • Share The Gag
  • தமிழ் திரையுலகின் கமர்ஷியல் இயக்குனர்களின் முன்னணி வரிசையில் இருப்பவர் லிங்குசாமி. ஆனால் இந்த முன்னணி இடத்திற்கு வர ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இயக்குனர்கள் தன் சொந்த முயற்சியால் தான் வந்தனர்.

    இதில் லிங்குசாமி ஒவ்வொரு மேடையிலும் பாட்ஷா, தேவர் மகன் மாதிரி படமெடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு, அதே கதையை தான் படமாக எடுத்து வருகிறார்.

    இவர் இயக்கிய ஆனந்தம் படம் மட்டுமே ஓர் அளவிற்கு வித்தியாசமான திரைப்படம், அவர் திரைப்பயணத்தில், அதுவும் கிட்டத்தட்ட விக்ரமன் பாணி தான்.

    பிறகு இவர் இயக்கிய ரன் திரைப்படம் சாதுவான ஹீரோ எப்படி ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கிறார் என்பது தான் கதை, இதிலும் சற்று பாட்ஷா சாயல் தெரிந்தது.

    இவர் இயக்கிய சண்டைகோழி திரைப்படத்தை கொஞ்சம் கவனித்தால் தேவர் மகன் படத்தில் விஷால், ராஜ்கிரண் நடித்தது போல் இருக்கும்.

    இதை தொடர்ந்து இவர் எடுத்த வேட்டை திரைப்படம் ஏதோ எம்ஜிஆர் படத்தின் அப்பட்டமான காப்பி என்று பேச்சு அடிப்பட்டது.

    தற்போது இவர் இயக்கி ரிலிஸ்க்கு ரெடியாக இருக்கும் அஞ்சான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் இது பாட்ஷா படத்தின் ரீமேக் என்று கூட சொல்லலாம். அதை அவரே ஒரு பேட்டியிலும் தெரிவித்திருந்தார்.

    ஆனால் இதற்கெல்லாம் அவர் பயன்படுத்து வார்த்தை இன்ஸ்பிரேஷன்.


    அஜித், விஜய்யின் திருட்டு விசிடி மதிப்பு 4 கோடி! அதிர்ச்சி ரிப்போர்ட்!

    By: Unknown On: 21:49
  • Share The Gag
  • தமிழ் திரையுலகில் சமீப காலமாக திருட்டு விசிடிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த வாரம் நடிகர் விஷாலே நேரடியாக சென்று புதுப்படம் ஒளிப்பரப்பு செய்த தொலைக்காட்சியை பிடித்து போலிஸில் புகார் கொடுத்தார்.

    தற்போது இதை தடுக்கும் விதத்தில் இயக்குனர் சேரன் ஆரம்பித்திருப்பது C2H. இதன் மூலம் சின்ன பட்ஜெட் படங்களை, அதன் உரிமம் பெற்று இந்நிறுவனத்தில் கீழ் வெளியிடப்படும்.

    இவ்விழாவில் பேசிய சேரன் பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். நேரடியாக சென்று விற்பனையாளர் ஒருவரிடம் கேட்டதற்கு விஜய் , அஜித் படம் ரிலிஸ் என்றால் 80 லட்சம் சிடிக்கள் விற்கும், 3 முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று கூறினார்களாம்.


    திரும்புகிறது சந்திரமுகி காம்பினேஷன்..!

    By: Unknown On: 17:10
  • Share The Gag
  • கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் 'லிங்கா' படத்தில் ரஜினியுடன், பிரபுவும் நடிக்கிறார்.

    ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் 'லிங்கா'. இதில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

    சந்தானமும், கருணாகரனும் நகைச்சுவை வேடங்களில் நடிக்கின்றனர்.

    ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், மனோபாலா ஆகியொர் குணச்சித்ரக் கதாபாத்திரங்களில் நடிக்க, ஜெகபதிபாபுவும் , தேவ்கில்லும் வில்லன்களாக நடிக்கின்றனர்.

    இந்நிலையில், பிரபுவும்  ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். 'குரு சிஷ்யன்', 'தர்மத்தின் தலைவன்', 'சந்திரமுகி' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

    தற்போது 'லிங்கா' படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதால் பிரபுவின் கேரக்டரும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடங்கியது பாலா படம்..!

    By: Unknown On: 16:59
  • Share The Gag
  • 'பரதேசி' படத்திற்குப் பின் பாலா இயக்கும் படம் 'தாரை தப்பட்டை' இப்படத்தில் சசிக்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

    தமிழ்நாட்டின் நடனம், கூத்து போன்றவற்றை மையமாக கொண்டு எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

    இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். 'பரதேசி' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த செழியன் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

    இவர்கள் தவிர ஒரு பிரபல நடிகர் நடிக்க உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. இப்படத்தை என்.சிவக்குமார் தயாரிக்கிறார்.