Monday, 4 August 2014

அப்பா - என் ஒவ்வொரு வயதிலும்... உங்களுக்கு எப்படி..?

By: Unknown On: 22:49
  • Share The Gag
  • ஒவ்வொரு மகன், மகளுக்கு தகப்பன் வெவ்வேறு காலகட்டங்களில் எப்படி தெரிவார்?

    என் 4 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!

     என் 5 வயதில் : என் அப்பா எல்லாம் அறிந்தவர்!

    என் 10 வயதில் : நல்லவர்தான், ஆனால் சிடுமூஞ்சிக்காரர்!

    என் 12 வயதில் : நான் சின்னப்பிள்ளையாக இருந்தபோது அப்பா ரொம்ப நல்லவர்!

    என் 14 வயதில் : எப்பவும் எதிலும் குறை கண்டுபிடிக்கும் ஆசாமி!

    என் 15 வயதில் : கால நடப்பிலும் புரிந்துகொள்ளாதவர்!

    என் 18 வயதில் : சரியான எடக்கு மடக்கு பேர்வழி

    என் 20 வயதில் : எங்கப்பா தொல்லையைத் தாங்கவே முடியல; எப்படித்தான் அம்மா இந்த ஆளோட குப்பை கொட்றாங்களோ?

    என் 25 வயதில் : எதைச் சொன்னாலும் மறுக்கிறவர்!

    என் 30 வயதில் : என் பையனை கட்டுப்படுத்தறதே கஷ்டமா இருக்கு. அவன் வயசுல இருந்தப்ப எங்க அப்பான்னாலே எனக்கு எவ்வளவு பயம்!

    என் 40 வயதில் : என்னை என் அப்பா எவ்வளவு கட்டுப்பாடா வளர்த்தார்! நானும் அப்படித்தான் பையனை வளர்க்கப்போறேன்

    என் 45 வயதில் : அப்பா எங்களையெல்லாம் எப்படி வளர்த்தார் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது

    என் 50 வயதில் : அப்பா எங்களை வளர்க்க எத்தனை கஷ்டங்களைச் சந்தித்தார். எனக்கோ ஒரேயொரு பிள்ளையைக்கூட கட்டுப்படுத்த முடியல

     என் 55 வயதில் : எங்கப்பா எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு எங்களுக்காக எதையும் திட்டமிட்டுச் செய்தார். அவரைப்போல வேற ஒருத்தர் இருக்க முடியாது

    என் 60 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!

    - எந்தப் பிள்ளையும் தன் தந்தையை தன் வாழ்க்கையின் முதல் கட்டத்தில் பார்த்தது போலவே மீண்டும் பார்ப்பதற்கு இப்படி 56 ஆண்டுகள் ஆகிவிடுகிறது! எனவே காலத்தை வீணாக்காதீர்கள், உங்கள் பெற்றோரை மறந்து-விடாதீர்கள்

    வியர்வை நாற்றம் போக பழைய தகவல்...!

    By: Unknown On: 21:46
  • Share The Gag
  • குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நம் நினைவுக்கு வருவது வெயிலின் சூடும், அதனால் உண்டாகும் வியர்வையும்.

    வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

    குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும்.

    இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும்.

    இன்னுமொரு குறிப்பு : 2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரிக்கவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வரவும். இரண்டே வாரத்தில் உடலில் நிரந்தமாக குடிகொண்டிருக்கும் வியர்வை நாற்றம் ஓடிவிடும். தலையும், உடலும் சுத்தமாகி மணம் வீசும்.

    தாம்பத்ய உறவு மேம்பட உதவும் கற்றாழை!

    By: Unknown On: 18:44
  • Share The Gag
  • கற்றாழை இயற்கையின் அதிசயம். பல நோய்களைத் தீர்க்கும் மருந்துதன்மை கற்றாழையில் உள்ளது. கிராமப்புறங்களில் இயற்கையாக வளரும் கற்றாழையில் தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.

    கற்றாழையில் சோற்றுக்கற்றாழை, சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    கற்றாழை உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திற்க்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சிறு கற்றாழை மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழை என வழங்கப்படுகிறது.

    சோற்றுக்கற்றாழை மடல்களைப் பிளந்து நுங்குச்சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்நீரில் 7 - 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்த வேண்டும். கற்றாழையைக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

    சோற்றுக்கற்றாழை வேர்களை வெட்டி, சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு சக்தி கொடுக்கும் நிகரற்ற மருந்தாகும்.

    சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, அதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

    கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.

    கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதை சேகரித்து வைத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.

    மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழையின் சோற்றுப் பகுதியை அரை கிலோவும், ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சி தரும் ஆயில் ஆகும்.

    முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

    ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் கூட கற்றாழைச்சாறு பயன்படும்.

    பேச்சுப் பிரச்னைக்கு சத்துக் குறைவான உணவுவை தவிருங்கள்..!

    By: Unknown On: 18:16
  • Share The Gag
  • பேச்சுக் குறைபாட்டுக்குத் தீர்வு காண்பது குறித்து பேச்சுத்திறன் வல்லுனர் பிரமிளா கூறுகிறார்..

    ‘‘இரண்டு முதல் மூன்று வயது வரை குழந்தைகளின்
    பேச்சுத்திறன் படிப்படியாக மேம்படும். அழுகை, குழந்தைகளின் முதல் மொழி. ங்காவில் தொடங்கி ‘ப்பா’, ‘ம்மா’, ‘த்தை’ என தத்தித் தத்தி ஒரு
    வயதில் ஒற்றை வார்த்தைகளுக்குத் தாவும். இரண்டு வயதில் அர்த்தம் உள்ள இரண்டு வார்த்தைகளை அமைத்து தனக்குப் பிடித்தது போலப் பேசும்.
    குழந்தையின் பேச்சு என்பது காது கேட்கும் திறன், பேச்சுத்திறன் மற்றும் மொழித்திறன் ஆகிய மூன்றின் தொடர்ச்சியாகும். இவை மூன்றும்தான் குழந்தையின் பேச்சைத் தீர்மானிக்கின்றன.

    குழந்தைகளுக்குப் பேச்சுப் பிரச்னை உண்டாக சத்துக் குறைவான உணவும் ஒரு காரணம். உணவில் போதுமான சத்து இல்லாத காரணத்தால், நரம்பில்  கோளாறு ஏற்பட்டு பேச்சுத்திறன் குறைபாடு உண்டாகிறது. இதற்கு ‘குளூட்டன் ப்ரீ டயட்’ தர வேண்டும். உணவு வகைகளை நன்றாக வேக வைத்துத்  தர வேண்டும். பதப்படுத்தப்பட்ட அரிசியை சமையலுக்கு பயன்படுத்தலாம். முழு தானியங்களாக எதையும் தரக்கூடாது.

    அவற்றையும் பதப்படுத்தப்பட்ட நிலையில் தரவேண்டும். 8 தினசரி உணவில் ஜின்க், விட்டமின் டி, ஈ சத்துக்குறைபாட்டின் காரணமாகவும்  இப்பிரச்னை அதிகரிக்கும். மெக்னீசியம் பற்றாக்குறையின் காரணமாக குழந்தையின் மொத்த வளர்ச்சியுமே பாதிப்புக்கு உள்ளாகும். இச்சத்துகள் அதிகம்  உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    8 க்ளூட்டன் ப்ரீ டயட், பச்சைக்காய்கறிகள், முட்டை, பட்டாணி வகைகள், சாண்ட் விச், உருளைக்கிழங்கு, பிரவுன் ரைஸ் ஆகியவற்றை  சேர்த்துக்கொள்வது அவசியம்.  8 காலை உணவில் பதப்படுத்தப்பட்ட அரிசி சாதம் ஒரு கப், கொழுப்பு நீக்கிய பால் அல்லது வாழைப்பழம் ஒன்று  கொடுக்கலாம்.

    11 மணிக்கு பழங்கள், முந்திரிப்பருப்பு, கொட்டை வகைகள். க்ளூட்டன் ப்ரீ சாக்லெட் சாப்பிடத் தரலாம். பிரவுன் ரைஸ், பிரட் டோஸ்ட், ஆப்பிள்  அல்லது ஆப்பிள் ஜூஸ் தரலாம். மதியம் பதப்படுத்தப்பட்ட அரிசி சாதத்துடன் வேகவைத்த முட்டை, பாலக் கீரை, வெள்ளரிக்காய், பீன்ஸ் உள்ளிட்ட  காய்கறிகளில் ஏதாவது ஒன்று தரலாம். அசைவ உணவை நன்றாக வேக வைத்து மசித்த நிலையில் தர வேண்டும். இரவில் எளிதில் ஜீரணம்  ஆகக்கூடிய உணவைக் கொடுக்கலாம்.

    இதை படித்த பின் உங்கள் நண்பர்களுக்கு கண்டிப்பாக தெரிவிக்கவும்...!

    By: Unknown On: 17:50
  • Share The Gag


  • இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :

    1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்க...

    2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்...

    3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க...

    4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.net க்கு மெயில் பண்னுங்க...

    5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்...

    6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க...

    7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்...!

    ஸ்ருதிஹாசனுக்கு இப்படியும் ஒரு பழக்கமா?

    By: Unknown On: 16:55
  • Share The Gag
  • தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தற்போது ஹரி இயக்கத்தில் விஷாலுடன் பூஜை படத்தில் நடித்து வருகிறார்.
    பிரபலங்கள் அனைவரும் தங்கள் ஓய்வு நேரங்களில் ஏதேனும் பொருட்களை வாங்கி சேகரிப்பார்கள், இசையமைப்பாளர் யுவன் நிறைய கை கடிகாரம் வாங்கி சேமிப்பாராம்.
    அதேபோல் நடிகை ஸ்ருதி படத்தில் வரும் சாகச ஹீரோக்களின் பொம்மைகளை சேகரிப்பதில் ஆர்வமுடையவராம்.
    - See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/106957/#sthash.FlCr6HWX.dpuf
    தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தற்போது ஹரி இயக்கத்தில் விஷாலுடன் பூஜை படத்தில் நடித்து வருகிறார்.

    பிரபலங்கள் அனைவரும் தங்கள் ஓய்வு நேரங்களில் ஏதேனும் பொருட்களை வாங்கி சேகரிப்பார்கள், இசையமைப்பாளர் யுவன் நிறைய கை கடிகாரம் வாங்கி சேமிப்பாராம்.

    அதேபோல் நடிகை ஸ்ருதி படத்தில் வரும் சாகச ஹீரோக்களின் பொம்மைகளை சேகரிப்பதில் ஆர்வமுடையவராம்.

    ஸ்ரீதிவ்யாவுக்காக இரண்டே மாதத்தில் சிக்ஸ்பேக் வைத்த அதர்வா..!

    By: Unknown On: 08:12
  • Share The Gag
  •  பாலிவுட்டை தொடர்ந்து சிக்ஸ் பேக் ட்ரெண்ட் கோலிவுட்டிலும் ஏற்கெனவே பரவிவிட்டது.

    பொல்லாதவன் படத்தில் தனுஷ் மூலம் அறிமுகமாகிய இந்த டிரெண்ட்டை சூர்யா, விஷால், சிம்பு என பலர் பின்பற்றினர்.

    அதர்வாவும் இந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.

    இவர் தற்போது நடித்து வரும் ஈட்டி படத்தில் தடகள வீரராக வருவதால் இந்த உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று சிக்ஸ்பேக்குக்கு மாறியுள்ளார்.

    இப்படத்திற்காக இரண்டே மாதத்தில் கடும்பயிற்சி எடுத்து இந்த சிக்ஸ்பேக் வைத்தாராம். சிக்ஸ்பேக்கை காட்டி ஹீரோயினை கவரும்விதமாகவும் காட்சிகள் உள்ளதாம்.

    புதுமுக இயக்குனர் ரவி அரசு இயக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்.

    குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது?

    By: Unknown On: 07:41
  • Share The Gag
  • மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இந்த மழைக்காலத்தில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். இதனால் சிறு குழந்தைகளுக்கு  அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள். இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பார்கள்  சாப்பிட சிரமப்படுவார்கள். அப்படி சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்து விடுவார்கள். சில சமயங்களில் சாய்ச்சல் கூட வரும். மலம் வெளியேற  சிரமப்படுவார்கள். அதனால் சிறு குழந்தைகள் சொல்ல தெரியாமல் அழுவார்கள். 

    பொதுவாக குழந்தைகளை இந்த காலகட்டத்தில் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சளி கட்டி அவதிப்பட்டால் வீட்டில் இருக்கும்  சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை நறுக்குமூலம், இவற்றை சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு 1/2 ஸ்பூன் எடுத்து தேனில்  குழைத்து கொடுத்தால் மார்பில் கட்டியிருக்கும் சளி நீங்கிவிடும். இவ்வாறு சளி பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு வயதுக்கு தகுந்தாற்போல  மருந்தினை எடுத்துக்கொள்ளலாம்.

    தூதுவளை, கண்டங்கத்திரி, ஆடாதோடா, துளசி இவற்றின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி  சூரணம் செய்து 1ஸ்பூன்  அளவு எடுத்து தேனிலோ அல்லது வெந்நீரீலோ கலந்து கொடுத்து வந்தால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, கபக்கட்டு போன்றவை குணமாகும். துளசி  இலைகளை பறித்து நசுக்கி அப்படியே சாறு எடுத்து மருந்துக்கு கொடுப்பார்கள். இப்படி செய்வது தவறு. ஏனெனில் துளசி இலையில் உள்ள மெல்லிய  சுனைகள் குழந்தைகளுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    சளி தொல்லை ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்

    மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் குழந்தைகளை வெளியே அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே அழைத்து செல்ல நேர்ந்தாலும்  தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். சிறு குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் துணியை உடனே மாற்றிவிட வேண்டும். ஈரப்பதம்  மிகுந்த இடத்தில் குழந்தைகளை தூங்கவைக்ககூடாது. குளிர் காலங்களில் ஈரக்காற்று படாதவாறு குழந்தைகளை கம்பளியால் சுற்றி குழந்தைகளின்  உடலையும், காதுகளையும் மூடவேண்டும்.

    குளிர் காலத்தில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிக்கவும். எளிதில் சீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.  குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தபட்ட உணவுகளை குழந்தைகளை தருவதை தவிர்க்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் முதலில் தங்களுக்கு  சளித்தொல்லை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தாய்க்கு சளி பிரச்சனை இருந்தால் பாலூட்டுவதால் குழந்தைகளுக்கும் சளி  பிடித்துவிடும். எனவே தலைகுளித்தால் நன்கு தலையை துவட்டி பிறகே பால் கொடுக்க வேண்டும்.

    அதே போல் மலச்சிக்கலுடன் குழந்தைகளுக்கு பால் கொடுத்தால் குழந்தைகளுக்கும் வயிற்று தொந்தரவுகள் உண்டாகும்.  எனவே பாலூட்டும்  தாய்மார்கள் தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மழச்சிக்கலைத் தவிர்க்க பழங்கள், காய்கள், கீரைகள், மற்றும் நார்சத்து  மிகுந்ந உணவுகளை சாப்பிடவேண்டும். குழந்தைகள் இருக்கும் இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பிரச்சனை..!

    By: Unknown On: 07:23
  • Share The Gag
  • அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் தங்களையும் அறியாமல் வேலை நேரத்தில் சிறுநீர் வெளியேறுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சினை. இளம் பெண்களும் இதனால் அவதிப்படுகிறார்கள். இயற்கையின் படைப்பில் பெண்களுடைய சிறுநீர் பைக்கும் சிறு நீர் வெளியேறும் யுரேத்திரா துவாரத்துக்கும் இடையே மிகக் குறைவான இடைவெளிதான்.

    அதாவது நான்கு முதல் ஐந்து செ.மீ. தான் உள்ளது. ஆனால் ஆண்களுக்கு இந்த இடைவெளி 15 செ.மீ. தவிர, சிறுநீர் வெளியேறும் துவாரம், மலம் கழிக்கும் பகுதி, பிறப்புறுப்பின் வாய் என எல்லாமே பெண்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

    இதில் ஏதாவது ஒன்றில் தொற்று ஏற்பட்டால் கூட அது மற்றவற்றை பாதிக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, சிறுநீர் வெளியேறும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் வலி, அடிவயிற்றில் வலி… இவையெல்லாம் சிறுநீர் பிரச்சினைக்கான அறிகுறிகள். இதற்கெல்லாம் காரணம் கிருமிகள்.

    இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் சிறுநீர் கழித்ததும் அந்தப் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக மாதவிடாயின் போது உறுப்புகளை சுத்தமாக தண்ணீர் கொண்டு முன் புறத்தில் இருந்து பின் புறமாக கழுவவேண்டும்.

    மாற்றி கழுவும் போது மற்ற உறுப்பு துவாரத்தில் உள்ள பாக்டீரியா கிருமிகள் சிறுநீர் கழிக்கும் துவாரத்தில் தங்கி தொற்று ஏற்பட வழிவகுக்கும். முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் “ஸ்ட்ரெட்ஸ் யூரினரி இன்கொன்டினன்ஸ்’ என்ற பிரச்சினையால் அவதிப்படுகின்றனர்.

    சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்சினையாலும் அதைச் சுற்றியிருக்கும் தசைகள் தளர்வடைவதாலும் இந்தப் பிரச்சினை ஏற்படும். இவர்கள் தும்மினாலோ, சிரித்தாலோ, இருமினாலோ, ஏதாவது எடையை தூக்கும் போதோ அல்லது குனிந்து நிமிரும் போதோ சிறுநீர் கசிவு ஏற்படும்.

    பொதுவாக மற்றவர்கள் 4 முதல் 6 மணி வரை சிறுநீரை அடக்க முடியும். ஆனால் இவர்களால் அடக்க முடியாது. சிறுநீர்ப்பை முழுக்க சிறுநீர் தேங்கி இருக்கும் போது லேசான தும்மல் வந்தால் கூட பெரும் அளவில் கசிவு ஏற்படும். சிலர் அடக்க முடியாமல் சிறுநீர் கழிக்கவும் வாய்ப்பு உள்ளது.

    இந்தப் பிரச்சினை சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றவர்கள், நரம்பியல் குறைபாடு உள்ளவர்கள், சீறுநீர் நோயாளிகள், தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள், உடல் பருமனாக உள்ளவர்களை அதிகம் பாதிக்கும். இதனால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் அசௌகரியத்தால் அவர்கள் மனதளவில் பாதிப்படைகிறார்கள்.

    வெளியே சொல்லவும் கூச்சப்படுகிறார்கள். ஆனால் இனி இந்தப் பிரச்சினையை கண்டு கூச்சப்படாமல் அதற்கான நிபுணரை அணுகி அறுவை சிகிச்சை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் .

    சுகப் பிரசவம் மூலம் குழந்தை பெற்றவர்களுக்கு சிறுநீர் பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு திருமணமான புதிதில் பல பெண்கள் சிறுநீர் பிரச்சினையால் அவதிப்படுவார்கள். இது அந்த காலகட்டத்தில் ஏற்படும் சாதாரண விடயம்தான்.

    நாளடைவில் அது சரியாகி விடும். சில சமயம் உடல் உறவின் போது அவர்கள் பிறப்புறுப்பில் ஏற்படும் பிரச்சினை காரணமாக சிறுநீர்ப் பை பாதிப்படையும். அதற்குத் தகுந்த மருந்துகளை எடுத்துக் கொண்டாலே போதும்.

    அதேபோல் பெண்களுக்கு வெள்ளைபடுதல் பிரச்சினை இருந்தாலும் அதை அலட்சியப்படுத்தாமல் சரி செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக யாருமே சிறுநீரை அடக்கக் கூடாது. ஒரு நாளைக்கு தேவையான இரண்டரை லிட்டர் தண்ணீரை அனைவரும் பருக வேண்டும்.

    கருத்தடை சாதனம் பயன்படுத்துவதாலும் பெண்களுக்கு சிறுநீர்ப்பை பாதிப்படையும். அதேபோல் பிரசவக் காலத்திலும் சிறுநீர் தொற்று வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஏனெனில் அது குழந்தையை பாதிக்கவும் வாய்ப்பிருக்கிறது.