Wednesday, 6 August 2014

தீராத தலைவலிக்கு நொச்சி இலை வைத்தியம்..!

By: Unknown On: 23:29
  • Share The Gag
  • தமிழகத்தில் பருவநிலை மாற்றமடைந்துள்ளது. வெயில், காற்று, மழை என மாறி மாறி தட்பவெப்பநிலை நிலவுகிறது. இதனால் மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், தும்மல், சளி பிடித்தல், இருமல், தலையில் நீர் ஏற்றம், தலைவலி மற்றும் காய்ச்சலால் அவதிக்கு ஆளாகின்றனர். சிக்குன்குன்யா, டெங்கு காய்ச்சல் மற்றும் விஷக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் நிலவேம்பு கசாயம் அனைத்து அரசு மருத்துவமனை சித்தா பிரிவிலும் கிடைக்கிறது. நோயாளிகள் குடித்தும், பவுடராக வாங்கியும் செல்கின்றனர்.

    இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி சித்த மருத்துவ உதவி மருத்துவ அலுவலர் செல்வமூர்த்தி கூறியதாவது: சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல் என சிகிச்சைக்கு வருகிறார்கள். சளி, காய்ச்சல் குணம் அடைய சித்தா மருத்தவ பிரிவில் தேவையான மருந்துகள் இருக்கிறது. உடல்வலியுடன் கூடிய விஷகாய்ச்சலுக்கு சித்த மருத்துவ பிரிவில் நிலவேம்பு என்ற கசாயம் காய்ச்சி வைத்து இருக்கிறோம். அதை இலவசமாக குடித்து செல்லலாம். தொடர்ந்து குடித்தால் நான்கு நாட்களில் குணமாகிவிடும். ஒருநாளைக்கு இருமுறை குடிக்கலாம். நாங்கள் மருத்துவமனையில் காலையில் மட்டுமே வழங்குகிறோம். இந்த கசாயத்தை வெறும் வயிற்றில் குடித்தால் பலன் அதிகம்.

    இதுபோக, தலைவலிக்கு நீர்கோவை என்ற மாத்திரையை உரைத்து பத்துபோட வேண்டும். ஆடாதோடை என்ற இலையை கசாயமாக செய்து தொடர்ந்து 4 நாட்கள் குடித்தால், சளி, காய்ச்சல் கட்டுக்குள் வரும். மேலும் நொச்சி இலை அல்லது கற்பூரவள்ளி இலையை சுடுநீரில் போட்டு ஆவிபிடித்தால், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், தும்மல், சளி பிடித்தல், இருமல், தலையில் நீர்ஏற்றம், தலைவலி குணமாகும். தாளிசபத்திரி சூரணம், வசந்தகுசுமாத்திரை, சுதர்சன மாத்திரை, சாந்த சந்திரோதயம் மாத்திரைகள் உட்கொண்டால் சளி மற்றும் காய்ச்சல் குணம் அடையும்.

    அயன்மாத்திரை சாப்பிட்டால் குழந்தை கறுப்பாக பிறக்குமா...?

    By: Unknown On: 22:41
  • Share The Gag
  •  கருவுற்ற பெண் முதல் 3 மாதங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மரபணுக்களில் பிரச்னை இருந்தால் கரு வளராமல் அழிந்து விடும். கர்ப்ப பை வாய் திறந்து இருந்தால் ரத்த போக்கு ஏற்படும். நஞ்சு கீழே இறங்கி இருக்க கூடாது.இது போன்ற பிரச்னைகள் துவக்க காலத்தில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கர்ப்பப்பை வாய் திறந்து இருந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும். இல்லையெனில் கை கால்கள் ஊனத்துடன் குழந்தை பிறக்கும். மூளை வளர்ச்சி குன்றியதாக இருக்கும்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்களை திருமணம் செய்தால் இது போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 30 வயதுக்கு மேல் கருவுற்றால் இது போன்ற பல்வேறு பிரச்னைகள் உருவாகும்.

    20-30வயதுக்குள் குழந்தை பெற்று கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த பருவ காலத்தில் தான் பிரச்னைகள் என்பது மிகவும் குறைவாக இருக்கும். பிறக்கும் குழந்தையும் நல்ல ஹெல்த்தாக இருக்கும். 19 வயதுக்கு கீழும், 35 வயதுக்கு மேல் குழந்தை பெறுவதை தவிர்க்க வேண்டும். திருமணம் முடிந்த தம்பதிகள் குழந்தை பிறப்பதை தள்ளிப்போடக்கூடாது. லேட்டாக குழந்தை பெற்று கொள்ளலாம் என்று பலர் நினைப்பார்கள். இதை தவிர்க்க வேண்டும். 22 வயதில் இருந்து 29 வயதுக்குள் இரு குழந்தைகளை பெற்றால் அந்த குடும்பம் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும்.

    4 மாதம் முதல் 7 மாதம் வரை கருப்பையில் உள்ள கரு முழு வளர்ச்சி பெற்று விடும். 22- 24 வாரங்களில் இருதயம் வளர்ச்சி பெற்று குழந்தையின் உடலில் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். இந்த காலத்தில் தான் பிரசர், சுகர் போன்றவை வர வாய்ப்புகள் அதிகம். மாதம் ஒரு முறை உரிய மருத்துவரிடம் சென்று செக்கப் செய்து கொள்ள வேண்டும். கருவுற்ற பெண்ணுக்கு இரு தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். 5வது மாதத்தில் கருப்பையில் இருக்கும் குழந்தையின் எடை 500 கிராம் இருக்கும்.

    8வது மாதத்தில் தான் குழந்தை முழு வளர்ச்சி பெற்று இருக்கும். 7வது மாதத்தில் இருந்து பிரசவமாகும் வரை எந்தவிதமான பயணத்தையும் மேற்கொள்ள கூடாது. கருவுற்ற பெண்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி தேவைப்பட்டால் மட்டுமே பயிற்சி செய்யலாம்.மற்றபடி நடைபயிற்சி தான் சிறந்தது. நஞ்சு கொடி சுற்றிஇருந்தால், துடிப்பு குறைந்து காணப்பட்டால் சுகபிரசவம் ஏற்படுவதில் பிரச்னை உருவாகும். இதனை சிசரியன் ஆப்ரேசன் மூலம் தான் குழந்தையை எடுக்க வேண்டும்.

    7வது மாதத்தில் இருந்து வாரம் ஒருமுறை மருத்துவரிடம் சென்று செக்கப் செய்து கொள்வது நல்லது. பிறக்கும் குழந்தையின் சாதாரண எடை என்பது 2.8 முதல் 3 கிலோ எடை கொண்டதாக இருக்கும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்தால் எந்தவித பாதிப்பும் கிடையாது. எத்தனை முறை வேண்டுமானாலும் செக்கப் செய்து கொள்ளலாம். கருவுற்ற பெண்கள் உப்பு, இனிப்பு, ஊறுகாய் உட்கொள்ள கூடாது. இனிப்பு அதிகமாக உட்கொண்டால் எடை அதிகரிக்கும். இடுப்பு வலி, அடிவயிற்றில் வலி உண்டானால் உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

    4வது மாதத்தில் இருந்து இருந்து ரத்தம் விரித்தியாக்கும் மாத்திரை, அயன் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். தினமும் தலா ஒரு மாத்திரையை எடுத்து கொள்ள வேண்டும். அயன் மாத்திரைகளை உட்கொண்டால் குழந்தை கறுப்பு நிறத்தில் பிறக்கும் என்பது தவறானது. கரு உருவாகி 3 மாத்திற்கு மேல் குழந்தை பிறந்து 3 மாதங்கள் வரை இவற்றினை உட்கொள்ளலாம். தாய் பால் நன்றாக சுரக்கும். குழந்தையின் எலும்பு வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

    மீன், முட்டை, சோயா பீன்ஸ், சிக்கன் போன்ற புரத சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ளலாம். ஜூஸ் வகைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். உயரம் குறைவான பெண், இடுப்பு அளவு மிகவும் குறுகியதாக இருந்தால் சுகபிரசவம் ஏற்படுவதில் சிரமம் இருக்கும். ஆண், பெண் குழந்தை ஆகியவை உரிய காலத்தில் தான் பிரசவமாகும். உரிய காலத்தில் குழந்தைகளை பெற்றால் அவற்றினை ஆரோக்கியமாக வளர்த்து ஆளாக்க முடியும் . தாய், சேயிடம் மகிழ்ச்சி ததும்பும்.

    குஷ்பு வாழ்வில் இனி நடிப்பு என்பதே இல்லை! காரணம் யார்?

    By: Unknown On: 22:17
  • Share The Gag
  • சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக 90களில் வலம் வந்தவர் குஷ்பு. இவரது பெயரில் இட்லி, கோவில் என்று அனைவரும் பைத்தியம் பிடித்து அலைந்தார்கள்.

    ஆனால் திடீரென்று திருமணம் செய்துக்கொண்டு நடிப்பதை குறைத்து, பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் தலைகாட்டி வந்தார். ஆனால் இனி அதற்கு முழுக்கு போட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கு காரணம் இவருக்கு ஏற்பட்ட தயாரிப்பாளர் ஆசை தான், அஜித், சிவகார்த்திகேயன் படங்களை தயாரிப்பது மட்டும் இல்லாமல் இன்னும் பல படங்களை தயாரிக்கவுள்ளார்.

    இதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவை குஷ்பு எடுத்துள்ளார்.

    திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!

    By: Unknown On: 21:36
  • Share The Gag
  • பொதுவாக திருமணம் என்று வரும் போது, நிறைய பேர் பெண்கள் தான் அதிகம் தியாகம் செய்கிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் பெண்களைப் போலவே ஆண்களும் ஒருசில முக்கியமானவற்றை இழக்கிறார்கள் என்பது தெரியுமா? ஆம், எப்படி பெண்கள் திருமணத்திற்கு பின் பெற்றோர்கள், தோழிகள் மற்றும் பலவற்றை இழக்கிறார்களோ, அதேப் போன்று ஆண்களும் அவர்களுக்கு சந்தோஷத்தைத் தரும் சிலவற்றை இழக்கின்றனர் என்பதை விட தியாகம் செய்கின்றனர் என்ற சொல்லலாம்.

    ஆனால் இப்படி இழப்பதை அவர்கள் ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அப்படி வெளிக்காட்டினால், பின் திருமண வாழ்க்கையில் உள்ள சந்தோஷம் மற்றும் ஆரோக்கியம் போய்விடும் என்பதால் தான். குறிப்பாக உலகிலேயே இந்தியாவில் உள்ள ஆண்கள் தான் திருமணத்திற்கு பின் நிறையவற்றை தியாகம் செய்கின்றனர். சரி, இப்போது அப்படி திருமணத்திற்கு பின் ஆண்கள் எவற்றையெல்லாம் இழக்கின்றனர் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்த்து சரிதானா என்று சொல்லுங்க

    அமைதி

    திருமணத்திற்கு பின் ஒவ்வொரு ஆணும் இழக்கும் விஷயங்களில் ஒன்று தான் அமைதி. அது என்னவோ தெரியவில்லை, மூன்று முடிச்சு போட்ட பின்னர் அது எங்கு சென்று ஒழிந்து கொள்ளுமோ தெரியவில்லை.

    அம்மா

     ஒவ்வொரு ஆணுக்கும் அம்மா என்றால் உயிர். ஆனால் அந்த உயிரை திருமணம் ஆன பின்னர் ஒரு கட்டத்தில் தாயுடன் இருக்கும் நாட்களை ஆண்கள் இழப்பார்கள். இந்த இழப்பு அவர்களது மனதில் எவ்வளவு பெரிய வடுவாய் இருந்தாலும், அதனால் உண்டான வலியை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். அதற்காக அம்மாவை காணவே செல்லமாட்டார்கள் என்று சொல்ல முடியாது.

    நண்பர்கள்

     பெண்கள் மட்டும் திருமணத்திற்கு பின் தோழிகளை இழப்பதில்லை. ஆண்களும் தான் திருமணத்திற்கு பின் நண்பர்களை இழக்கின்றனர். முற்றிலும் இழக்காவிட்டாலும், அவர்களுடன் நினைத்த நேரத்தில் எல்லாம் நேரத்தை செலவிட முடியாது. ஏனெனில் நண்பர்களை விட தன்னை நம்பி வந்த மனைவி தானே முக்கியம். அதனாலேயே பல ஆண்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை.

    ஆண் ஈகோ

    திருமணத்திற்கு முன், ஒரு பொருளைக் கூட நகர்த்தாமல் இருக்கும் ஆண்கள், திருமணத்திற்கு பின் ஈகோவை விட்டு பல்வேறு வேலைகளை மனைவிகளுக்காக செய்கின்றனர். அம்மாவிற்கு கூட இவ்வளவு வேலை செய்திருக்கமாட்டார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் மனதில் ஈகோ கொள்ளாமல் மனைவிக்காக அனைத்தையும் செய்வார்கள்.

    பணம்

    பணம் சம்பாதித்து தனக்கென்று எதையும் செலவிடாமல், மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஷாப்பிங் மற்றும் தியேட்டர் அழைத்துச் செல்வது, பரிசுகள் வாங்கிக் கொடுப்பது என்று பல செலவுகளை செய்வார்கள்.

    சுதந்திரம்

    முக்கியமாக சுதந்திரத்தை இழப்பார்கள். திருமணத்திற்கு முன், விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, ட்ரெக்கிங் செல்வது, சுற்றுலா செல்வது என்றெல்லாம் இருந்தவர்கள், திருமணத்திற்கு பின் மனைவியுடனேயே இருப்பார்கள்.

    காதலுக்கும் கல்யாணத்துக்கும் உள்ள வித்தியாசம்.. அருமை..!

    By: Unknown On: 17:45
  • Share The Gag
  • ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும்திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
    அதற்கு அந்த ஞானி அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ.அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ,அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை.நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.என்றார்.

    கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.ஞானி,எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி?''என்று கேட்டார். சீடன் சொன்னான்,குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன்.இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன.அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன்.அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே.வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.

    புன்முறுவலோடு ஞானி சொன்னார்,இது தான் காதல்

    பின்னர் ஞானி,சரி போகட்டும்,அதோ அந்த வயலில் சென்றுஉன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை.ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.''

    சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான்.ஞானி கேட்டார்,இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா?சீடன் சொன்னான்,இல்லை குருவே,இதை விட அழகான செடிகள் இருக்கின்றன.ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்துவிட்டேன்.நிபந்தனைப்படி,ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.'

    இப்போது ஞானி சொன்னார்,இது தான் திருமணம்

    உலக யதார்த்தமும் இதுவே ....

    சிறிய கர்ப்பப்பையும் பெருத்த கர்ப்பப்பையும்...!

    By: Unknown On: 17:05
  • Share The Gag
  • கர்ப்பப்பை..... பெண்மைக்கே இது தான் ஆதாரம். ஆனால் அது அளவில் சிறுத்தோ, சராசரி அளவை விட சற்று பெருத்தோ இருந்தால் பிரச்சனைதான்.  சின்னச்சின்ன அறிகுறிகளை வைத்துக் கண்டுபிடிக்கக் கூடிய இந்தப் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனித்தால் பெண்மைக்குப் பாதுகாப்பு என்கிறார்  மகப்பேறு மருத்துவர் சந்திரலேகா.

    பொதுவாக 18 முதல் 25 வயசு வரைக்குமான பெண்களோட கர்ப்பப்பை 7 முதல் 7.5 செ.மீ இருக்கணும். மாதவிலக்கின் போது ஈஸ்ட்ரோஜென்  மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் சுரந்து, கர்ப்பப்பையை வளரச் செய்யுது. மாதவிலக்கு சுழற்சி சரியில்லாம தடைப்படறப்ப,  கர்ப்பப்பையோட  வளர்ச்சி தடைப்பட்டு அளவுல சுருங்கிப் போகுது. இப்படிப்பட்டவங்களுக்கு அந்த ரெண்டு ஹார்மோன்களையும் கொடுத்தால் தான் மாதவிலக்கே  வரும்.

    இயற்கையாகவே சிலருக்கு கர்ப்பப்பையோட வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கலாம். இன்னும் சிலருக்கு மாதவிலக்கு சுழற்சி சரியில்லாததாலயும்  அப்படியிருக்கலாம். சினைப்பைல பிரச்சனை இருந்தா அதை சரியாக்கி ஹார்மோன் மருந்துகளும் கொடுத்தா, மாதவிலக்கு சுழற்சி முறைப்படும்.  கர்ப்பப்பையும் சாதாரன அளவுக்கு வரும். மொனோபாஸ் காலத்துல கர்ப்பப்பை தன்னோட அளவு லேர்ந்து கொஞ்சம், கொஞ்சமா சின்னதாக  ஆரம்பிக்கும். அதாவது மெனோபாஸூக்கு பிறகு ஒரு பெண்ணோட கர்ப்பப்பை, பூப்பெய்தறதுக்கு முன்பிருந்த மாதிரி சின்ன அளவுக்குத் திரும்பும்.

    கர்ப்பப்பை வளர்ச்சியில்லாதது எப்படி பிரச்சனைக்குரியதோ அதே மாதிரிதான் கர்ப்பப்பை வீக்கமும். கர்ப்பப்பை வளர்ச்சி சீரா உள்ள பெண்ணுக்கு  மாதத்துல 2 முதல் 3 நாளைக்கு மாதவிலக்கு இருக்கும். வெளியேறும் ரத்தத்தோட அளவு 50 முதல் 100 மி.லியா இருக்கும். 100 மி.லியை  தாண்டினா பிரச்சனை. அதன் விளைவா ரத்த சோகை உண்டாகும். இதயம், சீறுநீரகம், நுரையீரல்னு தலை முதல் கால் வரை உள்ள சகல  உறுப்புகளையும் பாதிக்கிற பிரச்சனை ரத்தசோகை, மாதவிலக்கின் போது, அதிக ரத்தப்போக்கு தீவிரமான வயிற்று வலி களைப்பு, வேலை செய்ய  முடியாமை எல்லாம் இருந்தா, அவங்களோட கர்ப்பப் பை வீக்கமா இருக்கலாம்னு சந்தேகப்படலாம்.

    மருந்துகள் முலம் கட்டுப்படுத்தலாமே தவிர, முழுக்க சரி பண்ண முடியாது. ஹார்மோன் மருந்துகள் உள்ள காப்பர் டி மாதிரியான சாதனங்களைப்  பொருத்தியோ, ஹிஸ்ட்ரோஸ்கோப் மூலமா கர்ப்பப்பை தோலை அகற்றக்கூடிய லேசர் சிகிச்சை மூலமோ இதுக்கு தீர்வு காணலாம்.  மாதவிலக்கு  சுழற்சி சரியில்லாத பெண்களும், கர்ப்பம் தரிக்காத பெண்களும், அதிக ரத்த போக்கு உள்ள பெண்களும் ஸ்கேன் மூலமா கர்ப்பப்பை அளவை தெரிஞ்சு  பிரச்சனைக்கேத்தபடி சிகிச்சையை எடுத்துக்கலாம்.

    கிளைமாக்ஸ் தான் உத்தமவில்லனின் ஹைலைட்டே!

    By: Unknown On: 16:43
  • Share The Gag
  • விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன், தனது விஸ்வரூபம்-2 பணிகளை தொடங்கினார். அந்தப்படமும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் நடந்து வந்தநிலையில் தனது நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் உத்தமவில்லன் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் கமல். இரண்டு காலகட்டங்களில் நடப்பது போன்று இப்படத்தின் கதைகளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    கமல் உடன் ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி, பார்வதி நாயர், ஊர்வசி, ஜெயராம், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் மற்றும் கே.விஸ்வநாத் என ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, கமல் மற்றும் லிங்குசாமி இருவரும் படத்தை தயாரிக்கின்றனர். தற்போது இந்தப்படத்தின் ஷூட்டிங்கும் கிட்டத்தட்ட முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் தொடங்கிவிட்டன.

    இந்நிலையில் ரமேஷ் அரவிந்த் அளித்த பேட்டி ஒன்றில், உத்தமவில்லன் பற்றிய ஹைலைட்டான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் உத்தமவில்லன் படத்தில் வரும் 10 நிமிட கிளைமாக்ஸ் காட்சிகள், கோலிவுட் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் ஒரு புதிய உணர்வை கொடுக்கும். இந்தப்படத்தில் கமல் தனது நடிப்பை ஒரு புதிய கோணத்தில் கொண்டு போய் உள்ளார் என்று கூறியுள்ளார்.

    வி.ஐ.பி. வீட்டுப்பிள்ளைகளுக்கு மட்டுமே உதவி இயக்குநர் வாய்ப்பு!

    By: Unknown On: 08:26
  • Share The Gag
  • கோடம்பாக்கத்தில் ஹீரோ சான்ஸ் கூட சுலபத்தில் கிடைத்துவிடும். உதவி இயக்குநராக வேலைக்கு சேருவதுதான் கஷ்டமோ..கஷ்டம். ஒரு காலத்தில் திறமையை மட்டுமே கருத்தில் கொண்டு உதவி இயக்குநராக சேர்த்துக் கொண்டார்கள் பிரபல இயக்குநர்கள். இப்போதெல்லாம் திறமைக்கு மதிப்பே இல்லை. சம்மந்தப்பட்ட இயக்குநரிடம் அவருக்கு வேண்டியப்பட்டவர்கள் யாராவது சிபாரிசு செய்தால்தான் உதவி இயக்குநராகவே சேர்த்துக்கொள்கிறார்கள். இந்த சூட்சுமம் தெரியாமல் தினமும் இயக்குநர்களின் அலுவலகத்துக்கு படை எடுத்துக்கொண்டும், அவர்களின் அலுவலக வாசலில் மணிக்கணக்கில் நின்று கொண்டும் எத்தனையோ பேர் காலத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    சில இளம் இயக்குநர்கள், தன்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வருபவர்களை கேவலமாக நடத்துவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஒரு இயக்குநர் என்ன செய்தார் தெரியுமா? உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்ட வந்தவர்களுக்கு தேர்வு நடத்தினார். அதாவது பரீட்டை வைத்து, கடைசியில் யாரும் பாஸாகவில்லை என்று அனுப்பி வைத்தார். இன்னொரு இளம் இயக்குநர் 100 பேர் வரை இண்டர்வ்யூ வைத்து யாரும் சரியில்லை என்று திருப்பி அனுப்பினார்.

    உதவி இயக்குநர்களை தேர்வு செய்வதில் வெற்றி இயக்குநர், ஒரு பாணியை பின்பற்றி வருகிறார். அதாவது வி.ஐ.பி.வீட்டுப்பிள்ளைகளை மட்டுமே அவர் உதவி இயக்குநராக வைத்துக்கொள்கிறார். இவர்களை வேலைக்கு வைத்தால் சம்பளம் கொடுக்க வேண்டிய தேவையில்லை. இயக்குநர்கள் வசந்த், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரது மகன்கள், இசையமைப்பாளர் தரணின் தம்பி என இந்த இயக்குநரிடம் உதவியாளராக உள்ள அனைவருமே வி.ஐ.பி.வீட்டு பிள்ளைகள்தான்.

    பிரமர முத்திரை - ஒவ்வாமையைப் போக்கி தூக்கத்தை வரவழைக்கும்..!

    By: Unknown On: 07:18
  • Share The Gag
  • பிரம்மன் உலகத்தை சிருஷ்டிக்கத் தேவையான சக்தியை வேண்டி தவம் செய்த போது இம்முத்திரையாலேயே தவம் செய்ததாகவும், இது வண்டு போன்ற தோற்றம் தரும் என்பதாலும் இதற்கு பிரமர முத்திரை என்ற பெயர் வழங்கப்படுகிறது.

    பயன்கள் :

    மனிதனது உடலில் உள்ள ஒவ்வாமை, பயங்களைப் போக்கவல்ல அற்புத சக்தி கொண்டது இம்முத்திரை.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது.

    தொற்றுகள் ஏற்படும்போது வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளால் ஏற்படுகின்ற வயிற்றுக் கோளாறுகள், சளி, சைனஸ் போன்ற தொல்லைகளுக்கும் இது நிவாரணம் தரும்.  நிம்மதியான உறக்கம், நல்ல செரிமாணம் தருவதற்கும் இம்முத்திரை பயன்படும்.

    செய்முறை :

    ஆள்காட்டி விரலை மடக்கிக் கொண்டு, நடு விரல் நுனியைப் பெருவிரல் நுனியோடு அழுத்திப்பிடித்து, மற்ற இரு விரல்களையும் நேராக வைக்கவும். இவ்வாறு தினமும் 15 நிமிடம் செய்ய வேண்டும்.