Wednesday, 6 August 2014

Tagged Under: ,

பிரமர முத்திரை - ஒவ்வாமையைப் போக்கி தூக்கத்தை வரவழைக்கும்..!

By: Unknown On: 07:18
  • Share The Gag
  • பிரம்மன் உலகத்தை சிருஷ்டிக்கத் தேவையான சக்தியை வேண்டி தவம் செய்த போது இம்முத்திரையாலேயே தவம் செய்ததாகவும், இது வண்டு போன்ற தோற்றம் தரும் என்பதாலும் இதற்கு பிரமர முத்திரை என்ற பெயர் வழங்கப்படுகிறது.

    பயன்கள் :

    மனிதனது உடலில் உள்ள ஒவ்வாமை, பயங்களைப் போக்கவல்ல அற்புத சக்தி கொண்டது இம்முத்திரை.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது.

    தொற்றுகள் ஏற்படும்போது வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளால் ஏற்படுகின்ற வயிற்றுக் கோளாறுகள், சளி, சைனஸ் போன்ற தொல்லைகளுக்கும் இது நிவாரணம் தரும்.  நிம்மதியான உறக்கம், நல்ல செரிமாணம் தருவதற்கும் இம்முத்திரை பயன்படும்.

    செய்முறை :

    ஆள்காட்டி விரலை மடக்கிக் கொண்டு, நடு விரல் நுனியைப் பெருவிரல் நுனியோடு அழுத்திப்பிடித்து, மற்ற இரு விரல்களையும் நேராக வைக்கவும். இவ்வாறு தினமும் 15 நிமிடம் செய்ய வேண்டும்.

    0 comments:

    Post a Comment