Wednesday, 6 August 2014

Tagged Under: ,

சிறிய கர்ப்பப்பையும் பெருத்த கர்ப்பப்பையும்...!

By: Unknown On: 17:05
  • Share The Gag
  • கர்ப்பப்பை..... பெண்மைக்கே இது தான் ஆதாரம். ஆனால் அது அளவில் சிறுத்தோ, சராசரி அளவை விட சற்று பெருத்தோ இருந்தால் பிரச்சனைதான்.  சின்னச்சின்ன அறிகுறிகளை வைத்துக் கண்டுபிடிக்கக் கூடிய இந்தப் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனித்தால் பெண்மைக்குப் பாதுகாப்பு என்கிறார்  மகப்பேறு மருத்துவர் சந்திரலேகா.

    பொதுவாக 18 முதல் 25 வயசு வரைக்குமான பெண்களோட கர்ப்பப்பை 7 முதல் 7.5 செ.மீ இருக்கணும். மாதவிலக்கின் போது ஈஸ்ட்ரோஜென்  மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் சுரந்து, கர்ப்பப்பையை வளரச் செய்யுது. மாதவிலக்கு சுழற்சி சரியில்லாம தடைப்படறப்ப,  கர்ப்பப்பையோட  வளர்ச்சி தடைப்பட்டு அளவுல சுருங்கிப் போகுது. இப்படிப்பட்டவங்களுக்கு அந்த ரெண்டு ஹார்மோன்களையும் கொடுத்தால் தான் மாதவிலக்கே  வரும்.

    இயற்கையாகவே சிலருக்கு கர்ப்பப்பையோட வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கலாம். இன்னும் சிலருக்கு மாதவிலக்கு சுழற்சி சரியில்லாததாலயும்  அப்படியிருக்கலாம். சினைப்பைல பிரச்சனை இருந்தா அதை சரியாக்கி ஹார்மோன் மருந்துகளும் கொடுத்தா, மாதவிலக்கு சுழற்சி முறைப்படும்.  கர்ப்பப்பையும் சாதாரன அளவுக்கு வரும். மொனோபாஸ் காலத்துல கர்ப்பப்பை தன்னோட அளவு லேர்ந்து கொஞ்சம், கொஞ்சமா சின்னதாக  ஆரம்பிக்கும். அதாவது மெனோபாஸூக்கு பிறகு ஒரு பெண்ணோட கர்ப்பப்பை, பூப்பெய்தறதுக்கு முன்பிருந்த மாதிரி சின்ன அளவுக்குத் திரும்பும்.

    கர்ப்பப்பை வளர்ச்சியில்லாதது எப்படி பிரச்சனைக்குரியதோ அதே மாதிரிதான் கர்ப்பப்பை வீக்கமும். கர்ப்பப்பை வளர்ச்சி சீரா உள்ள பெண்ணுக்கு  மாதத்துல 2 முதல் 3 நாளைக்கு மாதவிலக்கு இருக்கும். வெளியேறும் ரத்தத்தோட அளவு 50 முதல் 100 மி.லியா இருக்கும். 100 மி.லியை  தாண்டினா பிரச்சனை. அதன் விளைவா ரத்த சோகை உண்டாகும். இதயம், சீறுநீரகம், நுரையீரல்னு தலை முதல் கால் வரை உள்ள சகல  உறுப்புகளையும் பாதிக்கிற பிரச்சனை ரத்தசோகை, மாதவிலக்கின் போது, அதிக ரத்தப்போக்கு தீவிரமான வயிற்று வலி களைப்பு, வேலை செய்ய  முடியாமை எல்லாம் இருந்தா, அவங்களோட கர்ப்பப் பை வீக்கமா இருக்கலாம்னு சந்தேகப்படலாம்.

    மருந்துகள் முலம் கட்டுப்படுத்தலாமே தவிர, முழுக்க சரி பண்ண முடியாது. ஹார்மோன் மருந்துகள் உள்ள காப்பர் டி மாதிரியான சாதனங்களைப்  பொருத்தியோ, ஹிஸ்ட்ரோஸ்கோப் மூலமா கர்ப்பப்பை தோலை அகற்றக்கூடிய லேசர் சிகிச்சை மூலமோ இதுக்கு தீர்வு காணலாம்.  மாதவிலக்கு  சுழற்சி சரியில்லாத பெண்களும், கர்ப்பம் தரிக்காத பெண்களும், அதிக ரத்த போக்கு உள்ள பெண்களும் ஸ்கேன் மூலமா கர்ப்பப்பை அளவை தெரிஞ்சு  பிரச்சனைக்கேத்தபடி சிகிச்சையை எடுத்துக்கலாம்.

    0 comments:

    Post a Comment