Tuesday, 8 July 2014

‘கில்லாடி போலீஸ்’ பலே - திரைவிமர்சனம்!

By: Unknown On: 23:47
  • Share The Gag
  • ஜெட்லி, வேன் ஜாங், மிச்செல்லி சென் மூவரும் போலீசில் ஒரு குழுவாக இருந்து வேலை செய்கின்றனர். வேன் ஜாங்கின் குறும்புத்தனத்தால் ஒவ்வொரு தடவையும் இவர்கள் குழு தோல்வியையே சந்திக்கிறது. இதனால், மேலதிகாரியிடமும் கெட்ட பெயர் வாங்குகின்றனர்.

    இந்நிலையில், அந்த நகரில் ஒரு நடிகர், நீச்சல் வீரர், டான்ஸ் கலைஞர் மூன்று பேரும் மர்மமான முறையில் இறந்து போகின்றனர். இந்த மர்ம சாவை கண்டறியும் வேலை ஜெட்லியின் குழுவுக்கு வருகிறது. மூவரின் இறப்பு ஒரு கொலைதான் என்பதை இவர்கள் கண்டறிகின்றனர். ஆனால், உடம்பில் எந்த காயமும் இல்லாமல் அவர்கள் எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்பது தெரியாமல் விழிபிதுங்குகின்றனர்.

    இந்நிலையில், மூவரின் உடல் அடக்கத்துக்கு ஒரு பெண் தொடர்ச்சியாக வந்திருப்பதை போட்டோ மூலம் கண்டறிகிறார்கள். அவள் யார் என்பதை தேடி கண்டுபிடிக்கின்றனர். அவள், சிசி லியூ என்ற நடிகை. அவளை காதலிப்பதாக கூறியவர்கள்தான் கொலையுண்டவர்கள். சிசி லியூவின் அக்காவான யான் லியூ தனது தங்கையை காதலிப்பதாக கூறுபவர்களிடம் நெருக்கமாக பழகி வருகிறார். இது சிசி லியூவுக்கு பிடிக்கவில்லை. தனது 4-வது காதலருடன் அவள் நெருக்கமாக பழகுவது தனது அக்காவை வெறுக்கும் அளவிற்கு சிசி லியூவை கொண்டு செல்கிறது.

    இந்நிலையில், 4-வது காதலன் சிசி லியூவின் அக்காவை பிரிந்து இவளிடம் வந்து தனது காதலை சொல்கிறான். அவளை திருமணம் செய்து கொள்வதாகவும் சிரித்துக் கொண்டே சொல்கிறான். அப்போது திடீரென கிழே விழுந்து இறந்து போகிறான். அவனது உடலை மருத்துவமனையில் வைத்து ஆய்வு செய்யும்போது, அவனது கையில் ஒரு சிறு ஊசி குத்தியிருப்பது தெரிகிறது. அதனால்தான் அவன் இறந்து போனதும் தெரிய வருகிறது ஜெட்லி குழுவுக்கு.

    இந்த மர்ம ஊசியை அவன் மீது பாய்ச்சியது யார்? சிசி லியூவின் காதலர்களை கொல்ல காரணம் என்ன? என்பதை ஜெட்லி குழு எவ்வாறு கண்டுபிடித்தது என்பதே மீதிக்கதை.

    ஜெட்லி படத்தில் சில காட்சிகளே வந்து போகிறார். படத்தின் ஆரம்பத்தில் நடக்கும் சண்டைக் காட்சிகளிலும், இறுதியில் நடக்கும் சண்டைக் காட்சிகளிலும் தனது பலத்தை நிரூபித்துள்ளார். ஆவேசமான இந்த இரண்டு சண்டைக் காட்சிகளும் சீட்டின் நுனிக்கே நம்மை இழுத்துச் செல்கிறது.

    படம் முழுக்க வேன் ஜாங்தான் வலம் வருகிறார். படத்தில் இவர் செய்யும் சேஷ்டைகள் வெகுவாக ரசிக்க வைக்கின்றன. அழகான பெண்களை கண்டு ஜொள்ளு விடுவது, அவர்களிடம் வலியச் சென்று பேசுவது என ஒவ்வொரு காட்சியிலும் அழகாக நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் தூள் பறத்துகிறார்.

    இவர்களது குழுவுக்கு தலைவராக வரும் மிச்செல்லி சென் குறும்பு பார்வையால் அனைவரையும் கவர்கிறார். வேன் ஜாங்கோடு இவர் செய்யும் குறும்புத்தனங்கள் ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கின்றன. நடிகையாக வரும் சிசி லியூ மென்மையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய அக்காவாக வரும் யான் லியூ கவர்ச்சியால் சுண்டி இழுக்கிறார்.

    சண்டைக் காட்சிகளை பிரமாதமாக எடுத்திருக்கிறார் இயக்குர் மிங் வாங். ஆனால் ஒரு போலீஸ் கதைக்கான விறுவிறுப்பு இல்லாதது ஏமாற்றமே. அதேபோல், படத்தின் நீளத்திற்காக தேவையில்லாத காட்சிகளை புகுத்தி போரடிக்க வைத்திருக்கிறார். யிங் வாக் வாங்கின் இசை படத்திற்கு கூடுதல் பலம். கென்னியின் கேமரா காட்சிகளை கோர்வையாகவும், சண்டைக் காட்சிகளை அருமையாகவும் படம்பிடித்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘கில்லாடி போலீஸ்’ பலே.


    சினிமாவில் பின்னணிப் பாடகர் ஆக வாய்ப்பு: ஆன்லைன் போட்டி ..!

    By: Unknown On: 23:35
  • Share The Gag
  • ஆன்லைனில் பாடி அசத்துங்க... சூப்பர் சிங்கர் போட்டியில பங்கேற்று வெற்றி பெற்று பின்னணிப் பாடகர் ஆகுங்க என்று இளம் இசையமைப்பாளர் தரண்குமார் அழைப்பு விடுத்துள்ளார். இன்றைக்கு பெரும்பாலான தொலைக்காட்சிகளில் சிறந்த பாடகரை தேர்வு செய்வதற்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் பாடி தேர்வு செய்யப்படுபவர்கள் சினிமாவில் பின்னணிப் பாடகர்களாக உலாவருகின்றனர். சினிமாவில் பின்னணிப் பாடகர் ஆக வாய்ப்பு: ஆன்லைன் போட்டி இதேபோல ஆன்லைன் சூப்பர் சிங்கர் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் உள்ள பாடகர்கள் பங்கேற்று பாடும் வகையில் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

    www.facebook.com/onlinesupersinger அல்லது www.onlinesupersinger.com என்ற இணையங்களில் நீங்கள் பாடிய வீடியோவை பதிவேற்றம் செய்யலாம். அதிக லைக் பெரும் பாடகர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். சினிமாவில் பின்னணிப் பாடகர் ஆக வாய்ப்பு: ஆன்லைன் போட்டி சிறந்த பாடகராக தேர்வு செய்யப்படுபவர், இசையமைப்பாளர் தரண் இசையில் பாட வாய்ப்பு வழங்கப்படும்.

    வரிசை வேண்டாம், வாய்ப்பை தேடி நீங்க ஓட வேண்டாம். இருந்த இடத்தில் இருந்தே, பாடலைப் பதிவு செய்து சினிமாவில் பின்னணிப் பாடகராகும் வாய்ப்பினைப் பெறுங்கள் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர் ஆகஸ்ட் 10 தேதி ஆகஸ்ட் 10ம் தேதி சென்னை சிட்டி சென்டரில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படும். இது குறித்து மேலதிக தகவல்களுக்குbiggevent4u@gmail.com அல்லது 9677006321 என்ற செல்பேசியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    இடக்கைப் பழக்கம்! ஏன் வருகிறது?

    By: Unknown On: 23:28
  • Share The Gag
  •            சில நாடுகளில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13ம் தேதி, இடக்கைப் பழக்கமுள்ளவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் இடக்கை  பழக்கமுள்ளவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

    நம்மில் அதிகமானோர் வலதுகைப் பழக்கமுள்ளவர்களாக இருக்கிறோம். இடது கைப்பழக்கமுடையோர் செயல்களைக் கண்டு வியக்கிறோம். உலக மக்களில்  நூற்றுக்கு நான்கு பேர் இடது கைப் பழக்கமுள்ளோர்களாக இருக்கின்றார்கள் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

    * வலதுகைப் பழக்கம், இடதுகைப் பழக்கம் இவையெல்லாம் எதைப் பொருத்து அமைகின்றன? மூளையைக் கட்டுப்படுத்தும் பகுதியைப் பொருத்தே அமைகின்றன.

    * இடதுகைப் பழக்கம் பல பிரபலங்களுக்கு இருந்திருக்கிறது. மாவீரன் அலெக்ஸாண்டர், ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ, லியனார்டோ டாவின்ஸி, விஞ்ஞானி  பெஞ்சமின் ஃபிராங்க்ளின், புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின், டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா, நடிகை மர்லின் மன்றோ,  அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் - இப்படி ஒவ்வொரு துறையிலும் இடக்கை பழக்கமுடையோர் இருக்கின்றனர்.

    * இந்தப் பட்டியலில் லியனார்டோ டாவின்சி மேலும் ஒரு சிறப்புப் பெறுகிறார். அது என்ன சிறப்பு?

    * பொதுவாக வலக்கையாலே கண்ணாடி பிம்பம் போல எழுதுவது கடினம். ஆனால் டாவின்சியோ கண்ணாடி பிம்பம் போல இடது கையால் எழுதும் ஆற்றல்  பெற்றவராம்.

    * பொதுவாக நமது மூளையின் வலது பக்கம் உடலின் இடது பக்கத்திற்கும் மூளையின் இடது பக்கம் உடலின் வலது பக்கத்திற்கும் சமிக்ஞைகளை அனுப்பிக்  கட்டுப்படுத்துகின்றன. மூளைக்கும் உடலின் பக்கத்திற்கும் என்ன தொடர்பு?

    * மூளையின் ஒரு பகுதியில் உள்ள சில நரம்புகள் கழுத்துப் பகுதி வழியே கடந்து உடலின் எதிர் பாகத்தில் முடிவடையும். மூளையில் உள்ள இந்த நரம்புகள்தான்  நம் கைப்பழக்கத்தை உண்டாக்குகின்றன என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாக உள்ளது.

    * 1648ம் ஆண்டு சர் தாமஸ் பிரவுன் என்பவர் எழுதிய வல்கர் எர்ரர்ஸ் (Vulgar Errors) என்ற நூலில் முதன்முதலாக இடக்கைப் பழக்கத்திற்கும் மூளைக்கும்  உள்ள தொடர்பைப் பொது மக்களுக்குத் தெரிவித்தார்.

    * இடக்கைப் பழக்கம் பற்றிப் பலர் ஆய்வு செய்துள்ளனர். அன்னீட் (Anneet) என்பவர் செய்த ஆய்வின்படி இடக்கைப் பழக்கமுள்ளோர்களை இரு வகையாகப்  பிரித்தார். இடக்கைப் பழக்கம் பரம்பரையாகத் தோன்றுகிறது என்றும் பரம்பரைக் காரணமில்லாமல் தனித்தும் தோன்றுகிறது என்றும் வகைப்படுத்தினார்.

    * மெக்கால் (Mchal) என்பவர் நடத்திய ஆய்வின்படி வலக்கைப் பழக்கமுடையோரின் மூளையின் சிறு கிளைகள் (Occipital Horns), பக்கவாட்டு இரத்தக் குழாய்கள்  ஆகியவை மூளையின் இடப்பக்கத்தில் இருந்தவற்றைக் காட்டிலும் ஐந்து மடங்கு நீளமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இடக்கைப் பழக்கமுடையோர்களுக்கு இந்த  அமைப்பு நேர்மாறாக இருக்கிறதாம்!

    * நரம்புக் கோளாறுடைய குழந்தைகள் பெரும்பாலோர் இடக்கைப் பழக்கம் உடையவர்களாகக் காணப்படுகிறார்கள். இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகள்  பெரும்பாலோர் பிறப்பு காலத்தில் டிரோமா (Birth Trauma) என்ற தாக்குதலுக்கு உட்படுவதாக பாகான் (Bakan) என்ற மருத்துவர் கூறுகிறார்.

    * இடக்கைப் பழக்கமுடையோரை வலக்கைப் பழக்கத்திற்கு மாற்றினால் சிலருக்குத் திடீர் என திக்குவாயாக மாறிட வாய்ப்பு உள்ளதாம். உதாரணம்: இங்கிலாந்தை  ஆண்ட ஆறாம் ஜார்ஜ் மன்னர்.

    * பெரும்பாலான பொருட்கள் வலக்கைப் பழக்கமுடையோர் பயன்படுத்தக் கூடியன வாகவே தயாரிக்கப்படுகின்றன. ஆனால் சில வெளிநாடுகளில் கத்திரிக்கோல்,  கோல்ஃப் விளையாட்டு விளையாடப் பயன்படும் மட்டை போன்ற பொருட்கள் இடக்கைப் பழக்கமுடையோர் பயன்படுத்த ஏதுவாகவும் தனிப்பட்ட முறையில்  தயாரிக்கப்படுகின்றன. இது இடக்கைப் பழக்கமுடையோருக்கு ஒரு ஆதரவான இன்பச் செய்தி!

    விரைவில் முண்டாசுப்பட்டி - 2!

    By: Unknown On: 19:51
  • Share The Gag
  • குறும்படமாக இருந்து பின் முழுநீளப் படமாக உருவாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் 'முண்டாசுப்பட்டி'. விஷ்ணு, நந்திதா, காளிவெங்கட் ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை ராம் குமார் இயக்கியிருந்தார்.

    ஷான் ரோல்டன் இசையமைத்த இப்படத்தை சி.வி.குமார் தயாரித்திருந்தார். இப்படம் வெளியான 25 நாட்களில் 10 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது.

    இதன் வசூலைப் பார்த்த படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் முண்டாசுப்பட்டியின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

    படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யாரும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முதல் பாகத்தை இயக்கிய ராம் குமாரே இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரகசியமாய் நடந்து முடிந்த சரவணன் மீனாட்சி திருமணம்!

    By: Unknown On: 19:35
  • Share The Gag
  • விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்தவர்கள் மிர்ச்சி செந்திலும், ஸ்ரீஜாவும். இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டது பரபரப்பான செய்தியாகியிருக்கிறது.

    இதற்கு முன் இவர்கள் இணைந்து நடித்த 'மதுரை' தொடரில் இவர்களின் கதாபாத்திரப் பெயர்தான் சரவணன் மீனாட்சி. அதையே தொடரின் பெயராக்கி புதிய தொடர் தொடங்கப்பட்டது. இந்தத் தொடர் அமோக வரவேற்புடன் ரசிகர்களைக் கவர்ந்தது.

    இந்தத் தொடரில் இவர்கள் நடித்த போதே பலரும் உண்மையிலேயே இவர்கள் கணவன் மனைவிதான் என நினைத்தனர். இப்போது அது நிஜமாகிவிட்டது.

    சமீபத்தில் செந்தில் - ஸ்ரீஜா திருமணம் திருப்பதியில் ரகசியமாய் நடந்து முடிந்தது. இது பற்றிய எந்த தகவலும் வெளியிடாமல் நடந்த இவர்களின் திருமணம் அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருக்கிறது.

    படப்பிடிப்பில் கமலுக்கு காயம் : உத்தமவில்லன் படப்பிடிப்பு நிறுத்தம்!

    By: Unknown On: 08:01
  • Share The Gag
  • விஸ்வரூபம் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட கமல்ஹாசன், தற்போது உத்தமவில்லன் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தில் விரைவாக முடிக்க திட்டமிட்ட படக்குழுவினர், விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் கமல்ஹாசன் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கியபோது, கமலின் காலில் காயம் ஏற்பட்டதாம்.

    உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற்று வரும் கமல்ஹாசனிடம் மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளதால், தற்போது உத்தமவில்லன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.