Tuesday, 5 August 2014

கத்தி குறித்து தொல்.திருமாவளவன் முடிவு! முருகதாஸ் அதிர்ச்சி!

By: Unknown On: 23:16
  • Share The Gag
  • தமிழ் சினிமாவின் பெருமைகளை இந்திய அளவில் கொண்டு சென்றவர் முருகதாஸ். இவர் தற்போது இளைய தளபதி விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

    தற்போது இந்தப்படத்தை ராஜபக்சே நண்பர் தான் தயாரிக்கிறார் என்று வதந்தி பரவ, கத்தி படத்தை வெளியிடக் கூடாது என்று சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்களை சந்தித்து முருகதாஸ் விளக்கம் தந்து வருகிறார்.

    இதில் விடுதலை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்த போது, ’ இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜபக்சேவின் நண்பர் என்று தெரிந்தால் நாங்கள் ஒரு போதும் இப்படத்திற்கு ஆதரவு தர மாட்டோம் மேலும் படத்தை வெளியிடவும் தடை செய்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

    அரிக்கும் உச்சந்தலைக்கு சில பயனுள்ள வீட்டுச் சிகிச்சைகள்...!!!

    By: Unknown On: 22:34
  • Share The Gag
  • பொடுகுத் தொல்லையா? சீப்புகளில் வெள்ளை செதில்களா? கருப்பு ஆடைகளில் வெள்ளை நிற தூசிகள் படிகிறதா? உங்களுடைய உச்சந்தலையில் நமைச்சலா? மேற்கூறிய எல்லா கேள்விகளுக்கும் உங்களுடைய பதில் ஆம் எனில், உச்சந்தலை சரும நோயினால் கண்டிப்பாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என அர்த்தம். உச்சந்தலை சரும நோய் என்பது உச்சந்தலையில் மேல் சருமத்தை வறண்டு போகச் செய்து விடும். வறண்ட மேல் சருமம் தனியே பிரிந்து மீன் செதில்கள் போன்ற தோற்றத்தை தரும். சில நேரங்களில் இது வெடிப்பை உருவாக்கிவிடும். சில சமயங்களில் அந்த செதில்கள் வழியே இரத்தம் வரலாம். அவ்வாறு இரத்தம் வந்தால் மருத்துவரை உடனடியாக ஆலோசிப்பது மிகவும் நல்லது. இந்த பிரச்சனையை எளிதில் வீட்டிலிருந்தபடியே குணப்படுத்தலாம். இதற்கு நாம் காலங்கலமாக பயன்படுத்தும் வழிமுறைகள் கைக்கொடுக்கின்றன. அதிகம் பணம் பிடுங்கும் நவீன மருத்துத்தை காட்டிலும் பழங்கால வழிமுறைகள் உச்சந்தலை சரும பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கின்றன. இப்போது அத்தகைய சிறந்த வழிமுறைகளைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.

    உலர வைக்கும் முறை

    ஹேர் ட்ரையர் (Hair dryer) பயன்படுத்துவதை முதலில் நிறுத்த வேண்டும். மேலும் சூடான நீரில் நனைத்த துணியை தலையில் கட்டும் சிகிச்சையை எடுத்துக் கொண்டிருந்தால் அதையும் முற்றிலும் நிறுத்தி விட வேண்டும். ஏனெனில் அது உச்சந்தலையை கடுமையாக உலர்த்தி, பொடுகுகளை அதிகரிக்க செய்து விடும். மேலும், பொடுகு மற்றும் அரிப்பு தொல்லையை அதிகரிக்கும். ஆகவே கேசத்தை காய வைக்க வேண்டுமெனில், ஒரு மென்மையான துண்டு கொண்டு மெதுவாக தேய்க்கலாம். அது உச்சந்தலையை பாதுகாக்கும்.

    பொடுகுத் தொல்லை

    சரும வறட்சியால், ஸ்கால்ப்பில் வெள்ளை செதில்கள் ஏற்படுவதோடு, தலையில் அரிப்பையும் ஏற்படுத்திவிடும். எனவே, பொடுகை நீக்குவது மட்டுமே பிரதான பணியாக இருக்க வேண்டும். அதற்கு மூலிகை பொடுகு எதிர்ப்பு ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். இது மிகவும் லேசானது. மேலும் இதில் எந்தவித இரசாயன பொருட்களும் கிடையாது. இதை மிக மெதுவாக உச்சந்தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும்.

    ஈரப்பதம்

    பொடுகுத் தொல்லை பிரச்சனையானது வறட்சியால் ஏற்படுகிறது. எனவே உச்சந்தலை சரும பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, அதை வறண்டு போகாமல் பாதுகாப்பது மட்டுமே ஒரே சிறந்த வழியாகும். நல்லெண்ணையை தலையில் தேய்த்து எண்ணெய் குளியல் எடுப்பது தொன்று தொட்டு வரும் ஒரு பழக்கமாகும். இது தலையின் வறட்சியை போக்கி பொடுகுத் தொல்லையை குறைத்து பல அற்புதங்களை செய்கிறது. அதற்கு இரவு படுக்கைக்கு செல்லும் பொழுது, உச்சந்தலையில் எண்ணையை தடவ வேண்டும். அதிலும் வைட்டமின் ஈ நிறைந்துள்ள எண்ணெயை பயன்படுத்தி உச்சந்தலைக்கு மசாஜ் செய்யலாம். ஏனெனில் வைட்டமின் ஈ முடிகளுக்கு மிகவும் நல்லது.

    ஆப்பிள் சீடர் வினிகர்

    ஆப்பிள் சீடர் வினிகரானது உச்சந்தலையின் வறட்சியை குறைப்பதில் பெரிதும் உதவுகிறது. ஒரு 1/4 கப் வினிகர் மற்றும் 1/4 கப் தண்ணீரை சேர்த்து ஒரு கலவையை தயார் செய்து, அந்த கலவையை உச்சந்தலையில் மெதுவாக தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் தலையை நன்றாக அலசி விட வேண்டும்.

    தேயிலை மர எண்ணெய் (Tea tree oil)

    இது சிறந்த பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மைகளை கொண்ட எண்ணெய் ஆகும். இந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவி வர, பொடுகு மற்றும் உச்சந்தலை நோய்கள் குணமாகும். இரண்டு தேக்கரண்டி எண்ணெய்க்கு ஒரு தேக்கரண்டி தண்ணீர் விட்டு, எண்ணெயை நீர்த்து போகச் செய்து, பின் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால், உச்சந்தலை பிரச்சனைகள் நீங்கும்.

    எலுமிச்சை சாறு

    ஒரு கப் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து, உச்சந்தலையில் நேரடியாக தேய்க்க வேண்டும். சுமார் முப்பது நிமிடங்கள் ஊற வைத்து, தலையை அலசவும். இது நல்ல பலன் தந்தாலும், ஸ்கால்ப்பில் வெடிப்பு இருந்தால் இதை பின்பற்ற கூடாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

    தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி.... முயற்சித்துப் பாருங்கள்..!

    By: Unknown On: 20:23
  • Share The Gag
  • தரையில் முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் உடலின் பக்கத்தில் தளர்ந்த நிலையில் வைக்கவும்..தலை,கைகள்,கால்கள் மற்றும் உடல் முழுவதும் மிகவும் தளர்ச்சியான நிலையில் வைக்கவும்.                                                                                                   

    பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே தலையை தூக்காமல் கைகளைக் கொண்டு தரையை அழுத்தாமல் வைக்கவும். கால் கட்டை விரல்களை சேர்த்து வைத்து மேலே தூக்கவும். ரொம்பவும் மேலே தூக்கி விட கூடாது.

    திருப்பி கால்களை கீழே இறக்கும் போது மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மெதுவாக இறக்கவும் குதிங்கால்களை எக்காரணத்தைக் கொண்டும் தரையை தொடக் கூடாது.

    அப்படி தொட்டு விட்டால் பயிற்சி முடிந்துவிடும்.இப்படி ஒரு நாளைக்கு 25 முறை செய்ய வேண்டும் புதியவர்கள் 10 முறை செய்தால் போதும் நன்கு பயிற்சி கைகூடியபிறகு 50 முறை கூட செய்யலாம்.

    இந்த பயிற்சியின் மூலம் எற்படும் பலன்கள்......

    இந்த பயிற்சி முழுக்க முழுக்க வயிற்றுக்காகவே உள்ள பயிற்சி இப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வந்தால் தொந்தி குறைவது உறுதி பெருங்குடல், சிறுகுடல் அனைத்தும் தூண்டப்பட்டு நன்கு வேலை செய்வதால் வயிறு மந்தமான நிலையில் பசியெடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும்.

    இடுப்பு தேவையில்லாத சுற்று சதை குறைந்து வலிமை பெறும் முதுகெலும்பும் வலிமை பெறும் தொடை பகுதியும் வலிமை பெறும்.

    கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்...............!!

    By: Unknown On: 19:09
  • Share The Gag
  • உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் பெறுவது ஓட்ஸ் ஆகும் . இந்த ஓட்ஸ்சில் பொதுவாக நார்சத்து அதிகம், ஓட்ஸ் நமது உடலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதுடன் , சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பல் நோய்களுக்கு எதிராக நமது உடலை பாதுகாக்கிறது.

    ஓட்ஸில் 'பீட்டா-குளூ கான்' எனும் ஒருவகை சிறப்பு நார்ச் சத்து அடங்கி உள்ளது. இந்த நார் சத்து நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது மேலும் நல்ல கொழுப்பின்_அளவு மாறாமல் அப்படியே இருப்பது தான் இதன் சிறப்பு அம்சம் .

    இருதயநோய் வராமல் தடுக்கவும், கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கவும் உலகம் முழுவதும் இருக்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரே முழுதானிய உணவு இந்த ஓட்ஸ் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை .

    அழைத்தவர் யார் என்று அறிய ஒரு அப்பிளிகேசன்

    By: Unknown On: 17:42
  • Share The Gag
  • அழைத்தவர் யார் என்று அறிய ஒரு அப்பிளிகேசன் என்றவுடன் அது எந்த ஒரு அப்பிளிகேசனும் இல்லாமலே  பார்க்கலாம்  என்று எண்ண தோன்றுகிறது அல்லவா ? ஆனால்  நம்முடைய கைத்தொலைபேசிகளில்   நண்பர்கள் பட்டியலில்  உள்ளவர்கள்  அழைக்கும் போது மட்டுமே அவர்கள் பெயர்கள்  தோன்றும்  ஆனால்  பட்டியலில் இல்லாத புதியவர்கள் அழைக்கும் போது அவர்கள் பெயர்கள் தோன்றினால் எப்படி இருக்கும்  . ம்ம் நல்லதே ஆணால் அது நடக்க வாய்ப்பு இல்லை என்று நினைப்பவர்களுக்கு  ஒரு நல்ல செய்தி  அவ்வாறு   செயற்பட கூடிய ஒரு மென்பொருள் இருக்கின்றது அது பற்றி தான் இந்த பதிவு

    இன்று அதிகமானோரால் பயன்படுத்த படும் ஆன்ட்ராய்ட்  கைத்தொலைபேசிகளிலும்  ஐ போன்களிலும்  பயன்படுத்த கூடிய  வாறு இருக்கின்றது இந்த அப்பிளிகேசன்  அனாலும் சில  நாடுகளில் இதனை தரவிரக்குவது  கடினம்  ஆனால் எல்லா நாடுகளும்  உபயோகிக்க முடியும்

    இனிமேல் புதிய இலக்கங்களில் யாருமே பயமுறுத்த முடியாது  பொதுவாக பெண்களுக்கு பயனுடையதாக இருக்கும் என்று நம்புகிறேன்   கீழே இருக்கின்ற லிங்க் மூலம் தரவிறக்க முடியும்

    நிட்சயமாக பயனுடையதாக இருக்கும் என்று நம்புகிறேன் பயனுடையதாக இருந்தால் உங்கள் நண்பர்களோடும் பகிந்து கொள்ளுங்கள் பேஸ்புக் மூலமாக ..
    தரவிறக்க    i phone     android 

    வட இந்தியர்களை வியக்க வைத்த அஜித், விஜய் ரசிகர்கள்!

    By: Unknown On: 17:21
  • Share The Gag
  • தென்னிந்திய சினிமாவின் மாபெரும் சக்தியாக கருதப்படுபவர்கள் விஜய், அஜித். இவர்களின் ரசிகர்கள் எண்ணிக்கையை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

    அதிலும் சமூக வலைத்தளங்களில் தங்கள் நாயகர்களுக்கு ஆதரவாக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது, இதில் இவர்கள் மிக எளிதாக இந்திய அளவில் ட்ரண்ட் ஆக்குகின்றனர்.

    சமீபத்தில் விஜய் பேவரட் ஹீரோ விருது வாங்கியதால் அவரது ரசிகர்கள், இதை மையப்படுத்தி ஒரு கருத்தை இந்திய அளவில் ஒரு நாள் முழுவது ட்ரண்ட் ஆக்கினார்கள்

    தற்போது அஜித் சினிமாவிற்கு வந்து 22 ஆண்டுகள் ஆனதால், இதற்காக இவரது ரசிகர்கள் ஒரு டாக் உருவாக்கி ஒரு நாளை தாண்டியும் இந்திய அளவில் ட்ரண்ட் செய்தார்கள்.

    இதனால் மற்ற மாநிலங்களில் உள்ள சினிமா ரசிகர்களும் தங்கள் நாயகர்களுக்கும் இப்படி செய்ய, ஆனால் அஜித், விஜய்யுடன் போட்டி போட முடியாமல் தோற்று தான் போனார்கள்.

    குழந்தைகளுக்கு வியர்க்குரு வருதா (Prickly Heat)

    By: Unknown On: 08:01
  • Share The Gag
  • வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு வரும் பொதுவான தொந்தரவு வியர்க்குரு. இதை ஆங்கிலத்தில் prickly heat என்றும் மருத்துவ வழக்கில் miliaria என்றும் அழைப்பர்.

    பெரியவர்வளை விட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஏனெனில் குழந்தைகளின் வியர்வைச்சுரப்பிகளின் வளர்ச்சி குறைவாக இருப்பதால் வெயில் நேரங்களில் உடல்சூட்டைத்தணிக்க அதிகப்படியாக வியர்வையை வெளியேற்ற முயற்சி செய்து வீங்குகிறது.இது சிறுசிறு கொப்புளங்களை ஏற்படுத்தும்.இதனுள் சில பாக்டீரியங்கள் வளருவதால் சிவந்து காணப்படும் மேலும் வியர்வை வெளியேறாமல் உள்ளே அடைத்துக்கொள்வதால் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும்.

    தவிர்க்கும் வழிகள் :

    குழந்தைகளின் உடலில் அதிகப்படியான வியர்வைவராமல் பார்த்துக்கொண்டால் வியர்க்குருவை குறைக்கலாம். அதற்கு குழந்தைகளை தினமும் தவறாமல் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டவேண்டும். இரண்டுவேளை குளிப்பாட்டினால்கூட நல்லது. அப்படி முடியாவிட்டால் தண்ணீர் வைத்து துண்டுக்குளியல் செய்தால் கூட நல்லதுதான்.

    சாதாரண டால்கம் பவுடரை அதிகம் உபயோகிக்ககூடாது ஏனெனில் அவைகள் வியர்வைசுரப்பிகளின் துளைகளை அடைத்துவிடுவதால் தொந்தரவு மேலும் அதிகரிக்கும். அதற்கு பதிலாக கேலமைன் உள்ள லோஷன்களை பயன்படுத்தலாம்.மேலும் மென்தால் உள்ள சிறப்பு பவுடர்களை பயன்படுத்தலாம்.

    எப்போது மருத்துவரை அணுகுவது?

    அதிக அளவில் ஏற்பட்டு எரிச்சல் அதிகரித்தாலோ அல்லது சீழ்ப்பிடித்து காய்ச்சல் வந்தாலோ மருத்துவரை உடன் உடன் அணுகவும்.குழந்தைகளின் உடலில் நீரிழப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதும் அவசியம்.

    டைரக்டராகிறார் மிர்ச்சி சிவா..?!

    By: Unknown On: 07:37
  • Share The Gag
  • சில வருடங்களுக்கு முன் தனியார் வானொலியில் ஆர்.ஜே.வாக இருந்தவர் மிர்ச்சி சிவா. மொக்கை ஜோக் அடிப்பதில் வல்லவரான மிர்ச்சி சிவாவின் காமெடி பேச்சுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. திரைப்பிரபலங்கள் பலரும் மிர்ச்சி சிவாவின் காமெடிக்கு ரசிகர்களாக இருந்தார்கள். அதை மிகச்சரியாய் பயன்படுத்திக் கொண்ட மிர்ச்சி சிவா, சினிமா நட்சத்திரங்கள், இயக்குநர்கள் ஆகியோரிடம் நட்பை வளர்த்துக்கொண்டார். அதுவே அவருக்கு சென்னை-600 028 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தேடிக்கொடுத்தது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தார் மிர்ச்சி சிவா.

    தமிழ் சினிமாவை கிண்டல் பண்ணி எடுக்கப்பட்ட தமிழ்ப்படம் என்ற படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு அவர் நடித்த கலகலப்பு என்ற படமும் சிவாவுக்கு கமர்ஷியல் வெற்றியை தேடிக்கொடுத்தது. என்றாலும், தில்லுமுல்லு, வணக்கம் சென்னை, யா யா உட்பட சிவா நடித்த சில படங்கள் வரிசையாக ப்ளாப் ஆக..சிவாவுக்கு சறுக்கல் ஆரம்பித்தது. ஏற்கனவே அவருக்கு அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்கள் படங்களை ஆரம்பிக்காமல் அமைதி காக்க ஆரம்பித்தனர். புதிதாக எந்தவொரு படங்களும் அவரைத் தேடி வரவில்லை.

    இதேநிலை நீடிப்பது தன் கேரியருக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்த மிர்ச்சி சிவா, தானே டைரக்டராகி தன் மார்க்கெட்டை நிலைநிறுத்திக்கொள்வது என்ற முடிவுக்கு வந்துள்ளார். தற்போது முழுமூச்சாக தான் இயக்க உள்ள படத்துக்கான ஸ்கிரிப்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.