Tuesday, 23 September 2014

Tagged Under: ,

இரகசியம் என்ன..? மாஸ் படத்திலிருந்து பெயரை மாற்றுகிறாரா யுவன்?

By: Unknown On: 20:43
  • Share The Gag
  • யுவன் சங்கர் ராஜா, தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர். பல முன்னணி நடிகர், இயக்குனர்களின் பல படங்களுக்கு தனது இசையின் மூலம் வெற்றியைத் தேடித்தந்தவர். இவர் தற்போது நிறைய படங்களுக்கு இசையமைக்கமால் குறிப்பிட்ட சில படங்களை தேர்வு செய்து இசையமைத்து வருகிறார்.

    இவர் சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். ரம்ஜான் அன்றுகூட மசூதிக்கு சென்று தொழுகை நடத்தினார். இவர் இஸ்லாம் மதத்துக்கு மாறினாலும் தனது பெயரை மாற்றம் செய்யவில்லை. பலரும் இவரிடம் பெயர்மாற்றம் செய்யாததற்கான காரணம் என்று கேட்டு நச்சரித்து வந்தனர்.

    இந்நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் படத்திற்கு இசையமைத்து வரும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் மூலம் தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளாராம். மாற்றம் செய்த தனது பெயரை ‘மாஸ்’ படத்தின் டைட்டில் கார்டில் வெளியிடப் போகிறாராம் யுவன். 

    0 comments:

    Post a Comment