Thursday, 14 August 2014

Tagged Under: ,

துணி தைக்கப் போகிறீர்களா?

By: Unknown On: 22:35
  • Share The Gag
  • * சுடிதார் தைக்கும் போது, பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி, லைனிங் கொடுத்து தைக்கவும். மெல்லிய ஆடையாக இருந்தால், நெளிந்து, கூன் போட்டு நடக்க வேண்டி வரும். லைனிங் கொடுத்து தைப்பதால், இலகுவாக நடக்கலாம்.

    * வயது வந்த பெண்களுக்கு எப்போதும் இறுக்கமான ஆடைகளை அணிவிக்காதீர்கள். அதற்காக, கழுத்தை, "பப்பரப்ப...' என பெரிதாக்கி விட வேண்டாம். டெய்லரிடம் கொடுக்கும் போது, சொல்லி கொடுங்கள். "நெக்' பெரிதாக வைத்தால்தான் நல்லா தைக்க வரும் என்று, டெய்லர்கள், அவர்கள் இஷ்டத்துக்கு தைப்பர்.

    * விலை உயர்ந்த துணியை தைக்க கொடுக்கும் போது, உள்ளே பிரித்து பயன்படுத்துமாறு துணி விட்டு தைக்கவும்.

    * காட்டன் சுடிதார் தைக்க கொடுக்கும் போது, ஒருநாள் முழுவதும் தண்ணீரில் நனைத்து, உலர்த்தி, "அயர்ன்' செய்து கொடுங்கள்.

    * அப்படியே தைக்க கொடுத்தால், ஒருமுறை போட்டு துவைத்து, மறுமுறை போடும் போது கை கூட நுழைக்க முடியாது; காசு கரியானதுதான் மிச்சம்.

    * அதேபோல், காட்டன் லைனிங் கொடுத்து தைத்த சுடிதாரை, அலசி காய வைக்கும் போது, லைனிங் பகுதியை திருப்பி, நன்கு உதறி போட வேண்டும். அப்படியே காய வைத்தால், உள்ளே உள்ள காட்டன் துணி சுருங்கி நிற்கும், "அயர்ன்' செய்ய அதிக நேரம் எடுக்கும்.

    * பிளவுஸ் மற்றும் சல்வார் வெட்டும் போது, கழுத்து பகுதி பெரிதாகி விட்டால், கவலைப்பட தேவையில்லை. அதே போல், அரை அங்குலத்துக்கு கழுத்து வரைந்து, ஒட்டு கொடுத்து விட்டு, ஒட்டு தெரியாமல் இருக்க, சல்வாருக்கு பொருத்தமான லேஸ், மணி அல்லது ஜரிகை லேஸ் வைத்து தைத்துக் கொள்ளலாம்.

    * அதே போல், சாதாரண சல்வார் கம்மீஸ் கூட கழுத்து, சைட் பகுதி, கை பகுதியில் மணி அல்லது லேஸ் வைத்து தைத்தால், "ரிச் லுக்' கிடைக்கும்.

    பின்குறிப்பு: இப்போது யாரும் பட்டு சேலை அவ்வளவாக உடுத்திக் கொள்வதில்லை; மைசூர் சில்க் போன்றவை தான் கட்டுகின்றனர். அப்படியானால், பழைய பட்டு சேலையைக் கூட சல்வார் கம்மீசாக தைத்துக் கொள்ளலாம்.

    டிப்ஸ்

    பிளவுஸ் தைக்கும் போது...: பிளவுஸ் தைக்கும் போது, இடுப்பு பட்டிக்கு உள்பக்கம் கேன்வாஸ் துணி கொடுத்து தைத்தால், உட்காரும்போது, மடங்காமல் இருக்கும்.

    துணிகளை வெட்டும் போது...: துணிகளை வெட்டும் போது, கவனமாக உடனே அதை ஒரு துண்டு விடாமல் எடுத்து சுருட்டி, ஒரு பையில் வையுங்கள். அங்கு இங்கு சிதறவிட்டால் கை, பட்டி, கழுத்து துணி எல்லாம் காணாமல் போய் விடும்.
    அடுத்து, மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளை வைத்துக் கொண்டு தைக்காதீர்கள். நீங்கள் தைக்கும் போது ரொம்ப சுவாரசியமாக இருக்கும். அந்த நேரம், குழந்தை, தையல் மிஷினில் கையை வைத்து விடும். ஆபத்து தான். நீங்கள் தைக்கும் போது, திரும்பி பார்க்காதீர்கள். பேசிக் கொண்டே தைக்காதீர்கள். உங்கள் கையே ஊசியில் மாட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

    0 comments:

    Post a Comment