Friday, 18 July 2014

Tagged Under: ,

சூப்பர் ஸ்டாருக்கு என்ன ஆனது? Hot news..

By: Unknown On: 22:07
  • Share The Gag
  • இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான். இவருக்கு கடந்த சில வருடங்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருகிறது. இதனால் தான் கோச்சடையான் படத்திலேயே நடிக்க சம்மதித்தார்.

    தற்போது மீண்டும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடுவே ரஜினி மயங்கி விழுந்ததாக நேற்று வதந்திகள் பரவி வந்தது.

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ‘ரஜினி மயக்கம் போட்டு விழுந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று வெளியான செய்திகளில் கொஞ்சமும் உண்மையில்லை. அவர் எப்போதும் போலவே படப்பிடிப்பில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். யாரோ தேவையில்லாமல் இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி விட்டு வருகிறார்கள். அதனால் இதை யாரும் நம்ப வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.


    0 comments:

    Post a Comment