Saturday, 9 August 2014

Tagged Under: ,

உங்கள் செல்ல கண்மணிக்களுக்கு முத்துப்பல் முளைக்கப் போகிறதா !

By: Unknown On: 21:51
  • Share The Gag
  •  வயிற்றுப்போக்கு குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது, வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும். அப்படி உங்கள் குந்தைக்கு "வயிற்றுப்போக்கானது" திடீரென்று ஏற்பட்டால், அவர்களுக்கு உடனே ORS கொடுங்கள். இல்லாவிட்டால், குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து விரைவில் குறைந்துவிடும்.

    தொடர்ச்சியான அழுகை: குழந்தைகள் தொடர்ந்தோ அல்லது அவ்வப்போதோ காரணமின்றி அழ ஆம்பித்தால், அவர்களுக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். அப்போது அவர்களின் கவனத்தை திசைத்திருப்பும் வகையில் தொட்டிலை ஆட்டிவிட்டோ அல்லது தாலாட்டு பாடவோ செய்யலாம். இல்லாவிட்டால், உங்கள் கைகளை நன்கு சுத்தமாக நீரில் கழுவிவிட்டு, பின் அவர்களின் ஈறுகளை மசாஜ் செய்துவிடலாம்.

    காய்ச்சல் : குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது, அவர்கள் கண்ட கண்ட பொருட்களை வாயில் வைப்பதால், வயிற்றில் தொற்றுகள் ஏற்பட்டு, சில சமயங்களில் காய்ச்சலுக்கு கூட உள்ளாவார்கள். எனவே அப்போது அவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைத்த காய்ச்சல் மாத்திரையைக் கொடுங்கள். ஒருவேளை காய்ச்சல் அளவுக்கு அதிகமாக இருந்தால், மருத்துவரிடம் உடனே அழைத்துச் செல்லுங்கள்.

    கண்டதைக் கடிப்பதால் ஏற்படும் விபத்துக்கள் :குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் நேரத்தில், அவர்கள் கைகளுக்கு எது கிடைத்தாலும், அது உடனே அவர்களின் வாய்க்கு தான் செல்லும். அதிலும் அவர்கள் கடினமான பொருட்களைக் கூட கடிக்க நேரிடுவதால், சற்று கவனமாக இருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு தேன் நிரப்பப்பட்ட டீத்திங் ரிங்ஸை கைகளில் மாட்டிவிட்டால், அவர்கள் அதை வாயில் போட்டு மென்று கொண்டிப்பார்கள்.

    உணவுகளைத் தவிர்ப்பார்கள் :பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் காலத்தில், குழந்தைகள் உணவுகளை உட்கொள்ளாமல் தவிர்ப்பார்கள். ஆகவே அப்போது, அவர்களுக்கு வெதுவெதுப்பான பால் நிரப்பப்பட்ட பால் பாட்டிலை குழந்தைகளுக்கு கொடுத்தால், வெதுவெதுப்பான பாலானது, குழந்தைகளின் ஈறுகளில் உள்ள வலியை தணித்து, அவர்கள் பால் பாட்டிலின் நிப்புளை மெல்லவும் வசதியாக இருக்கும்.
    வாய்வு தொல்லை ஏற்படும் :குழந்தைகளுக்கு வயிற்றில் தொற்றுகள் ஏற்பட்டால், வாய்வுத் தொல்லையும் அதிகரிக்கும். அப்படி உங்கள் குழந்தை வாய்வு தொல்லையால் அதிகம் அவஸ்தைப்பட்டால், அவர்களை குப்புற படுக்க வையுங்கள். இதனால் அவர்களின் உடலில் உள்ள வாயுவானது வெளியேறிவிடும்.

    0 comments:

    Post a Comment