Thursday, 24 July 2014

Tagged Under: ,

ஸ்ருதிஹாசனுக்கு மூன்று கோடி சம்பளமா?

By: Unknown On: 16:58
  • Share The Gag
  • தெலுங்கில் மகேஷ் பாபு, தமன்னா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஆகடு. இப்படம் வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இப்படத்தை முடித்த கையோடு மகேஷ் பாபு கொரட்டா ஆ சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

    மைத்ரி மூவீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த பிரம்மாண்டமான படம் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி பூஜையுடன் ஆரம்பிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    தெலுங்கில் நம்பர் 1 நடிகரான மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க இலியானா, தமன்னா, காஜல் அகர்வால் ஆகிய மூவரும் கடும் போட்டியில் இருந்தனர்.

    கடைசியில் மூவரையும் ஓரம் கட்டிவிட்டு ஸ்ருதிஹாசனுக்கு அந்த வாய்ப்பை கொடுத்துள்ளார் மகேஷ் பாபு.

    இந்தி மற்றும் தமிழில் பிஸியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன், முதலில் நடிக்க தயங்கியிருக்கிறார்.

    பின்னர் 3 கோடி சம்பளம் என்றதும் உடனே ஒப்புக் கொண்டுள்ளாராம்.

    0 comments:

    Post a Comment