
அப்போது சைலண்டாக இருந்த சிம்பு இப்போது பொங்கியிருக்கிறார்.
என்னவாம்?
இது நம்ம ஆளு படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இந்த ஷெட்யூல்டில் கதைப்படி சிம்புவின் ஹேர் ஸ்டைல் ஒட்ட வெட்டப்பட்டிருக்க வேண்டும்.
படத்தின் ஒரு பகுதியில் அவர் இந்த ஹேர் ஸ்டைலுடன் நடிக்க வேண்டும் என்பது ஸ்கிரிப்டில் பாண்டிராஜ் எழுதியது. அதன்படிதான் தனது ஹேர்ஸ்டைலை சிம்பு மாற்றினார். ஆனால் அதனை வேறு விதமாக மீடியா ஃபோகஸ் செய்தது.
இது நம்ம ஆளு என்னுடைய படம். உங்களுக்கு என்னடா அது பற்றி கவலை என்று கோபம் தெறிக்க கேட்டுள்ளார் சிம்பு.
நியாயம்தான். சிம்புவின் படம் குறித்து அவர்தான் பேச வேண்டும். பிறகு ஏன் மீடியாவுக்கு ஸ்டில்களும், படம் குறித்த செய்திகளும் தருகிறார்?
0 comments:
Post a Comment