Tuesday, 19 August 2014

Tagged Under: ,

கறைகளை நீக்கும் வழிகள்!

By: Unknown On: 08:11
  • Share The Gag
  •  காபி, டீ கறைபட்ட துணியை மிதமான சூடு தண்ணீரில் பத்து நிமிஷம் ஊற வைக்கவும். சிறிது போரெக்ஸ்லோஷனை நனைத்துக் கறையை ஒற்றி எடுத்துவிட்டு மீண்டும் குளிர் நீரில் கசக்கினால் கறை மறையும்.
    :-
    * சாக்லேட் கறை அதிகம்பட்டிருந்தால் ஸ்பிரிட்டை பஞ்சால் ஒற்றி கறை மீது தடவி பிறகு கசக்கினால் மறையும்.
    :-
    * மிதமான சூடுள்ள நீரில் ஊறவைத்து பொடி உப்பைப் போட்டுத் தேய்த்தால் துணியில் ஏற்பட்ட க்ரீம் கறை மறையும்.
    :-
    * கிளிசரினை லேசாக சூடு செய்து லிப்ஸ்டிக் கறைபட்ட துணியின் மீது சில சொட்டுகள் இட்டுக் கசக்கவும். பிறகு டிடர்ஜென்ட் கொண்டு துவைக்க கறை மறையும்.
    :-
    * மிதமான சூடு நீரில் நனைத்து சோடியம் கார்பனேட் கொண்டு துவைக்க சேறினால் ஏற்பட்ட கறை மறையும்.
    :-
    * துணியில் இங்க் கறைபட்டுவிட்டால் கறைபட்ட இடத்தை தண்ணீரில் நனைத்து எலுமிச்சைச் சாறைக் கொண்டு கசக்கினால் கறை மறையும்.
    :-
    * நகப்பூச்சுக் கறை நீங்க ஸ்பிரிட் நனைத்த துணியால் கறையை ஒற்றவும். பிறகு டிடர்ஜென்ட் கலந்த நீரில் துவைக்க கறை மறையும்.

    0 comments:

    Post a Comment