Tuesday, 19 August 2014

Tagged Under: ,

ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது..!

By: Unknown On: 17:17
  • Share The Gag
  • ‘ஆண்களிடம் உங்களுக்கு பிடிக்காத பழக்கங்கள் என்னென்ன இருக்கின்றன?’ என்று பெண்களிடம் கேட்டால், அதற்கும் ஒரு பெரிய பட்டியல் போட்டுவிடுகிறார்கள். அவை என்னென்ன என்று தெரிந்துகொள்ள கீழே தொடர்ந்து படியுங்கள்..

    நகம் கடித்தல்:

    நகம் கடிப்பதில் எப்போதும் பெண்கள்தான் முன்னணி. பயம், பதட்டம், பாதுகாப்பின்மை, ஆழ்ந்த சிந்தனையின்போது பெண்கள் நகத்தை கடித்துக்கடித்து துப்பிவிடுவார்கள். தெரிந்தோ, தெரியாமலோ தங்களிடம் இருக்கும் இந்த தேவையற்ற பழக்கம், ஆண்களிடமும் ஒட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் பெண்கள் கவனமாக இருக்கிறார்கள். “நகம் கடிப்பது பயத்தாலும், அசவுகரியத்தாலும் ஏற்படுகிறது.

    நகம் கடிக்கும்போது அது அவர்கள் வயிற்றில் போய் பலவிதமான உபாதைகளை ஏற்படுத்தும். மேலும் நகத்தை பெரும்பாலும் கடித்துவிடுவதால், விரலுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் விரல் நுனியில் சில பாதிப்புகளும் தோன்றும். மேலும் நகம் கடிக்கும் ஆண்கள் மனதளவில் பலகீனமானவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.

    காது குடைதல்:

    ஆண்கள் ரசித்து ரசித்து காது குடைவதை பெண்கள், ‘ச்.. சீ.. இது மோசமான பழக்கம்’ என்று சொல்கிறார்கள். ஏன் தெரியுமா? கையில் கிடைப்பதைவைத்து காது குடைந்தால், காது ஜவ்வுகளை கிழித்து விடும். அதனால் கிருமித்தொற்று ஏற்பட்டு, கேள்வித்திறன் பாதிக்கும் சூழ்நிலைகூட ஏற்பட்டுவிடுவதுண்டு. காதில் அழுக்கு சேர்ந்தால் நமச்சல் ஏற்படும். அப்போதுதான் காது குடையத் தோன்றும். அதனால் காதில் அழுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். சிலர் காதுகுடையும்போது கிடைக்கும் இனம்புரியாத ஒருவித சுகத்திற்கு ஆசைப்பட்டு அதை செய்துகொண்டிருப்பார்கள்.

    அதிகமாக சாப்பிடுதல்:

    இப்போது நமக்கு பெரும்பாலும் உடல் உழைப்பு இல்லை. அதனால் சாப்பாட்டை எவ்வளவு குறைத்துக்கொள்கிறோமோ அவ்வளவு நல்லது. சாப்பாட்டு ராமன் போன்ற ஒருவரை தன்னோடு அழைத்துச்செல்லவோ, தனக்கு அவர் நெருக்கமானவர் என்று காட்டிக்கொள்ளவோ பெண்கள் விரும்புவதில்லை. அதிகமாக சாப்பிடுகிறவர்களால் சுறுசுறுப்பாக இயங்க முடியாது என்றும் பெண்கள் சொல்கிறார்கள்.

    போதுமான தூக்கமின்மை:

    தூக்கமின்மையை யாரும் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் உடலின் பலவித கோளாறுகளுக்கு தூக்கமின்மைதான் முக்கிய காரணமாக இருக்கிறது. சரியாக தூங்காத ஆண்களின் முகம் பொலிவிழந்து போகிறது. பொலிவிழந்த முகத்தை பெண்கள் ரசிப்பதில்லை. போதுமான தூக்கம் இல்லாவிட்டால் நாள் முழுவதும் உடல் சோர்வு, அசதி, கவனக் குறைவு, வேலையில் ஈடுபாடுஇல்லாமை, கோபம், எரிச்சல் போன்ற பல தொந்தரவுகள் ஏற்படும். இத்தனை பிரச்சினைகளோடு இருப்பவரை எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்கும்.

    அதிகமாக காபி பருகுவது:

    இது வெகுகாலமாகவே தொடர்ந்து வரும் பழக்கம். நட்பு, உறவை உபசரிக்கிறேன் என்ற பெயரில் ஆண்கள் பெரும்பாலும் காபி கப்போடு அலைவதாக பெண்கள் கூறுகிறார்கள். அது அவர்கள் உடல் நலத்திற்கு கேடு. காபியில் இருக்கும் ‘காபின்’ என்ற நச்சுப்பொருள் உடலில் சேரச் சேர உள்உறுப்புகள்பாதிக்கும். மயக்கம், தூக்கமின்மை, குமட்டல், வயிற்று உபாதைகள் வரும். அப்படி இந்த கெட்டப் பழக்கத்தை நிறுத்த முடியாவிட்டால் குறைத்துக் கொள்ளவாவது முயற்சிக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள்.

    வெகுநேரம் விழித்திருப்பது:

    பெண்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு தூக்கம்போட்டு, பளிச்சென்று இருக்க விரும்புகிறார்கள். அதனால் அவர்களுக்கு இரவில் வெகுநேரம் கொட்டக் கொட்ட விழித்திருக்கும் ஆண்களை பிடிப்பதில்லையாம். அப்படி விழித்திருக்கும் நேரத்தில் ஆண்கள் தேவையற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் பெண்கள் நினைக்கிறார்கள்.

    டாக்டரிடம் பொய் சொல்வது:

    நம்மை ஆரோக்கியமானவராகவோ, நல்ல பழக்கவழக்கம் கொண்டவராகவோ காட்டிக் கொள்ள ஏற்ற இடம் மருத்துவமனை அல்ல. ஏற்பட்டிருக்கும் ஆரோக்கிய பிரச்சினைகளை, தன்னிடம் இருக்கும் மோசமான பழக்கவழக்கங்களை டாக்டரிடம் மறைக்காமல் சொன்னால்தான், அவரால் சரியான சிகிச்சை தரமுடியும்.

    சரியான சிகிச்சையே இல்லாவிட்டால் ஆரோக்கியத்தை பெற முடியாது. குடிப்பழக்கம் இருக்கும் ஆண்கள், டாக்டர் அதுபற்றி கேட்கும் போது, ‘சும்மா எப்பவாச்சும் ஒரு நாள் சும்மா பெயரளவுக்கு குடிப்பேன்’ என்று சொல்கிறார்கள்’ என்பது பெண்களின் குற்றச்சாட்டு.

    0 comments:

    Post a Comment