Tuesday, 29 July 2014

Tagged Under: , , , ,

உங்கள் துணை எப்படிப்பட்டவர் - அவசியம் படிக்கவும்!

By: Unknown On: 10:45
  • Share The Gag
  • காதல்! உலகத்தில் இருபது முதல் அறுபதுவரை அத்தனைபேரையும் கட்டிப்போடும் மந்திர சக்தி. காதலில் ஜெயிப்பது தோற்பதை விட அதை கடந்து வராதவர்கள் ஒருசிலர். அப்படி கடக்காதவர்கள் பிறவிப்பயன் அற்றவர்களே. ஒவ்வொருவருக்கும் காதல் வந்தபின் அவரவர் துணையை
    பற்றி அறிய ஆவலாக இருக்கும். அவர் தன் மேல் அன்பு எவ்வளவு வைத்திருக்கின்றார், தனக்காக என்ன எல்லாம் செய்வார் இப்படி பல. அப்படியானவர்களுக்கு இந்த பதிவு
    (திருமணமானவர்களும் தங்கள் துணை பற்றி அறியலாம்.)

    இதை நானாக சொல்லவில்லை நான் இன்னொரு இடத்தில் படித்ததை உங்களிடம் பகிருகின்றேன்.
    (யான் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறவேண்டும்.)

    முதலில் உங்கள் பிறந்த ஆண்டு, மாதம், திகதி ஆகியவற்றை கூட்டி எடுங்கள். அதுதான் உங்கள் காதல் எண்.(இதேபோல உங்கள் துணையின் எண்ணையும் கூட்டி எடுங்கள்) உதாரணம்: பிறந்த திகதி 8 பிறந்த மாதம் 8 ஆண்டு 1988 என்றால் 8+8+1+9+8+8=42 பின் 4+2 அதையும் கூட்டுங்கள். 6 என்பது தான் காதல் எண்.

    எண் ஒன்று.

    ஆண்.


    உங்கள் துணையிடம் விசுவாசமாகவும், பெருந்தன்மையோடும், நன்றிமிக்கவர்களாகவும் இருக்கும் நீங்கள் மனைவியின் செயலை குறை சொல்வதை தவிர்ப்பது நல்லது. அதன் பின் உங்கள் வாழ்க்கை சொர்க்கம்தான்.

    பெண்.

    வாழ்க்கையின் இறுதிவரை அனுபவித்து வாழும் நீங்கள் தன் துணை தன்னைவிட எல்லா விடய்த்திலும் உயர்ந்து நிர்க்கவேண்டும் என எதிர்பார்ப்பவர்.(சமையலிலுமா தெரியவில்லை.) அப்படிப் பட்டவர் கிடைத்து விட்டால் பாராட்டவும் தவறமாட்டார். லட்சியவாதி ஆனா நீங்கள் நகைச்சுவை உணர்வோடு புத்திசாலிகளாகவும் இருப்பீர்கள்.

    எண் இரண்டு.

    ஆண்.

    காதல் மன்னன் பட்டம் உங்களுக்குத்தான். உங்கள் துணையை அனுசரித்து போவதில் நீங்கள் தான் கில்லாடிகள். அவரின் எத்தகைய பிரச்சனைகளையும் இலகுவாக அணுகி தீர்த்து வைப்பீர்கள்.

    பெண்.

    கணவர் எள் கொண்டு வா என்றால் என்னை கொடுப்பவர் நீங்கள். உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டால்சினுங்கிகளான நீங்கள், நீங்கள் செய்யும் எல்லா விடயங்களையும் உங்கள் அழகையும் உங்கள் துணை பாராட்ட வேண்டுமென எதிர்பார்ப்பவர். சுற்றி இருப்பவர்களை கலகலப்பாக வைத்திருப்பீர்கள்.

    எண் மூன்று.

    ஆண்.


    இந்த காலத்து ராமனுங்க நீங்க. இன்னொருபுறம் வாரி வழங்கும் கர்ணன். எல்லா விடயங்களையும் விளையாட்டாக எடுக்கும் நீங்கள் சிறந்த பேச்சாளர். பொறாமை என்றால் அது என்ன விலை என கேட்பவர்கள்.

    பெண்.

    ஆண்மை நிறைந்த ஒருவரை எதிர்பார்க்கும் நீங்கள் அழகை பெரிதாக பார்க்கமாட்டீர்கள். நாகரிகம் பிடிக்காது. எல்லா கருமமும் உங்களுக்கு தூசு. எதற்கும் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள்.

    எண் நான்கு.

    ஆண்.


    உங்கள் துணையை அதிகமாக நேசிப்பீர்கள். தூர சிந்தனையோடு பெருந்தன்மையான நீங்கள் உங்களவருகாக உயிரைக்கூட கொடுப்பீர்கள். பூரண சுதந்திரம் கொடுக்கும் நீங்கள் தான் கணவராக வரவேண்டுமென எல்லோரும் எதிர்பார்ப்பர்.

    பெண்.

    உங்களை யார் நேசித்தாலும் அவரிடம் விசுவாசமாக இருப்பீர்கள். உங்களை நேசிப்பவர் சந்தோசமாக இருக்க நீங்கள் தான் காரணமாக இருப்பீர்கள்.

    எண் ஐந்து.

    ஆண்.


    பெண்களிடையே உங்களுக்கு மவுசு அதிகம். உங்கள் கடைக்கண் பார்வைக்கு பலர் ஏங்குவர். ஆனால் உங்கள் போக்கு அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் அதேசமயம் சந்தோசத்தையும் கொடுக்கும். புரியாத புதிரான நீங்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்வீர்கள்.

    பெண்.

    இவள் தான் பெண் என சொல்லவைக்கும் நீங்கள் பேராசையும் கொண்டவர்கள். ஆனால் உங்களை மனைவியாக அடைந்தவர்களுக்கு வாழ்க்கை சொர்க்கம்தான்.

    எண் ஆறு.

    ஆண்.


    கடவுளும் காதலும் வேறு இல்லை என வாழ்பவர். பெண்களை மதிக்க தெரிந்தவர்கள். அழகாய் போற்றும் நீங்கள் கவிதைகள் எழுதுவதில் கில்லாடிகள்.

    பெண்.

    குப்பைமேட்டை கூட கோவிலாக்கும் நீங்கள் உங்கள் துணைதான் உலகம் என வாழ்வீர்கள். தாய்மை உணர்வு மிக்க நீங்கள் அது எல்லோரிடமும் இருக்கவேண்டும் என எதிர்பார்பதோடு நல்ல வாழ்க்கை வாழ்வீர்கள்.

    எண் ஏழு.

    ஆண்.


    கற்பனையிலேயே காலத்தை கடத்தும் நீங்கள் காரியத்தில் கண்ணானவர்கள். உங்கள் துணை உங்களை காதலிக்கும் போதே அவள் ஏன் என்னை காதலித்தாள், என்னிடம் எதை எதிர்பார்க்கின்றாள் என தேவை அற்றவர்ரை யோசித்தே உங்கள் வாழ்க்கையை நாசமாக்கி விடுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கை வெற்றி உங்கள் கையிலேயே.

    பெண்.

    உங்களுக்கு சாப்பிடுவது, உடை அணிவது ஏன் தூங்குவது கூட ஏனோ தானோ தான். பணம், உதவி எல்லாமே உங்களுக்கு அனாவசியம். அபூர்வப்பிரவிகளான நீங்கள் யாருக்கும் அடங்கா தனிக்காட்டு ராணிகள். ஆனால் வெளிவேசம் போடத்தெரியாதவர்கள்.

    எண் எட்டு.

    ஆண்.


    பொறாமையாலே அழியும் நீங்கள் சமூக அந்தஸ்திலும், பொருளாதார ரீதியாகவும் பெரியவர்கள். சொர்க்கமான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் ஆனால் மனம் தளர மாட்டீர்கள். வெற்றியின் சிகரம் உங்களுக்காக காத்திருக்கும். பிறக்கும்போதே சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் உங்களுடன் வந்துவிடும்.

    பெண்.

    கலை, கவர்ச்சி நிறைந்த நீங்கள். முதலில் அகம்பாவம் பிடித்தவர் போல இருப்பீர்கள். ஆனால் பழகிப்பார்த்தால் நீங்கள் தான் தேன். நினைத்ததை அடைய தவறமாட்டீர்கள். அதிகாரமும், பணமும் கொண்ட ஒருவர்தான் உங்கள் துணையாக வருவார். அதை எதிர்பார்ப்பவர் நீங்கள்தான். உங்களுக்கு உணர்ச்சி கூடினால் ஒருவரை உச்சத்திலும் ஏற்றுவீர்கள் அங்கிருந்து தள்ளியும் விடுவீர்கள்.

    எண் ஒன்பது.

    ஆண்.


    சுறுசுறுப்போடு, உறுதியோடு செயற்பட்டு எல்லாவற்றையும் அடைவீர்கள். எதை கொடுத்தாலும் சிறப்பாக செய்யும் நீங்கள் அரசியலில் நுழைந்தால் அதிரடிதான்.

    பெண்.

    உங்களோடு வாழ்வது தான் வாழ்க்கை என துணையை ஏங்கவைக்கும் சாமர்த்திய சாலிகள்.

    இப்போ, உங்கள் துணையையும் உங்களையும் ஒப்பிட்டு இருப்பீர்கள். இது உங்களுக்கும் பொருந்துகிறதா என சோதித்து விட்டு உங்கள் வாழ்க்கையை சந்தோசமாக வாழுங்கள். நம்பவேண்டியத்தை நம்புங்கள் தேவை அற்றத்தை நம்பாதீர்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.

    புதியவர்கள் ஒரு முறை மீட்டுக்கொள்ளட்டும்

    0 comments:

    Post a Comment