சமீபகாலமாக ஒரு படத்தோடு அந்த படம் சம்பந்தமான விளையாட்டுகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர் சினிமா துறையினர். பெரியவர்களை மட்டுமல்லாது குழந்தைகளையும் சினிமா கவர வேண்டும் என்பதற்காக இது போன்ற விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிரிஸ்-3, கோச்சடையான் போன்ற படங்களோடு வந்த விளையாட்டை போன்று, இப்போது சூர்யா நடித்துள்ள அஞ்சான் படத்திற்கும் புதிதாக ஒரு கேம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அஞ்சான் ரேஸ் வார்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விளையாட்டு கார் ரேஸை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. கிரிஷ்-3, கோச்சடையான் போன்ற படங்களுக்கு கேம் வடிவமைத்த ஹங்கம்மா நிறுவனம் தான் இந்த விளையாட்டையும் உருவாக்கி உள்ளது. இதனை அபிளிகேஷனாக டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
அஞ்சான் ரேஸ் வார்ஸ் கேம் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நடிகர் சூர்யா, லிங்குசாமி, யுடிவி தனஞ்செயன், வசனகர்த்தா பிருந்தா சாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். அஞ்சான் கேமை அறிமுகம் செய்து வைத்து பேசிய நடிகர் சூர்யா, பொதுவாக வீட்டில் நான் எனது பசங்களோடு அதிகமாக கேம் விளையாடுவேன். இப்போது எனது படத்தின் பெயரிலேயே ஒரு விளையாட்டு உருவாகி இருப்பது சந்தோஷம் அளிக்கிறது. அஞ்சான் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப்படத்திற்காக நிறையவே உழைத்து இருக்கிறோம். அஞ்சான் படத்தின் டீசர் போன்று அஞ்சான் கேமும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெறும். அஞ்சான் படம் நாளை சென்சாருக்கு செல்கிறது. சென்சார் முடிந்தவுடன் சொன்ன தேதியில், அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி படத்தை உறுதியாக ரிலீஸ் செய்கிறோம் என்றார்.
லிங்குசாமி பேசுகையில், சினிமாவே ஒரு விளையாட்டு மாதிரி தான். இங்கு யார் முந்தி செல்கிறார்களோ அவர்களே ஜெயிக்கிறார்கள். சூர்யா போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ணும்போது அதற்கு இதுபோன்ற விளம்பர யுக்திகள் தேவைப்படுகிறது. சூர்யா சூப்பர் ஹீரோ என்பதால் அஞ்சான் படத்திற்கு அவர் மட்டுமல்லாது எல்லோரும் நிறைய உழைப்பை கொடுத்துள்ளார்கள். இந்தப்படம் நிச்சயம் வெற்றி பெறும், ஓடுகிற குதிரையில் சூர்யா, முதல் குதிரையாக வருவார் என்றார்.

0 comments:
Post a Comment