Saturday, 19 July 2014

Tagged Under: ,

மனதை கவர்ந்த நடிகர்களின் மாஸ் டையலாக்ஸ்!

By: Unknown On: 17:59
  • Share The Gag
  • தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வந்து போயிருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் தான் நம் மனதில் நீங்காது இருப்பர், இதற்கு காரணம் அவர்கள் நடிப்பை விட அவர்கள் பேசிய வசனங்கள் தான் , ஒரு நடிகர் பெயர் சொன்னாலே, அந்த நடிகர் பேசிய பன்ச் டையலாக் தான் நம் மனதில் தோன்றும், அப்படி நம் மனதை விட்டு நீங்காத உங்கள் ஆதர்ஸ நாயகனின் பேமஸ் பன்ச் டையலாக்ஸ் இதோ....

    ரஜினி

    பன்ச் டையலாக்கின் குருநாதர் இவர் தான், இவர் பேச ஆரம்பித்த பிறகு தான் குச்சி ஐஸ் சாப்பிடும் குழந்தையே பன்ச் பேச ஆரம்பித்தது. அதில் ‘ நா 1 தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி’, ‘என் வழி தனி வழி’, ‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்’ போன்றவை இன்றும் பட்டையை கிளப்பும் வசனம்.

    கமல்

    இவர் பேசுவது நமக்கு புரியவில்லை என்றால் கூட பரவாயில்லை, அவருக்கே புரியுமா என்றால் அதுவும் கேள்விக்குறி தான், ’ கடவுள் இல்லைனு நா எங்க சொல்றேன், இருந்தா நல்லா இருக்கும்ன்னு தான் சொல்றே’னு சொன்ன வசனத்தை பாப்கார்ன் சாப்பிட்டு 10 மணி நேரம் யோசித்தாலும் யாருக்கும் புரியாது.

    அஜித்

    இவர் திரையில் தோன்றி பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் பன்ச் தான், அந்த வகையில் ’ நாம வாழனும்னா யார வேணாலும், எத்தன பேர வேணாலும் கொல்லலாம்’, ‘ஆசை இல்லை அண்ணாச்சி பசி’, ‘உடம்பில் கை இருக்கும், கால் இருக்கும், மூக்கு இருக்கும், முழி இருக்கும், ஆனா உயிர் இருக்காது’ போன்ற வசனங்கள் எல்லாம் இன்றளவும் இவரின் மாஸ்டர் பீஸ்.

    விஜய்

    ரஜினிக்கு பிறகு தன் பன்ச் டையலாக் மூலம் குழந்தைகளை கவர்ந்தவர் இளைய தளபதி தான் ‘வாழ்க்கை ஒரு வட்டம் டா, இங்க ஜெய்க்கிறவன் தோற்பான், தோற்கிறவன் ஜெய்ப்பான்’, ‘ஒரு தடவ முடிவு பண்ணிடன்னா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்’ போன்ற பன்ச் எல்லாம் இன்றும் பொறி தெரிக்கும்.

    சூர்யா

    ’மண்ணென்ன ஊத்துனா மங்கலா எறியும், சீமண்ணெய் ஊத்துனா சிலுத்துக்கிட்டு எறியும்’ அப்படின்னு இவர் பேச ஆரம்பிச்சா ஸ்கூல்ல விட்ட குழந்தைய வீட்ல போய் விட்டுட்டு வர வரைக்கும் பேசிகிட்டே இருப்பாரு, இதையும் தாண்டி நம்மை ரசிக்க வைத்த வசனங்கள் ‘கஷ்டப்பட்டு உழைக்காதீங்க, இஷ்ட்டப்பட்டு உழைங்க’ என்ற வசனம் இளைஞர்களின் மோட்டிவேட் லிஸ்டில் உள்ளது.

    தனுஷ்

    ’சுள்ளான் சூடு ஆன’ ..ஷப்பா கையில சாவிய கொடுங்கடா என்று கமண்ட் சொல்லும் அளவிற்கு இருந்தவர், பின் தன் வெற்றியின் பாணி தெரிந்து சிம்பிளான வசங்களில் நம்மை கவர்ந்தார். அதில் ‘என்ன மாதிரி பசங்கள பார்த்தா பிடிக்காது, பார்க்க பார்க்க தான் பிடிக்கும்’, ’ சார் நீங்க தான் இறங்குனாதான் லோ கிளாஸ், நாங்கல்லாம் இருக்கிறதே லோ கிளாஸ்’ போன்ற வசனங்கள் சுட்டி பசங்களின் டிக்ஸ்னரி வேர்ட்ஸ்.

    சிம்பு

    இவர் என்ன தான் பன்ச் டையலாக் பேசினாலும் ஸ்கூல் குழந்தைங்க ரைம்ஸ் சொல்ற பீலிங் தான் வரும், ‘ நா பொண்ண காதலிச்சுருக்கனும், உன்ன காதலிச்சுருக்க கூடாது’, ‘ஜீன்ஸ் போட்டவெல்லாம் நல்லவளும் கிடையாது, சுடிதார் போட்டவெல்லாம் கெட்டவளும் கிடையாது’ என்று பெண்களை திட்டும் வெட்டி சீன் பாய்ஸின் தேசிய கீதங்கள்.

    பவர் ஸ்டார்

    தமிழ் இளைஞர்களின் வருங்கால நாடித்துடிப்பு பவர் பேசின வசனங்கள் தான். இவர் பேசினால் நரம்பு புடைக்கும், ‘கொலை கொலையா முந்திரிக்கா, பவர் ஸ்டார் அடிச்சா கத்திரிக்கா’ ஷப்பா கண்டிப்பா நாடி, நரம்பு, இரத்தம், சதை எல்லாம் பன்ச் வெறி பிடிச்சவனால தான் இப்படி ஒரு பன்ச் பேச முடியும்.

    இது மட்டுமில்லை, இதுபோல் பல நடிகர்கள் பன்ச் நம் மனதை விட்டு நீங்காது நிற்கும், அத்தனையும் குறிப்பிட முடியாது என்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறோம். ஆனால் இதில் தவற விட்ட வசனங்களை நீங்கள் கமண்டுகளில் கூட தெரிவிக்கலாம்.


    0 comments:

    Post a Comment