கமல் தற்போது உத்தம வில்லன் படத்தில் நடித்து வருகிறார். பூஜாகுமார், ஆண்ட்ரியா, பாமா நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் தன் குருநாதர் பாலச்சந்தரையும் நடிக்க வைத்திருக்கிறார். அதேபோல தனது தந்தை சீனிவாச அய்யங்காரின் நண்பரும், எழுத்தாளருமான அரு.நாகப்பனையும் நடிக்க வைத்திருக்கிறார்.
உத்தம வில்லன் படத்தில் கமல் கோவை பகுதி பேச்சு வழக்கில் பேசி நடிக்கிறார். இதற்காக அந்த பேச்சு வழக்கை நன்றாக கற்றுக் கொள்வதற்காக அதில் தேர்ந்த அரு.நாகப்பனை அணுகியவர் அப்படியே அவரை நடிகராகவும் ஆக்கிவிட்டார். ஆரம்பத்தில் நடிக்க மறுத்த அரு.நாகப்பன் அதன் பிறகு சம்மதித்து நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பில் 15 நாட்கள் நடித்திருக்கிறார்.
இதுகுறித்து அரு.நாகப்பன் கூறியதாவது: கமலை நான் குழந்தையாக இருப்பதில் இருந்து அறிவேன். பரமக்குடியில் கம்பன் விழாவில் சீனிவாச அய்யங்கார் தலைமையில் நடந்த கருத்தரங்கில் நான் பேசியிருக்கிறேன். மறுநாள் நடந்த கவியரங்கில் கலந்துகொண்டு அவர் என்னை பாராட்டினார் அன்று முதல் நாங்கள் நல்ல நண்பர்களானோம். அவர் பெரியவராக இருந்தாலும் அப்போது இளைஞனாக இருந்த என்னுடன் அவர் நட்பு பாராட்டினார்.- காங்கிரஸ் நூற்றாண்டு விழாவுக்கு அவருடன் சென்று நிதி திரட்டியிருக்கிறேன்.
கமல் என்னை கோயம்புத்தூர் கொங்கு தமிழை செம்மைப்படுத்தத்தான் அழைத்தார் திடீரென நடிக்க வைத்துவிட்டார். அந்த அனுபவம் நன்றாக இருந்தது. என்கிறார் அரு நாகப்பன். விருமாண்டி படத்தில் எழுத்தாளரும் பேச்சாளருமான ஞானசம்பந்தனை அறிமுகப்படுத்தியவரும் கமல்தான்

0 comments:
Post a Comment