கருவுற்ற பெண்களின் உடலில் ஏற்படும் பலவிதமாற்றங்களால் கொசுக்கள் அதிக அளவில் அந்த பெண்களை தேடி வந்து கடிக்கும் வாய்ப்புள்ளது என்று ஆப்பிரிக்காவில் காம்பியா நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக கருவுற்ற பெண்களுக்கு மலேரியா போன்ற கொசுக்கடி தொடர்பான நோய்கள் அதிகமாக வரும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. கருவுற்ற பெண்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் எப்பொழுதும் சுவாசிப்பதை விட வேகமாக அதிக அளவில் சுவாசிப்பார்கள்.
அவர்கள் வெளிவிடும் மூச்சுக் காற்றில் கலந்துள்ள சில ரசாயனங்கள் கொசுக்களை கவர்ந்திழுக்கும் தன்மை வாய்ந்தவை. மேலும் கருவுற்ற பெண்களின் உடல் வெப்பம் அதிகரிக்கும். அதனால் உடல் வெப்பத்தை தணிப்பதற்காக தோலின் மேற்பரப்பு வரையில் ரத்தம் பாயும்.
இதனை கொசுக்கள் தங்கள் மோப்ப சக்தியின் மூலம் அறிந்து கொள்கின்றன. கருவுற்ற பெண்களை லேசாக கடித்தால் ரத்தம் வரும் என்று அறிந்து ,கருவுற்ற பெண்களை அதிகளவு கடிக்கின்றன.
இரவு நேரங்களில் கொசுக்கடிக்கு பாதுகாப்பாக கொசுவலை கட்டிக் கொண்டு தூங்குவது பொதுவாக வழக்கம். கருவுற்ற பெண்கள் இரவு நேரங்களில் அடிக்கடி இயற்கையின் உந்துதலுக்காக கொசுவலையில் இருந்து எழுந்து கழிமுறை செல்ல வேண்டியதாக இருக்கும்.
அந்த சமயங்களிலும் கருவுற்ற பெண்கள் கொசுக்கடிக்கு ஆளாகின்றனர். இவ்வாறு ஆப்பிரிக்காவில் கருவுற்ற பெண்களின் மலேரியா காய்ச்சலுக்கு ஆளாகும் பெண்கள் அதிகம். இதனால் குறைபிரவசம், குழந்தை இறந்தே பிறப்பது, எடை குறைவான குழந்தைகள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
எப்போதும் கொசுக்களிடம் இருந்து நம்மை தற்காத்துகொள்வது நல்லது. கொசுக்கள் அடியோடு ஒழிக்க சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வீட்டை சுற்றிலும் குப்பை, கழிவு நீர் போன்றவை தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
0 comments:
Post a Comment