Friday, 22 August 2014

Tagged Under: ,

காக்கா முட்டைக்கு கிடைத்த அங்கீகாரம்...! அப்படி அதில் என்ன இருக்கிறது..!

By: Unknown On: 07:32
  • Share The Gag
  • தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் எம்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் படம் 'காக்கா முட்டை'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்  இசையமைத்திருக்கிறார்.

    இப்படத்தின் சில போஸ்டர்கள் மட்டும் வெளிவந்தன. படத்தின் டீஸர், டிரெய்லர் எதுவும் வெளியாகவில்லை. ஊடக வெளிச்சம் அதிகம் படாமலிருந்த நிலையில் இப்படத்திற்குத் தற்போது பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    கனடாவில் நடைபெறும் 2014க்கான டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் 'காக்கா முட்டை' படம் திரையிடுவதற்குத் தேர்வாகியுள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள இவ்விழாவில் 5,6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இத்திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

    ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பீட்சா விளம்பரத்தைப் பார்த்து அதை ஒரு முறையாவது சாப்பிட வேண்டும் என ஆசைப்படுகிறார்கள், அவர்கள் ஆசை நிறைவேறியதா? என்பதே இப்படத்தின் கதை.

    இப்படத்தை வுண்டர்பார் ஃபிலிம்ஸ், கிராஸ் ரூட் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

    0 comments:

    Post a Comment