Friday, 22 August 2014

Tagged Under: ,

கூவம் நதியை சுத்தப்படுத்தினால் நாம் சரித்திரத்தில் இடம் பிடிப்போம் - கமல்ஹாசன்

By: Unknown On: 18:24
  • Share The Gag
  • இன்று 375வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், இரண்டு நதிக்கரைகளைக் கொண்ட சென்னையை இரண்டு சாக்கடைகள் கொண்ட சென்னையாக நாம் மாற்றிவிட்டோம், இந்த அவப்பெயரை மாற்றும் விதத்தில், இந்த சாக்கடைகளை சுத்தப்படுத்தினால் நாம் சரித்திரத்தில் இடம் பிடிப்போம், என்று கூறியுள்ளார்.

    சென்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் வீடியோ ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கமல்ஹாசன் அதில் கூறியிருப்பதாவது:

    ஈஸ்ட் இந்தியா கம்பெனி, டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என்று யார் யாரோ படையெடுத்த சென்னையை ஆங்கிலேயர்கள் பிடித்தார்கள். கடற்கரை கிரமமான சென்னையும் ஒரு தீவு தான். இரண்டு நதிக்கரை கிராமம் என்று ஸ்ரீ ரங்கத்தை சொல்வார்கள். ஆனால், சென்னையும் இரண்டு நதிக்கரை நகரம் தான். இங்கு ஓடிய இரண்டு நதிகளை நாம், இரண்டு சாக்கடைகளாக்கியுள்ளோம்.

    இதை சாக்கடையாக மாற்றிய நம்மால், இதை மீண்டும் தூய்மைப்படுத்தி நதியாகவும் மாற்றும் திறன் உண்டு. அப்படி நாம் செய்தால், நமது பெயர் சரித்திரத்தில் இடம் பெறும். இழந்ததை மறந்து, பெற்றதைக் கொண்டு நாம், 375 வயதாகும் இளம் தாயான சென்னையின் பிறந்தநாளை கொண்டாடுவோம்.

    இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    0 comments:

    Post a Comment