நடிகர் பார்த்தி விஞ்ஞானி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகிறார். இந்த பொழுது போக்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இயக்கியும் உள்ளார். பார்த்திக்கு சொந்த ஊர் சேலம். சென்னையில் கல்லூரிப் படிப்பு. அழகப்பா செட்டியார் தொழில் நுட்ப கல்லூரியில் அறிவியல் பட்டம் பெற்றவர். அறிவியல் மீது தீராத ஆர்வம் கொண்ட பார்த்தி, தனது உயர் கல்வியை இந்திய அறிவியல் நிறுவனத்தில் பயின்று, அங்கு விண்வெளித் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.
பார்த்தியின் கனவுகள் அனைத்தும் மிகப்பெரியது. சர்வதேச புகழ்பெற்ற அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்ற விரும்பினார். அந்த பெருமைமிகு நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்த விரல்விட்டு எண்ணக்கூடிய விஞ்ஞானிகளில் பார்த்தியும் ஒருவர்.
நாசாவில் பார்த்தியும் அவரது குழு உறுப்பினர்களும் ஓசோன் படலம், பருவ நிலை மாற்றம் போன்றவை குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டதோடு, புற விண்வெளியில் உயிரினம் வாழ்வது தொடர்பான கண்டுபிடிப்பிலும் இறங்கினர். இந்தியாவுக்கு திரும்பிய பின்னர், பார்த்தி, பயோடெக்னாலஜி ஆய்வுத் துறையில் வர்த்தக ஆலோசகராக செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து சென்னை ஐஐடியில் 2008 ஆம் ஆண்டு அறிவியல் ஆய்வு அடிப்படையிலான சொந்த நிறுவனத்தை உருவாக்கினார்.
அறிவியல் ஆய்வுத்துறையில் இருந்த பார்த்தி தனது நீண்டகால கனவான கலைத்துறைக்கு மாற முடிவு செய்தார்.
தனது பள்ளி நாட்களில் பார்த்தி நடிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தவர். கல்லூரி காலகட்டத்தின்போது, கலை நிகழ்ச்சிகளில் தன்னை முன்னிறுத்திக் கொண்டவர். அமெரிக்காவில் ஜூம்பா நடனம் கற்றுக்கொண்டு தனது திறமையை வளர்ப்பதில் தொடர்ச்சியாக ஆர்வம் காட்டியவர்.
இந்த புது முயற்சியில் அறிவியலையும், நடிப்பையும் ஒன்றாக இணைக்க முடிவு செய்தார். விஞ்ஞானி தொடர்புடைய கதையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதன் காரணமாகவே, அவரது திரைப்படத்துக்கு விஞ்ஞானி என்று பெயர் சூட்டினார். தமிழ் திரையுலகில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வெற்றி பெறுவதே தன்னுடைய நோக்கம் என்று கூறுகிறார்.
‘விஞ்ஞானி’ திரைப்படம் அனைவரும் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிப்பவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான நடிகர்கள். நடிகை மீராஜாஸ்மின் பட நாயகி. நடிகர்கள் விவேக், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட், தேவதர்ஷினி போன்றோரும் இதில் நடித்துள்ளனர். நடிகை சஞ்சனா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கிமாயா சினேகா இந்த படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
மாரிஸ் விஜயின் இசையில், பார்த்தி உருவாக்கி உள்ள இந்த திரைப்படத்தின் இசை வரும் இன்று பிரசாத் ஸ்டுடியோவில் வெளியிடப்படுகிறது.

0 comments:
Post a Comment