Wednesday, 24 September 2014

Tagged Under: ,

கமலின் உத்தமவில்லன் நவம்பர் 7-ல் வெளியீடு

By: Unknown On: 20:16
  • Share The Gag
  • கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தை கமலின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதையை கமலஹாசனே எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை வரும் நவம்பர் 7-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    ‘உத்தமவில்லன்’ படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இரண்டு காலக்கட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயராம், நாசர், இயக்குனர் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத், பார்வதி மேனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

    இப்படத்தை தொடர்ந்து கமல் தற்போது ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னதாக, கமல் நடித்து முடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தை அடுத்த வருடம் ஜனவரியில் வெளியிடவுள்ளனர். 

    1 comments: