Monday, 8 September 2014

Tagged Under: ,

சினிமா உலகில் 17 வருடங்களை கடந்த சூர்யா

By: Unknown On: 08:18
  • Share The Gag
  • தமிழில் ‘நேருக்கு நேர்’ படம் மூலம் அறிமுகமானவர் சூர்யா. இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருந்தார் சூர்யா.  இப்படத்தை மணிரத்னம் தயாரித்திருந்தார். இயக்குனர் வஸந்த், சூர்யாவை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். இப்படம் 1997-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா, நடித்த முதல் படத்திலேயே சில நெகட்டிவ்வான கருத்துக்கள் தான் முதலில் வந்தன. பிறகு சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த ‘நந்தா’ படம் இவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.

    அதன்பிறகு வெளிவந்த ‘பிதாமகன்’, மௌனம் பேசியதே’ ஆகிய படங்கள் நடிப்பில் முதிர்ச்சியடைந்தவராகவும் தேர்ச்சியடைந்தவராகவும் சூர்யாவுக்கு அடையாளம் கொடுத்தது. படத்துக்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கிய சூர்யாவிற்கு கவுதம் மேனன் இயக்கிய ‘காக்க காக்க’ படம் சிறந்த படமாக அமைந்தது. இதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். மேலும் கவுதம் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் படத்தில் தன் உடலை வருத்தி சிக்ஸ் பேக்கிலும் வயதான கதாபாத்திரத்திலும் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

    மேலும் ஹரி இயக்கத்தில் வெளி வந்த படங்களான ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்கள் ஆக்‌ஷன் ஹீரோவிற்கான அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது. மேலும் அதிக வசூலிலும் சாதனை படைத்தது. அயன் படத்தில் பல கெட்-அப்களிலும், கஜினி படத்தில் மொட்டை, பேரரழகன் படத்தில் கூன் விழுந்த மனிதன், ஏழாம் அறிவு படத்தில் போதி தர்மன், மாற்றான் படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் என வித்தியாசமான கெட்-அப்களில் நடித்துள்ளார்.

    சமீபத்தில் வெளியான அஞ்சான் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது வெங்கட் பிரபு இயக்கிவரும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வரும் சூர்யா, இதுவரை 30 படங்களில் நடித்து 17 ஆண்டுகளை கடந்துள்ளார்.

    0 comments:

    Post a Comment