Tuesday, 12 August 2014

Tagged Under: ,

சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்ட அஜித்; அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..!

By: Unknown On: 07:35
  • Share The Gag
  • அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் என்றாலே அதில் கொஞ்சம் காரமும், சாரமுமாக போகிறது சில முக்கிய ஸ்டார்களின் நிலைமை… விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அடைய நினைப்பதாகவும், இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் விஜய் ரசிகர்களை கலாய்த்தே கொன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் அஜித் ரசிகர்களே ஆச்சர்யபடும் அளவுக்கு சில வருடங்களுக்கு முன் அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் என்று அஜித்தே அவர் வாயால் பேட்டி கொடுத்திருக்கிறார்.

    கிட்டத்தட்ட 11 வருடத்திற்கு முன்பே அஜித் இந்த பேட்டியை கொடுத்திருக்கிறார். ஆஞ்சநேயா படத்தில் நடித்து முடித்துவிட்டு அப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த அஜித், சன் டிவியின் பேட்டியில் ஆஞ்சநேயா படம் எனது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம் இந்த படம் வெளியானால் அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் என்று மனதில் பட்டதையெல்லாம் பேசி தொலைக்க ஆஞ்சநேயா படம் செமத்தியாக அடி வாங்கியது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக மீடியாவுக்கும் அஜித்துக்கும் இருக்கும் இடைவெளி பெரிதாகிப்போனது.

    ஒரு காலத்தில் அஜித்தும் சூப்பர் ஸ்டார் கனவில் இருந்தது மறுக்கமுடியாத உண்மை..!

    2 comments:

    1. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எழுதாதீர்கள்..... அஜித் தான்super star பட்டத்திற்கு ஆசைப்பட்டதைப்பற்றியும் super star என்பவர் யார், என்பதெல்லாம் ஒருமுறை coffee with anu இல் சொல்லி இருக்கிறார் வேண்டுமென்றால் youtube இல் சென்று பார்க்கவும்......

      ReplyDelete
    2. தமிழர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இணையத்தளம்
      http://omtamil.tv/patriyam/

      ReplyDelete