Monday, 21 July 2014

Tagged Under: ,

தல 55 எக்ஸ்க்ளூசிவ்! ஏழு வயதுக் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் த்ரிஷா!

By: Unknown On: 21:04
  • Share The Gag
  • கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா,த்ரிஷா, நடித்து வரும் தலயின் 55 வது படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து வருகிறது..

    ஏ.எம்.ரத்னம் படத்தைத் தயாரிக்கிறார். முதன்முறையாக அஜித்தின் படத்திற்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். சமீபத்தில் த்ரிஷாவின் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன.

    இதில் அஜித் முதன்முறையாக ஏழு வயதுக் குழந்தைக்கு அப்பாவாக நடிக்கிறார். த்ரிஷா அம்மாவாக நடிக்கிறார்.

    அஜித்துடன்  மீண்டும் நடித்ததால்,  த்ரிஷா மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். தனது ட்விட்டர் தளத்தில் , ''என் மீது நம்பிக்கை வைத்து இந்த பாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு கௌதம் மேனனுக்கு நன்றி '' எனத் தெரிவித்துள்ளார்.

    'ஜி', 'கிரீடம்', 'மங்காத்தா' படங்களுக்குப் பிறகு அஜித்துடன் த்ரிஷா ஜோடி சேர்ந்து நடிப்பது இது நான்காவது முறை.

    0 comments:

    Post a Comment