Monday, 21 July 2014

Tagged Under: ,

தனுஷை வாழ்த்திய சிம்பு ! என்ன காரணம் சிம்பு..?

By: Unknown On: 01:00
  • Share The Gag
  • தனுஷ், அமலா பால், சுரபி, சமுத்திரக்கனி, சரண்யா, விவேக் நடித்து வேல்ராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'வேலையில்லா பட்டதாரி'. தனுஷிற்கு இது 25வது படம்.

    அனிருத் இசையில் வெளியான இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது.படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    கமர்ஷியல் அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' படத்திற்கு பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிம்புவும் தனது ட்விட்டர் தளத்தில் தனுஷின் 25வது படத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அதில், "எனது சக போட்டியாளரும் நல்ல நண்பருமான தனுஷின் 25வது படமான 'வேலையில்லா பட்டதாரி' வெற்றியடைய வாழ்த்துகள், கலக்குங்க" என சிம்பு ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

    படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்கும் பொழுது மிகவும் எனர்ஜியாக இருந்ததாகவும் மேலும் எனது சகோதரருக்கும், அனிருத்துக்கும் எனது வாழ்த்துகள் என தன் ட்விட்டர் தளத்தில் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

    0 comments:

    Post a Comment