Wednesday, 15 May 2013

Tagged Under: ,

ஆப்பிள் ஐபோன் 6-க்காக தயாராகும் ஐஓஎஸ் 7!

By: Unknown On: 15:43
  • Share The Gag





  •       ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5 மற்றும் ஐஓஎஸ் 6 ஆகியவை பழைய கதையாகிவிட்டது. இந்த 2013ஆம் ஆண்டின் ஜூன் மாதம் முதல் ஆப்பிள் ஐபோனின் அடுத்த பதிப்பானது வெளியிடப்படுமெனத்தெரிகிறது.


         ஆப்பிளின் அடுத்த பதிப்பு "ஐபோன் 6" என பெரும்பாலானோர்களால் சொல்லப்படுகிறது. இதற்காக ஐஓஎஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பான  ஐஓஎஸ் 7 தயாராகி வருவதாகவும் அதற்கான சோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

       
    நெக்ஸ்ட் வெப் என்ற இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஐபோன் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் இயங்குதளமான ஐஓஎஸ் -7க்கான சோதனைகள் நடைபெறுகின்றன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளது.


        இந்த இயங்குதளத்தை வடிவமைக்கும் குழுவிலுள்ள ஒரு பணியாளரும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்ஐபோன் 6க்காக இந்த புதிய இயங்குதளம் உருவாக்கப்படுவதாகவும் அந்த பணியாளர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்த புதிய போன் இன்னும் சில மாதங்களில் வெளியாகுமென்றும் தெரிவித்துள்ளார்.




    வதந்திகளின் அடிப்படையில் ஐபோன் 6க்கான நுட்பக்கூறுகள்:
    • சூப்பர் HD தரமுள்ள கேமரா,

    • சிறப்பான பேட்டரி,

    • IGZO ரெட்டினா திரை,

    • 128 ஜிபி நினைவகம்,

    • 6 முதல் 8 வண்ணங்கள்,

    • A7 குவாட்-கோர் ப்ராசெசர்

    0 comments:

    Post a Comment