Thursday, 23 May 2013

Tagged Under:

உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா ? உஷார் !!!!

By: Unknown On: 13:18
  • Share The Gag




  •                    உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா ?


                      அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவு இறக்கிக் கொள்கிறீர்களா?




     சிறிது கவனமாக இருங்கள். 


                     ஏனென்றால் பேட் நியுஸ் என்ற பெயரில் பல மால்வேர் புரோகிராம்கள் இருக்கின்றன. இந்த மால்வேர் புரோகிராம், ஆண்ட்ராய்ட் போன்களில் அமர்ந்து கொண்டு, திரும்ப திரும்ப டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்பிக் கொண்டே இருக்கின்றது. இதனால், நாம் மொபைல் உள்ள பேலன்ஸ்
    வேகமாகத் தீர்ந்து போகிறது.








                       இதுவரை 90 லட்சம் பேர் இந்த பேட் நியுஸ் மால்வேர் புரோகிராமினை டவுண்லோட் செய்துள்ளதாகத் தெரிகிறது. இது எந்த அப்ளிகேஷன் வழியாக போனுக்குள் செல்கிறது என்பது இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லாவகையான புரோகிராம்களுடனும் இந்த மால்வேர் செல்வதாக லுக் அவுட் என்னும் மொபைல் போன் பாதுகாப்பு குறித்துச் செயல்படும் நிறுவனம் அறிவித்துள்ளது.





                        இன்னொரு நிறுவனம், இந்த மால்வேர் சேவஜ் நைப் என்ற கேம் புரோகிராமுடன் அதிகம் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதுவரை இதே போல 32 புரோகிராம்களுடன் பேட் நியூஸ் மால்வேர் சென்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 60 லட்சம் ஸ்மார்ட் போன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 




                    இதுவரை இந்த மால்வேர் புரோகிராம், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகம் பரவியுள்ளதாம். இது இந்தியாவில் இது இன்னும் பரவவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம். எனவே, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தேவைப்பட்டால் மட்டுமே, புரோகிராம்களை தரவிறக்கம் செய்திடவும். அதிகம் எதையும் தரவிறக்கம் செய்ய வேண்டாம்.

    0 comments:

    Post a Comment