Thursday, 22 August 2013

Tagged Under: ,

பென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்!

By: Unknown On: 18:38
  • Share The Gag


  • பென் ட்ரைவ் என்பது இப்பொழுது கணினி   உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருள் இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணினியில் பதியவோ உபயோகபடுத்த படுகிறது. இந்த பென்ட்ரைவ்கள் என்ன பிரச்சினை என்றால் இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணினிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. இதிலிருந்து நம் பென்ட்ரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்களை கீழே கொடுத்துள்ளேன்.
     
    1. USB WRITE PROTECTOR :

     
    இந்த மென்பொருள் உங்களுடைய பென்ட்ரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த கோப்புகளை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது. இதனால் உங்கள் பென்ட்ரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம். மற்றும் வைரசினால் இந்த பென்ட்ரைவ்களை கண்டறிய முடியவில்லை. இந்த மென்பொருள் மிக சிறிய அளவே(190KB) உடையது.

    2. USB FIREWALL :

     
    பென்ட்ரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். USBயில் இருந்து கணினிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன் படுகிறது. இதை DOWNLOAD செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணினியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும். ஏதேனும்  வைரஸ் உங்கள் கணினியில் புக முயற்சிக்கும் போது இந்த இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது. நன்றாக வேலை செய்கிறது.

    3. PANDA USB VACCINATION TOOL :

     
    பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவினால் பென்டிரைவில் உள்ள autorun.inf பைலை முற்றிலுமாக தடைசெய்கிறது. உங்கள் பென்டிரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கபடுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான சார்ட்கட் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.

     
    4. USB GUARDIAN :

     
    இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான பைலை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.


    மேலே கூறிய நான்கு மென்பொருட்களும் உங்கள் பென்ட்ரைவை பாதுகாக்க உதவுகின்றன. தரவிறக்கி கொள்ளுங்கள் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

    0 comments:

    Post a Comment