Monday, 2 September 2013

Tagged Under:

இனி காலை 8 டூ இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு பரிசீலனை!

By: Unknown On: 08:19
  • Share The Gag
  • ”பெட்ரோல், டீசல் விற்பனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்று, நகர்ப்புறங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் விற்பனை நிலையங்களை திறந்து வைப்பது. அதாவது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை விற்பனையை நிறுத்தி வைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.”என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

    sep 2 petrol-pump_
     

    இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மிகவும் குறைவு என்பதால், வளைகுடா நாடுகளில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக மத்திய அரசு அதிக அளவில் அன்னிய செலாவணியை பயன்படுத்துகிறது. 

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது உயர்ந்து இருப்பதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து உள்ளதாலும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடும் தொகை மிகவும் அதிகரித்து உள்ளது. 

    பெட்ரோலிய பொருட்களை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விற்க முடியாததன் காரணமாக, 2013–2014–ம் நிதி ஆண்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக உயர்ந்து விடும் என மத்திய அரசு கருதுகிறது.

    இதனால் சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்த வேண்டும் என்றும், மேலும் பெட்ரோல், டீசல், மண்எண்ணெய் ஆகியவற்றின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டும் என்றும் கோரி பெட்ரோலிய துறை மந்திரி வீரப்ப மொய்லி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருக்கிறார். 

    இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஆகும் செலவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பெட்ரோலிய துறை அமைச்சகத்தை மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டு உள்ளார். 

    பெட்ரோல், டீசல் விற்பனையை குறைக்கும் வகையில் சில சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    இதுபற்றி அமைச்சர் வீரப்ப மொய்லி ,”நாம் இப்போது ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருப்பதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாத வகையில் சில சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே சில நாடுகளில் எடுக்கப்பட்டு உள்ளன. 

    பெட்ரோல், டீசல் விற்பனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்று, நகர்ப்புறங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் விற்பனை நிலையங்களை திறந்து வைப்பது. 

    அதாவது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை விற்பனையை நிறுத்தி வைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முறையை அமல்படுத்தும் பட்சத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த யோசனை பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் இதுபற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இந்த சிக்கன நடவடிக்கையின் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு குறைக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.

    பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரி வருகிற 16–ந் தேதி முதல் 6 வாரங்களுக்கு நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. பெட்ரோல், டீசலின் பயன்பாட்டை 3 சதவீதம் குறைக்கும் பட்சத்தில் ரூ.16 ஆயிரம் கோடி சேமிக்க முடியும் என்று கருதுகிறோம்.இவ்வாறு மத்திய மந்திரி வீரப்ப மொய்லி கூறினார். 

    இரவில் பெட்ரோல் விற்பனை நிலையங்களை மூடும் யோசனைக்கு பாரதீய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுபற்றி அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறுகையில்; பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறந்து இருப்பது மிகவும் அவசியம் என்று கூறிய அவர், காலை நேரத்தில் விற்பனை நிலையங்கள் மூடி இருந்தால் மக்கள் தங்கள் வாகனங்களுக்கு எப்படி பெட்ரோல், டீசல் நிரப்புவார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார். 

    0 comments:

    Post a Comment