Tuesday, 3 September 2013

Tagged Under: ,

பிரசவ தழும்புகள் மறையனுமா?

By: Unknown On: 18:31
  • Share The Gag

  •  

                       பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் இந்த தழும்புகள் வரும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும்.

    இந்த மாதிரியான தழும்புகள் நமது உடலின் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதால், அதனை போக்குவதற்கு கடைகளில் பல க்ரீம்கள், ஆயின்மெண்ட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. என்ன தான் விலை உயர்வான அந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும், அது முற்றிலும் அந்த தழும்புகளை போக்காமல், சில சமயங்களில் அவை சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, வேறு வித சரும பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன.

    எனவே அத்தகைய பிரச்சனைகள் எதுவும் வராமல் எளிதில் தழும்புகளைப் போக்க, ஒரு சில இயற்கை பொருட்கள் வீட்டிலேயே இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால், சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல், தழும்புகளை போக்கலாம்.

    கற்றாழையின் ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தடவினால், ஸ்ட்ரெட்ச் மார்க்கின் நிறம் மங்கி, சருமம் அழகாகும். ஏனெனில் அதில் உள்ள வேதிப் பொருட்கள், பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்கி, சருமத்தை ஈரப்பசையுடன் ஆரோக்கியமாக வைக்கிறது.

    லாவெண்டர் ஆயில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்க சிறந்த பொருளாக உள்ளது. அதிலும் இதனை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தினமும் மூன்று முறை தடவி மசாஜ் செய்து வந்தால், புதிய செல்கள் உருவாகி, ஸ்ட்ரெட்ச் மார்க்கை மறைய வைக்கும்.

    ஆப்ரிக்காட் பழத்தை வைத்து தழும்பு உள்ள இடத்தில் ஸ்கரப் செய்தால், அது அங்குள்ள சருமத் துளைகளை விரிவடையச் செய்து, அதில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பாதிக்கப்பட்ட செல்களை கண்டுபிடித்து, அதன் நிறத்தை மங்க வைத்து, நாளடைவில் படிப்படியாக தழும்புகளை மறைய வைத்துவிடும்.

    அவோகேடோ, பாதாம் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்தி வந்தால் நாளடைவில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கிவிடும். அதிலும் இந்த எண்ணெய்களை லாவெண்டருடன் சேர்த்து தடவி மசாஜ் செய்தால், மறுமுறை அந்த ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுக்கும்.
    பிரசவத்திற்குப் பின் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுப்பதற்கு கொக்கோ பட்டர் சிறந்ததாக இருக்கும். அதிலும் இதனை கர்ப்பமாக இருக்கும் போதே தடவி மசாஜ் செய்து வந்தால், திசுக்கள் பாதிப்படையாமல், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுககலாம். அதையே மார்க்குகள் வந்த பின்பு செய்தால், அந்த தழும்புகளை மறைய வைக்கலாம்.


    0 comments:

    Post a Comment