Wednesday, 25 September 2013

Tagged Under:

நான் படித்த கல்லூரி !- ‘பாண்டிய நாடு’ விஷாலின் மலரும் நினைவுகள்!

By: Unknown On: 18:25
  • Share The Gag

  • நடிகர் விஷால் தன் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடிக்கும் படம் “பாண்டிய நாடு”. இப்படத்தின் “ஒத்தகடை ஒத்தகடை மச்சான்” என்கிற ஒரு பாடல் லயோலா பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது.அந்த விழாவில் விஷால் பேசும் போது,” நான் இந்த விழாவில் தமிழில் தான் பேசப் போகிறேன். எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகப் பேச வராது. இந்த கல்லூரி விழாவில் இந்த பாடல் வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். இங்கு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களின் பங்களிப்பைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். எனக்கு மேடையில் நடமாடுவது என்றால் பயம். ஒரு சமயம் நான் இங்கு மேடை ஏறிய போது கரண்ட் கட் ஆகி லைட் அணைந்து விட்டது. அது நான் வேண்டுமென்று செய்தது போல் பேசினார்கள். இன்று லைட் அணைந்தால் நான் பொறுப்பில்லை.



    இந்த லயோலா பொறியியல் கல்லூரியில் முதல் ஆண்டு வகுப்புகளுக்கு கட் அடித்தேன். அதன் பிறகு கல்லூரியே என்னை மாற்றி விட்டது. இந்தக் கல்லூரியில் வெறும் பாடத்திட்டம் மட்டும் சொல்லி தருவதில்லை. வாழ்க்கையையும் சொல்லித் தருவார்கள். இங்கு வந்து விட்டால் நாம் மாறிவிடுவோம். அப்படி ஒரு தூண்டுதலும் ஊக்கமும் கிடைத்து விடும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனக்கு சோர்வோ சலிப்போ ஏற்படும் போது இந்தக் கல்லூரிக்குள் வந்து அங்குமிங்கும் சுற்றுவேன். சிறிது நேரம் அமர்ந்திருப்பேன். யாருக்கும் தெரியாது அப்படி இங்கு வந்து விட்டு போனாலே போதும் எனக்குள் அப்படி ஒரு சக்தியும் உற்சாகமும் வந்து விடும். அப்படி ஒரு தூண்டுதலை இங்குள்ள சூழ்நிலை கொடுத்து விடும்.



    ஏதோ வந்தோம் படித்தோம் என்று இல்லாமல் நாம் யார் நம் லட்சியம் எது நம் பாதை பயணம் என்ன என்பது இங்கு வந்ததும் தெளிவாகப் புரிந்து விடும். இங்கு கற்றுக் கொண்ட சின்ன சின்ன விஷயங்களை வைத்துதான் வாழ்க்கையையே ஓட்டுகிறேன்.இங்கு வந்த பிறகு தான் நான் உதவி இயக்குனராக சேர்ந்து இயக்குனர் ஆவது என்று முடிவெடுத்து விட்டேன். இங்கு படித்த போது நூலகத்திற்கு ஓரிரு முறைதான் போயிருப்பேன். இன்று ஒரு விருந்தினராக உள்ளே நுழைந்தது பெருமையாக இருக்கிறது.”என்று விஷால் பேசினார்.




    0 comments:

    Post a Comment