Saturday, 21 September 2013

Tagged Under:

‘யா யா’ - விமர்சனம்!

By: Unknown On: 12:08
  • Share The Gag


  • சிவா & சந்தானம் ஜோடி சேர்ந்திருக்கிற படம். வழக்கமாகவே சிவா படத்தில் மருந்துக்குக்கூட கதையோ, லாஜிக்கோ, சென்டிமென்ட் விஷயங்களோ எதுவும் இருக்காது. அதைப் போல இந்த படத்திலும் மேலே சொன்ன எதுவும் இல்லை.


    சந்தானம் படங்களில் கதையை விட சந்தானம் காமெடி என்ற பெயரில் பேசுகிற வசனங்கள்தான் காதை ரணமாக்கும். இதிலும் சந்தானம் பேச்சுக்கு குறைவில்லை.


    சிவாவுக்கு ஜோடி தன்ஷிகா. சந்தானம் ஜோடி காதல் சந்தியா, கூடவே இளவரசு, ரேகா, சித்ராலட்சுமணன் நடித்திருக்கிறார்கள். டாக்டர் சீனிவாசன் தனி ஆவர்த்தனம் பண்ணுகிறார். அவருக்கு ஜோடி தேவதர்ஷினி.
    எல்லாம் சரி கதைன்னு எதையாவது சொல்ல முடியாதா… அப்படீன்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது…

    Ya Ya Movie New Stills... glintcinemas.com

     


    சிவாவுக்கு வேலை வெட்டி எதுவும் இல்லை. அப்படியே வேலைக்கு போனாலும் அரசாங்க வேலைக்குத்தான் போவேன்னு அடம் புடிக்கும் கேரக்டர். சிவா அப்பா இளவரசு கட்சியில வட்டசெயலாளர் அதை பயன்படுத்தி சிவாவுக்கு வேலை வாங்கித் தர முயற்சிக்கிறார். அதுக்காக பெண் கவுன்சிலரை பார்க்கப்போகும் சிவா மீது அந்த கவுன்சிலருக்கு காதல் பிறக்கிறது.


    அப்படி வேலைக்கு போகும் வழியில் பஸ்சில் தன்ஷிகாவை பார்க்கிற சிவாவுக்கு அவள் மீது காதல் ஏற்படுகிறது. காதலுக்காக பல தகிடுதத்தங்கள் செய்கிறார். 


    தன்னை விட்டு விட்டு தன்ஷிகாவை காதலிக்கும் சிவாவிடம் இருந்து தன்ஷிகாவை பிரிக்க பெண் கவுன்சிலர் திட்டமிடுகிறார். இதற்காக சிவாவின் நண்பன் சந்தானத்தை பணம் கொடுத்து கவுன்சிலர் விலைக்கு வாங்குகிறார். பணத்தை வாங்கிக் கொண்டு நண்பன் சிவாவின் காதலை பிரிக்க சதி செய்கிறார் சந்தானம்.


    ஒரு கட்டத்தில் சந்தானம் எல்லா உண்மைகளையும் சிவாவிடம் சொல்லிவிட அது பெண் கவுன்சிலருக்கு தெரிவருகிறது. தன்ஷிகாவை கடத்த திட்டமிடுகிறார். அதேபோல, தன்ஷிகாவால் பாதிக்கப்பட்ட சீனிவாசனும் தன்ஷிகாவை கடத்த திட்டமிடுகிறார்.


    இதற்கிடையில், காதல் சந்தியாவுக்கும் சந்தானத்துக்கும் திடீரென கல்யாண ஏற்பாடு நடக்கிறது. கல்யாண மண்டபத்தில் பெண்ணை கடத்த வரும் சீனிவாசனும், பெண் கவுன்சிலரும் தன்ஷிகாவை பார்க்கிறார்கள்.
    தன்ஷிகா கடத்தப்பட்டாரா? சிவாவின் காதல் கைகூடியதா? சந்தானம் கல்யாணம் நடந்ததா? பவர்ஸ்டார் சீனிவாசன் என்ன ஆனார்? இதற்கெல்லாம் விடை சொல்கிறது கிளைமாக்ஸ்.


    அப்பாடா…. இந்த படத்தோட இயக்குனர் கூட இவ்ளோ தூரம் யோசிச்சி கதை எழுதியிருக்க மாட்டார்னு நெனைக்கிறேன்… அந்தளவுக்கு யா யா கதையை சொல்லிட்டேன்…


    இனிமே தமிழ் சினிமான்னா கதையிருக்காது… ஒரே ரூமுக்குள்ளயே படம் புடிச்சிக்குவாங்க… காமெடின்னு இஷ்டத்துக்கு எதையாவது பேசிகிட்டே இருப்பாங்க… கண்ண மூடினா பாட்டு பாடுவாங்க… பவர்ஸ்டார் சீனிவாசனுக்கெல்லாம் ஜோடி போட்டு டூய்ட் ஆட வைப்பாங்க… ஆக்ஷன் பிளாக் வைப்பாங்க…


    இயக்குனர் ராஜேஷிடம் உதவியாளராக இருந்து இயக்குனராக மாறியிருக்கிற ராஜசேகரன் இந்த படம் மூலமா இயக்குனராகியிருக்கிறார். விஜய் எபினேசர் இசையமைத்திருக்கிறார். பல இடங்களில் பழைய பாடல்களையும், ஏற்கனவே ஹிட் ஆன பாடல்களையும் போட்டு பேலன்ஸ் பண்ணியிருக்காரு. எம்எஸ் முருகராஜ் தயாரிப்பில் வெளிவந்திருக்கிற ‘யா யா’ படத்தோட பேர் போலவே யாருக்கும் புரியாது…

    0 comments:

    Post a Comment