Saturday, 7 September 2013

Tagged Under:

இனி வருமான வரி வங்கிகளில் செலுத்தலாம்!

By: Unknown On: 11:56
  • Share The Gag
  • கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க வங்கிகளில் வருமான வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.பெரும்பாலான வங்கிகள் இணையதளம் மூலமாகவும் வரி செலுத்தும் வசதிகளை அளிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.


    sep 7 -income-tax-department


    இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜெ.சதக்கத்துல்லாஹ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”செப்டம்பர் மாத கடைசியில், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள தரமதிப்பீடு உடைய வங்கிகளில் வருமான வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


    அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மஹாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சின்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, விஜயா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டீ.பி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி ஆகிய வங்கிகளில் செலுத்தலாம்.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    0 comments:

    Post a Comment