Thursday, 12 September 2013

Tagged Under: ,

இளவயசு மாதவிலக்கு – சில விளக்கங்கள்!

By: Unknown On: 17:45
  • Share The Gag


  • பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் மாதவிலக்கையும் அதன் இறுதிக்கட்டமான மெனோபாஸையும் சந்தித்தே தீர வேண்டும். மாதவிலக்கு நிற்க சராசரி வயது 52. இதற்கு மேல் நிற்காவிட்டால் அசாதாரணம். அதே மாதிரி 40 வயதுக்குள்ளேயே மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல. இளவயது மெனோபாஸூக்கான காரணங்கள், சிகிச்சைகள், பற்றி ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது அவசியம்.


    “ஒரு பெண் அம்மாவோட வயித்துல உருவாகிறப்பவே, அதோட சினைப்பைல இத்தனை மில்லியன் முட்டைகள் இருக்கணுங்கிறது தீர்மானிக்கப்படும். அந்தக்குழந்தை வயதுக்கு வர்றப்ப லட்சக்கணக்குல உள்ள அந்த முட்டைகள், மாதவிலக்கு மூலமா மாசா மாசம் வெளியேறி குறைஞ்சுகிட்டே வரும். பிரசவத்தின் போது இன்னும் குறையும். இப்படி குறைஞ்சிக்கிட்டே வந்து, ஒரு கட்டத்துல முழுக்க முட்டைகளே இல்லாம போகிறப்ப மாதவிலக்கு வராது. அதை தான் மெனோபாஸ்னு சொல்கிறோம்.


    sep 12 - lady various

     


    சிலருக்கு சராசரியை விட சீக்கிரமே, அதாவது 40 வயசுக்குள்ளேயே மெனோபாஸ் வரலாம். பரம்பரைத் தன்மை புற்றுநோய்க்காக எடுத்துக்கிற கீமோதெரபியோட விளைவுனு இளவயசு மெனோபாஸூக்கான காரணங்கள் பல இருக்கிறது. இவை தவிர ப்ரீ மெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் பிரச்சனையாலையும் சீக்கிரமே மெனோபாஸ் வரலாம். அதாவது சினைப்பைல சுரக்கிற ஹாமோனுக்கு மூளையிலேர்ந்து சிக்னல் கிடைக்காவிட்டால், 25 வயசுல கூட மெனோபாஸ் வரலாம். 


    மாதவிலக்கு சுழற்சி சரியா இருக்கிறவங்களுக்கு (20 முதல் 25 நாட்கள்) மெனோபாஸ் சீக்கிரமே வரும் 2, 3 மாதத்துக்கு ஒரு முறை வர்றவங்களுக்கு மாதவிலக்கு மூலமா இழக்கப்படற முட்டைகள் குறையறதால, மெனோபாஸூம் லேட் ஆகும். சீக்கிரமே வயசுக்கு வர்றவங்களுக்கு மெனோபாஸ் சீக்கிரமாகவும், வயசு கடந்து வாற்வங்களுக்கு அது தாமதமாகவும் வரும். 50வயசுல மெனோபாஸ் வர்றவங்களுக்கு சரியான கவனிப்பு அவசியம். 


    அப்படியிருக்கிறப்ப இளவயசு மாதவிலக்கு நிற்கும் போது கூடுதல் அக்கறை அவசியம். ஈஸ்ரோஜென் ஹார்மோன் இல்லாம, எலும்புகள் பாதிக்கப்படும். கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்க வேண்டியிருக்கும். பால், தயிர்னு உணவு மூலமா கிடைக்கிற கால்சியம் மட்டும் போதாது. வைட்டமின் கூட கால்சியமும் சேர்த்து எடுத்துக்கணும். இல்லாட்டி எலும்புகள் பஞ்சு மாதிரி மாறி ஆஸ்டியோபொரோசிஸ் வரும். மெனோபாஸ்ல இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படுங்கிறதால அதுக்கான பரிசோதனையும் அவசியம். இளவயசு மெனோபாஸை ஏதோ முறை தவறின மாதவிலக்குன்னு தப்பாக நினைத்து அலட்சியப்படுத்தாம சரியான நேரத்துல மருத்துவ பரிசோதனையும் அவசியம்” என வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

    0 comments:

    Post a Comment