Sunday, 1 September 2013

Tagged Under:

ESI கழகத்தில் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் பணி!

By: Unknown On: 21:26
  • Share The Gag
  • மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ESI -ல் காலியாக உள்ள இந்தி மொழி பெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பணி: Junior Hindi Translator

    காலியிடங்கள்: 62

    sep 1 - vazhikatti esi

     


    சம்பளம்: ரூ.9,300 – 34,800

    வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும்.

    கல்வித்தகுதி: இளங்கலை பட்டத்துடன் இந்தி அல்லது ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட ஏதாவதொரு பட்டப் படிப்பை முடித்து இந்தி அல்லது ஆங்கிலம் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ESI Fund Account No.1, New Delhi என்ற பெயரில் டி.டி.யாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.


    விண்ணப்பிக்கும் முறை: 


    தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.esic.nic.in/recruitment.php என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும். அல்லது வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Joint Director(Recruitment), E.S.I. Corporation, Panchdeep Bhawan, C.I.G.Marg. New Delhi -110002.

    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2013

    0 comments:

    Post a Comment