Thursday, 24 October 2013

Tagged Under:

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும் - 02..!

By: Unknown On: 16:55
  • Share The Gag
  •  

    பல 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகம் ஒரே நிலப்பகுதியாக இருந்திருக்கிறது அப்படி இருந்த அந்த உலகத்திற்கு வரலாற்று ஆசிரியர்கள் இட்ட பெயர் PANGAEA(which means"all lands"). சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு PANGAEA உலகம் இரண்டாக பிரிந்ததில் தெற்கில் கோண்ட்வானா, வடக்கில் LAURASIA என்ற இரு பெரிய கண்டங்கள் உருவாயின. இந்த பிரிதல் நடைபெற்றது உலகில் ஜுராசிக் உயிரினங்களின் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது. இந்த நிகழ்வை ஆங்கிலத்தில் CONTINENTAL DRIFT என்றளைக்கின்றனர்.


     


     கோண்ட்வானா என்பது இந்தியாவில் உள்ள ஒரு ஊரின் பெயர் (எந்த மாநிலம் என தெரியவில்லை தெரிந்தவர்கள் கமெண்ட் இல் சொல்லுங்கள்) உலகில் முதன் முதலில் அந்த ஊரில் தான் கோண்ட்வானா கண்டத்தின் படிமங்கள் கண்டறியப்பட்டன. எனவே அந்த ஊரின் பெயரையே கண்டதுக்கும் சூட்டிவிட்டனர். கோண்ட்வானா கண்டத்தில் அண்டார்டிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஆப்ரிக்கா, மடகஸ்கார், ஆஸ்திரேலியா இணைந்திருந்தன.


     


    கோண்ட்வானா கண்டத்தில் இருந்து பிரிந்து வந்தது தான் நமது இந்தியா. ஆப்ரிக்காவிலிருந்து இந்தியா பிரியும் பொழுது கூடவே மடகஸ்கார் பிரிந்தது (இந்த நிகழ்வை சுட்டிக்காட்டும் அனிமேஷன் படத்தை மேலே காணலாம்).

     TETHYS கடலில் இந்தியா வடக்கு நோக்கி நகர்ந்து ஆசியாவுடன் இணைந்தது. இந்த மோதலில் ஆசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இமயமலை கிளர்ந்து எழுந்தது. இன்று இமயமலை இருக்கும் இடத்தில அன்று இருந்தது TETHYS கடல் தான். இன்றும் இமயமலையில் கடல் வாழ் உயிரினங்களின் எச்சங்களை  கண்டறிந்த வண்ணமே உள்ளனர். இந்தியா  கோண்ட்வானாவில் பிரிந்து ஆசியாவுடன் இணைந்தது சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு.


     ஆனால் விந்திய மலை தொடரும் தமிழக, கர்நாடக, ஆந்திர நிலப்பகுதிகள் 30 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளன. வடஇந்தியா மட்டுமே கோண்ட்வானாவில் இருந்து பிரிந்து வந்து தென்இந்தியாவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் இணைந்தது என்று கூறும் வரலாற்று ஆசிரியர்களும் உண்டு.



     

    அமெரிக்கா கண்டத்தை பொறுத்த வரை தென்அமெரிக்கா மட்டும் கோண்ட்வானா கண்டதுடன் இருந்தது. கிழக்கு கோண்ட்வானா பகுதியில் இருந்த அண்டார்டிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, மடகஸ்கார் போன்ற பகுதிகள் ஆப்ரிக்காவிலிருந்து பிரிந்தது. தென்அமெரிக்கா ஆப்ரிக்காவிலிருந்து பிரிந்து வட அமெரிக்காவுடன் இணைந்து தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் உருவாகியது. பின்பு ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்து அண்டார்டிக்காவில் இருந்து  பிரிந்தது.


    MESOSAURUS 
    LYSTROSAURUS 
     

    CYNOGNATHUS 

    கோண்ட்வான கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் உயிரினங்கள்


     

        மனிதன் உலகெங்கும் பரவ கடவுள் செய்த வழி என்று கூட இதை சொல்லலாம். அன்று கண்டங்கள் அனைத்தும் பல இடங்களில் இணைந்திருந்தன. உலகின் வடக்கில் ஐஸ் இருந்ததால் மனிதனால் வட அமெரிக்காவிலிருந்து ஆசியா வரை நடந்தே செல்ல முடிந்தது. மனிதன் பயணத்தை ஆரம்பித்து உலகம் முழுவதும் பரவி முடிக்கவே ஒரு லட்சம் ஆண்டுகள் ஆயின.

                     60,00 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவை அடைந்த மனிதர்களில் ஒரு பிரிவினர் சீனாவை நோக்கி சென்றனர் இன்னோர் பிரிவினர் இந்தியாவுக்குள் வந்தனர்.

    நியாண்டர்தால் இன மக்களும் அதற்கு முந்தய இனமான  homoerectus என்ற இனமும் இந்தியாவில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. நியாண்டர்தால் இனமக்களும் வேறு சில இன மக்களும் பயன்படுத்திய ஆயுதங்கள் சென்னைக்கு அருகில் அந்தரம்பாக்கம், கர்நாடகத்தின் சில பகுதிகளில் கிடைத்துள்ளன. நவீன இன மக்களின் வருகைக்கு பின்பு அந்த இனங்கள் அழிந்திருக்கலாம் அல்லது நாமே அளித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


     

    இந்தியாவில் ஆரம்பித்த மனிதனின் பயணம் இலங்கை வரை போக 20,000 ஆண்டுகள் பிடித்தன. அது வரை இலங்கை இந்தியாவுடன் தான் இணைந்திருந்தது. 30 கிலோ மீட்டர் நீளமுள்ள (adam's bridge) ஆதாம் பாலம் இந்தியாவையும் இலங்கையையும் இணைத்து இருந்துள்ளது. சமீபத்தில் நாசாவின் சாட்டிலைட் புகைப்படமே கூட இதை உறுதி செய்துள்ளது.


    மனிதன் இந்தியாவிற்கு வருவதற்கு 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலும் டைனோசர் நடமாடியிருக்கின்றன . டைனோசர் இருந்த பொழுதே ராட்சச பறவை இனங்களும் இந்தியாவில் இருந்துள்ளன ஒரு விமானம் அளவுக்கு உருவம் உள்ள பறவை இனங்கள் கூட இருந்துள்ளன. மேலும் 17 வகையான யானை வகைகள் இருந்திருக்கின்றன. ஆனால் அதில் இபொழுது இருப்பது வெறும் 2 வகையே ஒன்று இந்திய யானை மற்றொன்று ஆப்ரிக்கா யானை.




     


     


    இந்தியாவில் பருவநிலை மாற்றங்கள் சீராக சுமார் 20 லட்சம் ஆண்டுகளாக மாறாமல் நடை பெற்றுகொண்டிருக்கிறது.

    நெடிய பயணத்தை முடித்த மனிதர்கள் ஒரு இடத்தில் நிலையாக வசிக்க ஆரம்பித்தனர். உடன் நாகரிகம் தோன்ற ஆரம்பித்தன.
    மனித நாகரிகம் முதலில் எங்கு தோன்ற ஆரம்பித்தது அடுத்த பதிவில் பார்ப்போம்.

    0 comments:

    Post a Comment