Monday, 28 October 2013

Tagged Under:

2014 உலக கோப்பை டி20 முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா , பாகிஸ்தான் மோதல்!

By: Unknown On: 07:13
  • Share The Gag

  •  வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 10 சுற்று தொடக்க லீக் ஆட்டத்தில், இந்தியா , பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.


     2012, அக். 8ம் தேதி வரையிலான உலக டி20 தரவரிசையில் முதல் 8 இடத்தை பிடித்த அணிகள், சூப்பர் 10 சுற்றில் நேரடியாக இடம் பெற்றுள்ளன. மீதம் உள்ள 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டியில் (மார்ச் 16,21) மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. இதில் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளும் அடங்கும்.


    இரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறும். மார்ச் 21ம் தேதி மாலை நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா , பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.


    இறுதிப் போட்டி ஏப். 6ம் தேதி நடக்க உள்ளது. எல்லா போட்டிகளும் சிட்டகாங், தாக்கா, சைலெட் மைதானங்களில் நடைபெறும். இதே தேதிகளில் மகளிர் டி20 உலக கோப்பையும் நடக்க உள்ளது. அதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. சூப்பர் 10 சுற்றில் (ஆண்கள் பிரிவு) இடம் பெற்றுள்ள அணிகள் : பிரிவு 1: இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, தகுதி அணி பி1. பிரிவு 2: இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தகுதி அணி ஏ1.

    0 comments:

    Post a Comment