Tuesday, 1 October 2013

Tagged Under: , ,

தமிழக் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

By: Unknown On: 16:31
  • Share The Gag

  • சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.தற்போது, elections.tn.gov.in/searchid.htm என்ற இணையதளத்திலும் பெயரை வாக்காளர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம் என்றும இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், மாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம் என்றும், வாக்காளர் அட்டையில் திருத்தப் பணிகளுக்கு அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.


    1 - T N satate
     



    மேலும் இன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்த வரைவு பட்டியலை வெளியிட்டுள்ளனர். வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் பட்டியலை வாக்காளர்கள் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், மாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம் என்றும், வாக்காளர் அட்டையில் திருத்தப் பணிகளுக்கு அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



    வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி அலுவலங்களில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.மேலும்,


     elections.tn.gov.in/searchid.htm 


    என்ற இணையதளத்திலும் பெயரை வாக்காளர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
    வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்க படிவம் 6, வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பெயர் சேர்க்க படிவம் 6 ஏ, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயே மாறியிருந்தால் படிவம் 8 ஏ, பெயரை நீக்க படிவம் 7, பெயர், வயது, பாலினம், உறவு முறை முதலிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெற செய்ய படிவம் 8ல் விண்ணப்பிக்க வேண்டும். படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 



    வெளிநாட்டில் வசிப்போர் வெளிநாட்டில் வசிக்கின்ற இந்திய குடிமக்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6 ஏ நேரில் அளிக்கப்பட வேண்டும். அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம். வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6 ஏ நேரில் அளிக்கப்படும்போது அதனுடன் விண்ணப்பதாரரின் புகைப்படம், பிற விபரங்களுடன் விசாவின் செல்திறன் பற்றிய மேற்குறிப்பு அடங்கிய பாஸ்போர்ட் பக்கங்கள் ஜெராக்ஸ் நகலும் அளிக்கப்பட வேண்டும். வாக்காளர் பதிவு அதிகாரி மூல பாஸ்போர்ட்டினை ஒப்பிட்டு சரிபார்த்து அப்போதே திரும்ப கொடுத்துவிடுவார். படிவம் 6 ஏ தபாலில் அனுப்பும்போது பாஸ்போர்ட் நகல்கள் சுய சான்றொப்பமிடப்பட்டு இணைக்கப்பட வேண்டும் என்று .தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

    0 comments:

    Post a Comment