Wednesday, 16 October 2013

Tagged Under: ,

கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடத் தோன்றும் உணவுகள்!

By: Unknown On: 20:18
  • Share The Gag
  • 545_full

    கர்ப்பமாக இருக்கும் போது ஒருசில உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கும். அதில் அனைவருக்கும் தெரிந்தது, மாங்காய், சாம்பல் போன்றவை தான். ஆனால் அதுமட்டுமின்றி, இன்னும் நிறைய உணவுப் பொருட்களின் மீது கர்ப்பிணிகளுக்கு ஆசையானது அதிகரிக்கும். மேலும் அக்காலத்தில் எல்லாம் கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஆசைப்படும் உணவுப்பொருட்களை எல்லாம் சாப்பிட வாங்கிக் கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக பிறக்கும் என்று சொல்வார்கள்.

    ஏனெனில் அவ்வாறு கர்ப்பிணிகளுக்கு சாப்பிட வேண்டுமென்று தோன்றும் உணவுப்பொருட்கள் அனைத்தும் மிகவும் ஆரோக்கியத்தைத் தரக்கூடியவை. ஆனால் அந்த உணவுப்பொருட்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆபத்து ஏற்படும்.

    மாங்காய்

    மாங்காயிலும் புளிப்புச் சுவை இருப்பதால் தான், கர்ப்பிணிகளுக்கு முதலில் மாங்காய் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறது.

    சோடா

    காலையில் சோர்வு, மயக்கம் போன்றவற்றை அதிகம் உணர்ந்தால், அப்போது கார்போனேட்டட் பானங்களை குடித்தால் சரியாகிவிடும். ஏனெனில் கார்போனேட்டட் பானங்கள் வயிற்று பிரட்டலை சரிசெய்து விடுவதால், இதனை அளவாக குடிப்பது நல்லது. அதிலும் ஸ்ப்ரைட் போன்றவற்றை குடிப்பது தான் சிறந்தது. குறிப்பாக காப்ஃபைன் கலந்த சோடாவான கோலா, தம்ஸ் அப் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    காபி

    சில பெண்களுக்கு காபி குடிக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். ஏனெனில் காபியில் உள்ள காப்ஃபைன் தலைவலி, மன இறுக்கம் போன்றவற்றை குறைப்பதால், இதனை அளவாக குடித்து வருவது நல்லது.

    ஐஸ் க்ரீம்

    ஐஸ் க்ரீம் கூட சாக்லெட் போன்று உடலை குளிர்ச்சியடைய செய்வதோடு, சுவையுடன் இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு இதை சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறது.

    எலுமிச்சை

    எலுமிச்சையின் மீது கர்ப்பிணிகளுக்கு நாட்டம் எழ, அதில் உள்ள புளிப்புச் சுவை தான். ஏற்கனவே சொன்னது போல், புளிப்புச்சுவையானது குமட்டலை தடுக்கக்கூடிய சக்தி கொண்டவை.

    உருளைக்கிழங்கு சிப்ஸ்

    சிலருக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் மீது விருப்பம் அதிகம் இருக்கும். ஏனெனில் இதில் சோடியம் அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட வேண்டுமென்ற எண்ணம் எழும். அதே சமயம் இதில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இதனை தவிர்த்து பாப்-கார்ன் சாப்பிடுவது நல்லது.

    ஊறுகாய்

    கர்ப்பமாக இருக்கும் போது ஊறுகாயை பார்த்தால் என்ன நினைத்தாலே, ஆசை அதிகரிக்கும். இவ்வாறு ஊறுகாயின் மீது நாட்டம் எழுவதற்கு காரணம், அதில் உள்ள புளிப்புச் சுவை தான். ஏனெனில் இந்த புளிப்புச் சுவை குமட்டலை தடுக்கும். அதுமட்டுமின்றி, உடலில் சோடியம் குறைவாக இருந்தாலும், ஊறுகாயின் மீது நாட்டம் அதிரிக்கும்.

    காரமான உணவுகள்

    சிலருக்கு காரமான உணவுகளின் மீது விருப்பம் அதிகம் இருக்கும். ஏனெனில் காரமான உணவுகள் வியர்வையை அதிகரித்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் என்பதால் தான். ஆகவே அடுத்த முறை உணவு உட்கொள்ளும் போது, சற்று காரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்காக அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொள்ளாதீர்கள். அது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    ஐஸ் கட்டிகள்

    கர்ப்பிணிகளுக்கு ஐஸ் கட்டியை சாப்பிட வேண்டுமென்ற ஆசை அதிகம் எழும். ஏனெனில் ஐஸ் கட்டியானது உடலில் ஏற்படும் பிடிப்புக்களை சரிசெய்வதால், கர்ப்பிணிகளுக்கு இதை சாப்பிட ஆவல் எழுகிறது. குறிப்பாக அதிகப்படியான குளிர்ச்சியானது வளரும் சிசுவிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

    சாக்லெட்

    சில கர்ப்பிணிகளுக்கு சாக்லெட் சாப்பிட பிடிக்கும். பொதுவாக கர்ப்பத்தின் போது சாக்லெட் சாப்பிடுவது நல்லது. இத்தகைய உணர்வு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், சாக்லெட் மனதை அமைதிப்படுத்தி, சந்தோஷமாக இருக்க உதவி புரிவதால் தான். மேலும் அக்காலத்தில் இனிப்புக்களை அதிகம் சாப்பிட தோன்றினால், வயிற்றில் பெண் குழந்தை உள்ளது என்று அர்த்தம் என்று சொல்வார்கள்.

    0 comments:

    Post a Comment