Sunday, 6 October 2013

Tagged Under:

பேஸ்புக் மூலம் தன் பட விநியோகத்தை விரிவுபடுத்தும் சேரன்!

By: Unknown On: 13:08
  • Share The Gag

  • இப்போதெல்லாம் பேஸ்புக் மூலம் எதையும் செய்யலாம் என்றாகி விட்டது. அந்த வகையில் புதிய சினிமா தயாரிபாவ்ர்கள் பலரும் தங்கள் பட டைட்டிலில் ஒரு பேஜ் ஆரம்பித்து பப்ளிசிட்டி பண்ணுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான சேரன் தன சொந்த படமான் ‘ ஜேகே’திரைப்படத்தை பேஸ்புக் உதவியுடன் உலகின் பல நாடுகளில் விநியோகம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்

    .
    6 - JK-Enum-Nanbanin-Vaazhkai.j


    இது குறித்து சேரன் தன பேஸ்புக் பக்கத்தில்,


    ஜே.கே படத்தின் வெளிநாடுகளில் வெளியிடும் முயற்சியில் இருக்கிறேன்.. தமிழர்களும் தமிழ் உறவுகளும் உலகம் முழுக்க பரவி கிடக்கிறது… எங்கெல்லாம் திரையிட முடியும் என்றும் யார் யார் இதற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள் என்றும் விவரங்கள் சேகரிக்கிறேன்… 


    தாங்கள் வாழும் நாடுகளில் இடங்களில் என்னுடைய படத்தை திரையிட விருப்பமுள்ள நண்பர்கள் எனக்கு தொடர்பு கொள்ளலாம்…

     இது வியாபாரமே… அதற்கான தொகையையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்… 


    சில நாடுகளில் மட்டுமே இப்போது திரையிடப்படுகிறது…. 


    இம்முயற்சியில் புதியவர்களையும் எதிர்பார்க்கிறேன்… 


    படம் தீபாவளி கழித்து இரண்டு வாரங்களில் திரைக்கு வரும்…


    இதை படிக்கும் நண்பர்கள் மற்றவர்களும் உங்கள் நண்பர்களும் படிக்க இந்த செய்தியை பகிரவும்…… நன்றி…”


     என்று தெரிவித்துள்ளார்.

    0 comments:

    Post a Comment