Monday, 21 October 2013

Tagged Under:

உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா?

By: Unknown On: 17:14
  • Share The Gag

  • ரத்ததானம் செய்பவரின் ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும். 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ரத்ததானம் செய்யலாம். ரத்ததானம் செய்பவர்களின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும்.


    சாதாரண மனிதனின் உடலில் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்ததானத்தின்போது 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படும். நாம் தானம் செய்யும் ரத்தம், 24 மணி நேரத்தில் மீண்டும் உற்பத்தியாகிவிடும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம். ரத்த தானம் செய்ய 20 நிமிடங்கள் போதும். ரத்த தானம் செய்தவுடன் வழக்கம்போல் அன்றாட வேலைகளில் ஈடுபடலாம்.


    சர்க்கரை நோய், பல்வேறு நோய் தடுப்பூசிகள் போட்டிருப்பவர்கள், ஹார்மோன் தொடர்பான மருந்துகள், போதை மருந்து உட்கொண்டவர்கள் ரத்ததானம் செய்யக் கூடாது. மலேரியா, டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் மூன்று மாதத்திற்குப் பின்புதான் ரத்ததானம் செய்ய வேண்டும்.



    மது அருந்துவிட்டு ரத்ததானம் செய்யக்கூடாது. பெண்கள் மாதவிடாய் காலம், கருவுற்றிருக்கும் போது, குழந்தைக்கு தாய்ப்பால் தரும்போதும் ரத்ததானம் செய்யக் கூடாது. எச்ஐவி பாதித்தவர்கள் ரத்ததானம் செய்யக்கூடாது. அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஆறு மாதங்களுக்கு ரத்ததானம் செய்யக்கூடாது.
    ரத்த தானாம் செய்வதால் மாரடைப்பு தவிர்க்கப்படும். புதிய ரத்த அணுக்கள் உருவாகும். ரத்த தானம் செய்தால் ஒருவரது உடலில் சுமார் 500 கலோரிக்கும் மேல் செலவிடப்படும்.

    0 comments:

    Post a Comment