Saturday, 19 October 2013

Tagged Under:

நுரையீரல் புற்று நோய் : டீடெய்ல் ரிப்போர்ட்!

By: Unknown On: 12:53
  • Share The Gag
  • நாய் நன்றியுள்ள பிராணி, செல்ல பிராணி, மோப்பம் பிடிக்கும், குற்றவாளிகளை அடையாளம் காட்டும், வேலை செய்யும், வீட்டை காக்கும் இப்படிதான் சொல்கின்றனர். ஆனால், மனிதர்களின் மூச்சுக்காற்றை வைத்து நுரையீரல் புற்றுநோயை கூட கண்டுபிடித்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும?


    நாய்களை வைத்து ஜெர்மனியில் உள்ள சில்லர்ஹோகி மருத்துவமனை விஞ்ஞானிகள் பல ஆண்டாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மனிதர்களை பாதிக்கும் நோய்களை மருத்துவக் கருவிகள் மூலம் கண்டறிவது போல், நாய்கள் மூலம் நோய் பாதிப்பை கண்டறிய முடியுமா என்பது குறித்து ஆராய்ந்த போது மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத வாசனையை கூட மோப்ப ஆற்றலால் நாய்கள் கண்டுபிடிக்கின்றன. சரியான பயிற்சி அளித்தால் மனிதர்களின் நோய் பாதிப்பை கூட ஆரம்பத்திலேயே நாய்கள் கண்டுபிடித்து விடும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.


    18 -Lung-Cancer-Symptoms


     


    குறிப்பாக புற்றுநோயை நாய்கள் துல்லியமாக கண்டுபிடிக்கின்றன. புற்றுநோய் பாதித்த மனிதர்களின் மூச்சுக் காற்றுக்கும், ஆரோக்கியமான மனிதர்களின் மூச்சுக் காற்றுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. புற்றுநோய் பாதித்தவர்களின் மூச்சு காற்றில் உள்ள ரசாயன வாசனையை வைத்து மோப்ப நாய்கள் நோயாளியை கண்டுபிடிக்கின்றன என்று தெரிய வந்தது. 


    இதற்கிடையில் புற்று நோய் வகைகளை நாம் அறிந்து கொள்ளும் முன் நுரையீரலின் அனாடமி எப்படி செயல்படுகிறது போன்றவை பற்றி அறிதல் முக்கியம்.


    நுரையீரல் உடலுக்கு சக்தியை தரும் ஆக்சிஜனை எடுத்துக் கொள்வதிலும் கரியமிலவாயுவை வெளியேற்றுவதிலும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22 ஆயிரம் முறை மூச்சு விடும் நாம், கிட்டத்தட்ட 9 ஆயிரம் முறை காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.


    மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும காற்று, காற்று குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. காற்றுக் குழாய் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரலுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது.


    இரண்டாக பிரியும் பிரான்கியல் குழாய்கள் பல நுண் கிளைகளாக பிரிந்து அல்வியோல் எனப்படும் காற்றுப் பைகளில் முடியும். பல நுண்ணுயிர்க்குழாய்களாக பிரிந்து இருக்கும். அல்வியோலை எனப்படும் காற்றுப் பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டது.


    இதில் பல நுண்ணிய ரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமணி மூலமாக வந்த கரியமிலவாயு நிறைந்த ரத்தத்தில் உள்ள கரியமிலவாயு வெளியேறி, ஆக்சிஜனை ஏற்றுக் கொண்டு, நுரையீரல் சிறைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது.


    பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற திரவம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக் குழாயில் உள்ள சீலியா மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கசை வெளியேற்ற நாம் அறியாமலே அவற்றை விழுங்கி விடுகிறோம்.


    உடல்நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கிலேயே உள்ள ரோமம் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் ஆகியவை நீக்குதலிலும் ஈடுபடும்.


    புற்றுநோய்க்கான புற காரணிகள்:-


    காற்றில் உள்ள தூசு, இயந்திரங்கள் வெளியேற்றும் புகை, சிகரெட் புகை ஆகியவை ஆச்பெச்டாஸ் போன்றவை நுரையீரல் புற்றுநோய் வர முக்கிய காரணிகளாக இருக்கின்றன.


    சில வீடுகளில் புகை நிறைந்த எரிபொருள் சமைக்க பயன்படுத்துவது காற்றினை மாசுபடுத்துகிறது. குளிர் காலத்தில் இதுபோன்ற புகை வீட்டிற்குள்ளேயே சுற்றுவதால் குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கிறது. எனக்கு நினைவு தெரிந்த வரையில் என் வீட்டிலேயே பலவகை எரிபொருட்களை பயன்படுத்தி இருக்கிறோம். (காகிதம், மரத்தூள், விறகு, வரட்டி பின் கெராசின் என்று பல பொருட்களை பயன்படுத்தி இருக்கிறோம்) இன்னும் சில பெண்கள் புகையை ஊதுகுழலை வைத்து ஊதி கண்சிவக்க இருமுவதையும், புகையை உள்ளிழுப்பதையும காணலாம்.



    இதற்கு அடுத்தப்படியாக கட்டிடங்கள் கட்டிய பின்வரும் தூசிகள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை துணுக்கள் என்று பலவும் உடல்நலத்தை பாதிக்கிறது. வீடுகளில் உள்ள காற்றில் கலந்திருக்கும் பொருட்களில் கார்பன் டை ஆக்சைடு, பார்மால்டிஹைட், நைட்ரஜன் பெராக்சைடு, கார்பன் மோனோ ஆக்சைடு, ரேடான் எனப்படும் ரேடியோ கதிர்வீச்சு, பாசி, என்னும் நுண்ணுயிர் கிருமிகளின் முட்டைகள் என்பன சில முக்கியமானவை ஆகும்.


    ஒருவர் புகை பிடிக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் காற்றின் விளைவால் வருடத்திற்கு 1,50,000 குழந்தைகள் முற்றிய நுரையீரல் நோயால் பாதிக்கப்படுவதோடு ஆண்டொன்றுக்கு 3 ஆயிரம் குழந்தைகள் இறக்கிறார்கள்.


    உலகளவில் இது இன்னமும் அதிர்ச்சியூட்டும் எண்களை தரலாம். புகை பிடிப்பவரின் அருகில் இருப்போருக்கு கண் எரிச்சலும், இருமலும் ஏற்படுகிறது. இவர்களையும் மருத்துவ உலகு அழைக்கிறது.


    இதற்கிடையில் நுரையீரல் புற்று நோய்க்கு காற்று மாசுபடுவதே காரணம் என தற்போது உலக சுகாதார மையம் அறிவித்துள்ளதும இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகி விட்டது. அதாவது நுரையீரல் புற்று நோயினால் ஆண்டுக்கு 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்ற தகவல் 2010–ம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. எனவே சர்வதேச புற்று நோய் ஆராய்ச்சி கழகம் இந்த நோய் எதனால் ஏற்படுகிறது. என கண்டறிய சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது.


    அதன் ஆய்வறிக்கை 5 கண்டங்களை சேர்ந்த 1000 நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் பெரும்பாலானவை காற்று மாசுபடுவதே நுரையீல் புற்று நோய் வர காரணம் என தெரிவித்துள்ளது.


    தற்போது தொழிற்சாலைகள் பெருகிவிட்டன. அதில் இருந்து வெளியாகும் ரசாயன நச்சு கழிவுகள் காற்றில் கலக்கின்றன. அவற்றை சுவாசிப்பதன் மூலம் நுரையீரல் புற்று நோய் ஏற்படுகிறது.


    காற்றில் பரவியுள்ள மாசுவே இந்த புற்று நோய் ஏற்பட தூண்டுகோலாக உள்ளது. காற்றின் மாசு நுரையீரலை மட்டுல்ல இருதயத்தையும் பாதித்து அங்கும் பலவித நோய்களை உருவாக்குகிறது.


    தொழிற்சாலைகள் பெருகி வரும் நாடுகளில் நுரையீரல் புற்று நோய் பாதிப்பு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் நுரையீரல் புற்று நோய் ஏற்பட காற்று மாசுபடுவதே காரணம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.புகையிலை மற்றும் அல்ட்ரா நீல கதிர்களாலும் நுரையீரல் புற்று நோய் உருவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    0 comments:

    Post a Comment